பதிவு செய்த நாள்
31 மே2016
18:30
புதுடில்லி : 2016ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உலகின் வேகமான வளர்ச்சி என்று கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய புள்ளியல் அலுவலகம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு வெளியிடுகிறது. அதன்படி 2015-16ம் ஆண்டுக்கான நான்காம் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேளாண் மற்றும் பிறதுறைகளின் உற்பத்தி அதிகரித்தன் காரணமாக வளர்ச்சி அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த வளர்ச்சி 7.6 சதவீதம் : 2015-16ம் ஆண்டின் முதல்காலாண்டில் 7.5 சதவீதமும், இரண்டாம்காலாண்டில் 7.6 சதவீதமும், மூன்றாம் காலாண்டில் 7.2 சதவீதமும் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டியிருந்தது. இதன்மூலம் 2016ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முன்னதாக கடந்தாண்டு(2014-15) பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|