பதிவு செய்த நாள்
24 ஜூன்2016
06:59
புதுடில்லி : இந்தியாவில் முதன் முதலாக இணையதள விற்பனையில் இறங்கிய, ஷாப்க்ளூஸ் நிறுவனம், பிரபல என்.ஒய்.சி., நிறுவன தயாரிப்புகளை விற்பனை செய்ய உள்ளது. உலகளவில், என்.ஒய்.சி., நிறுவனத்தின், ‘டிவி’ உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. இந்த நிலையில், ஷாப்க்ளூஸ் தன் இணையதளம் மூலம், என்.ஒய்.சி., தயாரிப்புகளை, இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ஷாப்க்ளூஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவன இணையதளத்தின் மூலம், என்.ஒய்.சி., தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன. அதன்படி, முதல் கட்டமாக, தற்போது, 32 அங்குல எல்.இ.டி., ‘டிவி’ 10 ஆயிரத்து, 790 ரூபாய் விலையில் விற்கப்படும்; விரைவில் மற்ற பொருட்களும் விற்கப்படும். இதன் மூலம், வாடிக்கையாளருக்கு, குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|