பெட்­ரோ­லுக்கு ஒரே சீரான விலை: அர­சுக்கு ஏ.ஐ.பி.டி.ஏ., கோரிக்கைபெட்­ரோ­லுக்கு ஒரே சீரான விலை: அர­சுக்கு ஏ.ஐ.பி.டி.ஏ., கோரிக்கை ... ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.96 ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.96 ...
உள்­நாட்டில் பருத்தி விலை அதி­க­ரிப்பால் நடப்பு காலாண்டில் நுாற்­பா­லை­களின் லாப வரம்பு குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2016
23:20

மும்பை : ‘உள்­நாட்டில் பருத்தி விலை அதி­க­ரித்­துள்­ளதால், நடப்பு, ஜூலை – செப்., காலாண்டில், நுாற்­பா­லை­களின் லாப வரம்பு குறையும்’ என, ஆய்வு நிறு­வ­ன­மான,‘இக்ரா’ தெரி­வித்­துள்­ளது.
இது தொடர்­பாக, இந்­நி­று­வனம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை விபரம்: கடந்த சில ஆண்­டு­க­ளாக, பருத்தி விலை சரி­வ­டைந்­ததால் பாதிக்­கப்­பட்ட ஏரா­ள­மான விவ­சா­யிகள், மாற்றுப் பயி­ருக்கு மாறினர். இதனால், பருத்தி பயி­ரிடும் பரப்பு குறைந்­தது; பருத்தி உற்­பத்­தியும் சரி­வ­டைந்­தது.
நுாலி­ழைக்­கான தேவை...இதை­ய­டுத்து, இடைத்­த­ர­கர்கள், அதிக அளவில் பருத்­தியை கொள்­முதல் செய்து, இருப்பு வைக்கத் துவங்­கினர். இதன் கார­ண­மாக, உள்­நாட்டில் பருத்­தியின் தேவை அதி­க­ரித்து, அதன் விலை உயர்ந்­துள்­ளது.கடந்த ஏப்­ரலில், 1 கிலோ பருத்தி, 90 – 92 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. இது தற்­போது, 122 ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. சர்­வ­தேச சந்­தையை விட, உள்­நாட்டில் பருத்தி விலை அதி­க­மாக உள்­ளதால், அதன் ஏற்­று­ம­தியும் குறைந்­துள்­ளது.
பருத்தி விலை உயர்வால், அதை சார்ந்­துள்ள நுாற்­பா­லைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றின் மூலப்­பொ­ருட்கள் செல­வினம் அதி­க­ரித்­துள்­ளது. அத்­துடன், உள்­நாட்டில், நுாலி­ழைக்­கான தேவையும் குறைந்­துள்­ளது. இத்­த­கைய இடர்ப்­பாட்­டிற்கு இடை­யிலும், சர்­வ­தேச சந்­தையில், நுாலிழை விலை அதி­க­ரித்­தி­ருப்­பது, நுாற்­பா­லை­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­துள்­ளது.
ஏற்­று­மதி நிறு­வ­னங்­களை பொறுத்­த­வரை, பருத்தி விலை உயர்வால் ஏற்­பட்­டுள்ள பாதிப்பை, நுாலிழை ஏற்­று­ம­தியில் சரி­செய்து கொள்ளும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. உள்­நாட்டு சந்­தையை சார்ந்­துள்ள நிறு­வ­னங்கள், நுாலிழை உற்­பத்­தியை குறைத்து, கையி­ருப்பில் உள்­ள­வற்றை விற்­பனை செய்யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. நுாற்­பா­லைகள், நான்கு அல்­லது ஐந்து மாதங்­க­ளுக்கு தேவை­யான பருத்­தியை கையி­ருப்பில் வைத்­தி­ருப்­பது வழக்கம்.
நிலையான பருத்தி விலைஅதன்­படி, கடந்த மார்ச் மாதம், குறைந்த விலையில் கொள்­முதல் செய்து, இருப்பு வைத்­துள்ள பருத்­தியும், நுாலிழை விலை­யேற்­றமும், நுாற்­பா­லை­க­ளுக்கு சாத­க­மான அம்­சங்­க­ளாக உள்­ளன. எனினும், தற்­போது பருத்தி விலை உயர்வால் ஏற்­பட்­டுள்ள தாக்கம், இனி வரும் மாதங்­களில், நுாற்­பா­லை­களின் லாப வரம்பில் எதி­ரொ­லிக்கும். ஜவுளி துறை லாப­க­ர­மாகச் செயல்­பட, பருத்தி விலை நிலை­யாக இருப்­பது அவ­சியம். பருத்தி விலை, வரும் மாதங்­களில் சீர­டையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)