பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
10:29

கோவை: உள்நாட்டு விமான போக்குவரத்து பிரிவில், புதிய ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
'ஏர் கார்னிவல்' என்ற புதிய ஏர்லைன்சின், முதன்மை செயல் அதிகாரி மணீஷ்குமார் சிங் கூறியதாவது: கோவையை தலைமையகமாகக் கொண்ட எங்கள் நிறுவனத்துக்கு, உள்நாட்டு விமான சேவை துவக்க, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. கோவை - சென்னை, சென்னை - மதுரை வழித்தடங்களில், விமான சேவை வழங்க திட்டமிட்டுள்ளோம்.கோவையிலிருந்து சென்னைக்கு, முதல் விமான சேவையை, வரும், 18ம் தேதி துவக்க உள்ளோம்; 72 பேர் பயணிக்கக் கூடிய, ஏ.டி.ஆர்., ரக விமானத்தில், அறிமுக சலுகையாக, அன்று ஒரு நாள் மட்டும், ஒரு ரூபாய் (வரிகள் தவிர்த்து) டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள், மேலும், மூன்று விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும். விபரங்களுக்கு, www.aircarnival.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார். 'ஏர் கார்னிவல்' ஏர்லைன்ஸ் தலைவர் நாதன், மார்க்கெட்டிங் பிரிவு இயக்குனர் கல்யாணராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|