முதல் 10 இடங்­களில் மாருதி சுசூகி முன்­னணிமுதல் 10 இடங்­களில் மாருதி சுசூகி முன்­னணி ... ‘கேர் ரேட்டிங்ஸ்’ ஆய்­வ­றிக்கை; சீரிய வளர்ச்சி பாதையில் ‘செராமிக் டைல்ஸ்’ துறை ‘கேர் ரேட்டிங்ஸ்’ ஆய்­வ­றிக்கை; சீரிய வளர்ச்சி பாதையில் ‘செராமிக் ... ...
பதப்­ப­டுத்­தப்­படும் உண­வு­க­ளுக்கு தர கட்­டுப்­பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2016
04:43

புது­டில்லி : பதப்­ப­டுத்­தப்­படும் உணவுப் பொருட்­களில், கடை­பி­டிக்க வேண்­டிய தர அள­வீடு குறித்த வரைவு விதி­மு­றை­களை, இந்­திய உணவு பாது­காப்பு மற்றும் தர நிர்­ணய ஆணையம் வெளி­யிட்டு உள்­ளது.
ஜாம், ஜெல்லி... இது­கு­றித்து, இவ்­வா­ணைய தலைமை செயல் அதி­காரி பவன் அகர்வால் கூறி­ய­தா­வது:புதிய உணவுப் பொருட்­களின் தர அள­வீட்டை நிர்­ண­யிக்கும் பணி, வழக்­க­மாக நடை­பெ­று­வது தான். தற்­போது, பொது­வாக பயன்­ப­டுத்தும், உறைய வைக்­கப்­பட்ட காய்­க­றிகள், பதப்­ப­டுத்­தப்­பட்ட பழங்கள், ‘டின்’­களில் அடைத்து விற்­கப்­படும் உணவுப் பொருட்கள் ஆகி­ய­வற்­றுக்­கான தர நிர்­ணய வரைவு விதி­மு­றைகள் வெளி­யி­டப்­பட்டு உள்­ளன. அது­கு­றித்து, பொது கருத்­துக்­களின் அடிப்­ப­டையில், விதி­மு­றைகள் அமல்­ப­டுத்­தப்­படும். புதிய விதி­மு­றையில், டின்னில் அடைத்து விற்­கப்­படும் தக்­காளி, தக்­காளி சாறு, உறைந்த பீன்ஸ், காலி­பி­ளவர், பட்­டாணி, கீரை ஆகி­ய­வற்­றுக்­கான தர அள­வீ­டுகள் இடம் பெற்­றுள்­ளன.
அதுபோல், பழங்­களில் தயா­ரிக்­கப்­படும், ‘ஜாம், ஜெல்லி மற்றும் மர்­மலட்ஸ்’ ஆகி­ய­வற்­றுக்­கான தர நிர்­ணய விதி­மு­றை­களும் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளன. இந்த உண­வு­களில், உலோ­கங்கள் இருக்க வேண்­டிய அளவும் நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. மேலும், இந்த உணவுப் பொருட்­களின், ‘பேக்­கேஜிங்’ மற்றும் ‘லேபிளிங்’ முறை­க­ளுக்கும் விதி­மு­றைகள் வகுக்­கப்­பட்டு உள்­ளன. ஆணையம் அங்­கீ­க­ரித்த, உட­லுக்கு ஊறு விளை­விக்­காத மூலப்­பொ­ருட்கள் மட்­டுமே, உணவுப் பொருட்கள் தயா­ரிப்பில் இடம் பெற வேண்டும்.
விழிப்புணர்வுஉணவு பாது­காப்பு சட்டம் இயற்­றப்­பட்டு, 10 ஆண்­டுகள் ஆவதை முன்­னிட்டு, உணவு பாது­காப்பு குறித்து, நாடு முழு­வதும், வீடுகள், பள்­ளிகள், வழி­பாட்டு தலங்கள், தொழி­ல­கங்கள் ஆகி­ய­வற்றில், விழிப்­பு­ணர்வு பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)