பதிவு செய்த நாள்
31 ஆக2016
23:51
புதுடில்லி : ஜே.கே., டயர் நிறுவனம், விமானங்களுக்கான டயர் தயாரிப்பில் இறங்க திட்டமிட்டு வருகிறது.ஜே.கே., குழுமத்தின் அங்கமான, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, ஜே.கே., டயர் அண்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ரேடியல் டயர் தயாரிப்பில், ஒரு கோடி என்ற உச்சத்தை அண்மையில் தொட்டது. உலகின், ‘டாப் – 25’ கம்பெனிகளில் இதுவும் ஒன்று. இந்நிறுவனத்திற்கு, ஒன்பது தொழிற்சாலைகள் இந்தியாவிலும், மூன்று மெக்ஸிகோவிலும் என, மொத்தம், 12 தொழிற்சாலைகள் உள்ளன. அண்மையில், தன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை, 100 கோடி ரூபாய் முதலீட்டில், மைசூரில் அமைத்தது. இந்நிலையில் அடுத்தகட்டமாக, விமானங்களுக்கு தேவைப்படும் டயர்கள் தயாரிப்பில் இறங்க திட்டமிட்டு வருகிறது.விமான போக்குவரத்து வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறையாக இருப்பதால், அதில் இறங்குவது குறித்து திட்டமிட்டு வருவதாக, நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|