இந்­திய நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்க சீனா­வுக்கு கோரிக்கைஇந்­திய நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்க சீனா­வுக்கு கோரிக்கை ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.84 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.84 ...
2011ம் ஆண்­டிற்கு பின்... புதிய பங்கு வெளி­யீ­டு­களில் இந்­திய நிறு­வ­னங்கள் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2016
05:07

புது­டில்லி : ‘இந்­திய நிறு­வ­னங்கள், இந்­தாண்டு, மூல­தனச்சந்­தையில், புதிய பங்கு வெளி­யீ­டுகள் வாயி­லாக, 290 கோடி டாலர் திரட்­டி உள்ளன. இது, 2011ல் திரட்­டப்­பட்ட, 218 கோடி டாலரை விட அதிகம்’ என, பேக்கர் அண்ட் மெக்­கின்ஸி நிறு­வனத்தின் ஆய்­வ­றிக்­கை யில் கூறப்­பட்டுள்­ளது.
அதன் விபரம்: மத்­திய அரசு, இந்­தி­யாவில் தொழில் துவங்­கு­வதை சுல­ப­மாக்கி உள்­ளது; பல்­வேறு கட்­டுப்­பா­டுகள் நீக்­கப்­பட்டு உள்­ளன; எளி­மை­யான வரி­வி­திப்பு முறைகள் அம­லுக்கு வந்­துள்­ளன. இது, இந்­திய வணிகத் துறையில், புதிய நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி உள்­ளது. பல நிறு­வ­னங்கள், வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்தும் முயற்­சியில் இறங்­கி­யுள்­ளன. அதற்­கான நிதியை திரட்ட, பங்கு வெளி­யீடு­களை மேற்­கொண்டு வரு­கின்றன. இப்­பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு, முத­லீட்­டா­ளர்­க­ளி­டையே பெரும் ஆத­ரவு கிடைத்து வரு­கி­றது.
இந்­தாண்டு, 50 நிறு­வ­னங்கள், புதிய பங்கு வெளி­யீ­டுகள் மூலம், 290 கோடி டாலர் திரட்­டி­யுள்­ளன. மேலும், 22 நிறு­வ­னங்கள், இந்­தாண்டு இறு­திக்குள் பங்கு வெளி­யீட்டில் இறங்கி, 290 கோடி டாலர் திரட்ட தயா­ராக உள்­ளன. அதனால், இந்­தாண்டில் பங்கு வெளி­யீட்டின் வாயி­லாக, 580 கோடி டாலர் திரட்­டப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இது, கடந்த ஆண்டு, 71 நிறு­வ­னங்கள் திரட்­டிய, 218 கோடி டாலரை விட, இரு மடங்கு அதிகம் என்பது குறிப்­பி­டத்­தக்­கது. இதில், வோடபோன் நிறு­வனம், பங்கு வெளி­யீட்டில் திரட்ட திட்­ட­மிட்­டுள்ள, 300 கோடி டாலரும் அடங்கும்.
அடுத்த ஆண்டு அறி­மு­க­மாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரி, நாடு தழு­விய அளவில், ஒரே வரி­வி­திப்பு முறையை கொண்டு வரும். இந்த வரி சீர்­தி­ருத்தம், மாநி­லத்­திற்கு மாநிலம் வேறு­பட்­டுள்ள வரி­க­ளுக்கு முடிவு கட்டும். பர­வ­லான வரி விதிப்­பிற்கும், மறை­முக வரிகள் வாயி­லான வருவாய் உயர்­வுக்கும் துணை புரியும். இந்த நட­வ­டிக்கை மூலம், உள்­நாடு மட்­டு­மின்றி, வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கும், இந்­திய பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தங்­களில், தனக்கு உள்ள அக்­க­றையை, மத்திய அரசு பறை­சாற்றி உள்­ளது. இதன் மூலம் இந்­தியா, மேலும் அதிக முத­லீ­டு­களை ஈர்க்கக் கூடிய வலி­மையை பெறும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
இந்தாண்டில்...இந்­தாண்டு, ஐ.சி.ஐ.சி.ஐ., புரு­டென்­ஷியல் லைப் இன்­சூரன்ஸ் நிறு­வனம், பங்கு வெளி­யீடு மேற்­கொண்டு, 90.90 கோடி டாலர் திரட்­டி­யுள்­ளது. இதுவே, இந்­தாண்டு பங்கு வெளி­யீ­டு­களில், அதி­க­பட்­ச­மாக திரட்­டப்­பட்ட தொகை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)