பதிவு செய்த நாள்
24 அக்2016
07:38
இணையத்தில் பொருட்களை வாங்கும் போது, ‘இ – காமர்ஸ்’ தளங்கள் அளிக்கும் தள்ளுபடி சலுகைகளை அறிந்திருக்க வேண்டும். பல்வேறு, இ – காமர்ஸ் இணையதளங்கள் தள்ளுபடி கூப்பன்கள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளையும் அளிக்கின்றன. இவற்றை கவனமான கண்டறிந்து பயன்படுத்தினால், கணிசமான தொகையை மிச்சம் செய்யலாம்.
இ – காமர்ஸ் இணையதளங்கள் அளிக்கும் சலுகைகளை கண்டறிய உதவும் பிரத்யேக இணையதளங்களும், பல இருக்கின்றன. உதாரணத்திற்கு, கூப்பந்துனியா.இன் (www.coupondunia.in) தளம் பல்வேறு தளங்கள் வழங்கும் தள்ளுபடி கூப்பன்களை அறிய உதவுகிறது. இந்த தளத்தில் தேவையான பிரிவுகளில் கூப்பன்களை தேடி, ஷாப்பிங் செய்து சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்; கேஷ்பேக் சலுகைகளையும் பெறலாம். சலுகை பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.இதே போலவே, கிரேபான்.இன் (www.grabon.in) தளம் மற்றும் ஷாப்பைரட்.இன் (SHOPPIRATE.IN) தளங்களும் சலுகைகளை அறிய உதவுகின்றன. ஷாப்பைரட் தளத்தில் எளிமையான தேடல் வசதியும் இருக்கிறது. சலுகைகள் பற்றிய தகவல்களை இ – மெயிலில் பெறும் வசதியும் இருக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|