பதிவு செய்த நாள்
24 டிச2016
03:31
மும்பை : லிபர்ட்டி வீடியோகான் இன்சூரன்ஸ் நிறுவனம், பிரீமியம் வசூல் மூலம், 570 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.
லிபர்ட்டி வீடியோகான், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தை, அமெரிக்காவை சேர்ந்த லிபர்ட்டி மியூச்சுவல் இன்சூரன்ஸ்; உள்நாட்டை சேர்ந்த வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை கூட்டாக துவக்கியுள்ளன. கடந்த நிதியாண்டில், இந்நிறுவனம், 409 கோடி ரூபாயை, காப்பீட்டு பிரீமியமாக வசூலித்தது. இது, நடப்பு நிதியாண்டில், 570 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ரூபாஸ்ம் அஸ்தானா கூறியதாவது: எங்கள் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், இதுவரை, 550 கோடி ரூபாய் பிரீமியம் வசூலித்து உள்ளது. எனவே, அடுத்த மூன்று மாதங்களில், 20 கோடி ரூபாய் வசூலிக்கப்படும். இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், பிரீமியம் வசூல், 570 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. லிபர்ட்டி வீடியோகான், 350 பெருநிறுவனங்களில், சுகாதார காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|