தொலை­பேசி வாடிக்­கை­யா­ளர்கள் 107 கோடி­யாக உயர்வுதொலை­பேசி வாடிக்­கை­யா­ளர்கள் 107 கோடி­யாக உயர்வு ... ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.68.21 ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.68.21 ...
வங்­கிகள் அதி­ரடி வட்டி குறைப்பு; வீடு விற்­பனை அதி­க­ரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2017
00:05

புது­டில்லி : மத்­திய அரசின் பண மதிப்பு நீக்க நட­வ­டிக்கை; சில தினங்­க­ளுக்கு முன், பிர­தமர் மோடி, வீட்டு வசதி கட­னுக்கு அறி­வித்த வட்டிச் சலு­கைகள் ஆகி­ய­வற்றால், வீடு விற்­பனை அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையை தொடர்ந்து, கடந்த ஆண்டு, நவ., 8 – டிச., 10 வரை, வங்­கி­க­ளிடம், 12.44 லட்சம் கோடி ரூபாய் குவிந்­துள்­ளது. இதனால், நடப்பு நிதி ஆண்டில், வங்­கி­களின், ‘டிபாசிட்’ வளர்ச்சி, 13.6 சத­வீதம் அதி­க­ரித்து, 105.90 லட்சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. ஆனால், கடன் வளர்ச்சி, 1.2 சதவீதம் குறைந்­துள்­ளது. குறிப்­பாக, தொழில் துறையின் கடன் வளர்ச்சி, 5.5 சத­வீதம் சரி­வ­டைந்து உள்­ளது. அது போல, வீட்டு வசதி மற்றும் வேளாண் துறை­களின் கடன் வளர்ச்சி, முறையே, 9.9 சத­வீதம் மற்றும் 2.2 சத­வீதம் குறைந்­துள்­ளது. அதனால், வங்­கிகள், வட்டியை குறைத்து, தாரா­ள­மாக கடன் வழங்க வேண்­டிய நிலைக்கு ஆளா­கி­யுள்­ளன.
இந்­நி­லையில், பிர­தமர் மோடி, தன் புத்­தாண்டு வாழ்த்துச் செய்­தி யில், வீடு, தொழில், வேளாண் துறை­க­ளுக்கு, பல்­வேறு சலு­கை­களை அறி­வித்தார். வீட்டு வசதி கட­னுக்கு, 4 சத­வீத வட்டி மானியம், விவ­சா­யி­க­ளுக்கு, 60 நாள் வட்டி தள்ளுபடி, சிறிய, நடுத்­தர நிறு­வன கடன் வரம்பு, 1 கோடி ரூபாயில் இருந்து, 2 கோடி ரூபா­யாக உயர்வு என, அவர் அறி­வித்த சலு­கைகள், அனைத்து தரப்­பினரையும் கவர்ந்­துள்­ளன. இத்­த­கைய சாத­க­மான சூழலை பயன்­ப­டுத்தி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்­ளிட்ட பெரும்­பான்­மை­யான வங்­கிகள், கட­னுக்­கான வட்­டியை, கால அளவின் அடிப்­ப­டையில், 0.60 – 1.48 சத­வீதம் வரை அதி­ர­டி­யாக குறைத்­துள்­ளன. இதனால், சில ஆண்­டு­க­ளாக, மந்த நிலையில் உள்ள வீட்டு வசதி துறை, எழுச்சி காணும் என, இத்­துறை சார்ந்­த­வர்கள் தெரி­வித்து உள்­ளனர்.
ராஜீவ் தல்வார், தலைமை செயல் அதி­காரி, டி.எல்.எப்.: கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, வீடு விலை, 25 – 30 சத­வீதம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. தற்­போது, வீட்டு வசதி கட­னுக்­கான வட்டி குறைந்­துள்­ளதால், வீடு விற்­பனை அதிகரிக்கும். அன்குர் தவான், தலைமை வர்த்­தக அதி­காரி, பிராப் டைகர் டாட் காம்: இது, ரியல் எஸ்டேட் துறைக்கு அளிக்­கப்­பட்ட, புத்­தாண்டு பரிசு. வீட்டு வசதி கடன் சுமை குறையும் என்­பதால், பலர் வீடு­களை வாங்க ஆர்வம் காட்டுவர். அனுஜ் பூரி, தலைவர், ஜே.எல்.எல்., இந்­தியா: வீடு­க­ளுக்­கான தேவை பெருகும். குறைந்த வட்­டியில் கடன் கிடைப்­பதால், வீடு வாங்க, நீண்ட கால­மாக திட்­ட­ மிட்டு வரு­வோரின் கனவு நனவாகும்.
வங்கி வட்டி குறைப்பு (சத­வீ­தத்தில்)ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா - 8.15- (0.90)பஞ்சாப் நேஷனல் பேங்க் - 8.45 - (0.70)தேனா பேங்க் - 8.55 - (0.75)ஆந்­திரா வங்கி - 8.65 - (0.80)யூனியன் பேங்க் ஆப் இந்­தியா - 8.65 - (0.90)பந்தன் பேங்க் - 10.52 - (1.48)

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)