மின்னணு பண பரிவர்த்தனைக்கு தனி அமைப்பு: ரிசர்வ் வங்கி எதிர்ப்புமின்னணு பண பரிவர்த்தனைக்கு தனி அமைப்பு: ரிசர்வ் வங்கி எதிர்ப்பு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.08 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.68.08 ...
பட்ஜெட்டில் வரி விலக்கு சலுகைகளை அதிகரிக்க காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2017
23:58

மும்பை : மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி, 2017 – 18ம் நிதி­யாண்­டுக்­கான, மத்­திய பட்­ஜெட்டை, பிப்., 1ல், பார்­லி­மென்­டில் தாக்­கல் செய்ய உள்­ளார். இந்த பட்­ஜெட்­டில், காப்­பீட்டு துறைக்­கான வரி விலக்கு சலு­கை­களை அதி­க­ரிக்க வேண்­டும் என, காப்­பீட்டு நிறு­வ­னங்­கள் கோரிக்கை விடுத்­துள்ளன.
தீபக் மிட்­டல், நிர்­வாக இயக்­கு­னர், எடல்­வைஸ் டோக்­கியோ லைப் இன்­சூ­ரன்ஸ்: பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யால், பொருட்­களின் பயன்­பாடு குறைந்­துள்­ளது. இதை அதி­க­ரிக்­கும் நோக்­கில், இந்த பட்­ஜெட்­டில், வரி விதிப்பு குறை­வா­க­வும், வரி விலக்கு சலு­கை­கள் அதி­க­மா­க­வும் இருக்­கும் என, எதிர்­பார்க்­கி­றோம். ஓய்வு கால காப்­பீட்டு திட்­டத்­தில், ஒரு­வர், ஆயுள் முழு­வ­தும் உறுதி அளிக்­கப்­பட்ட தொகையை பெற­லாம். வங்­கி­களின் வட்டி விகி­தம் குறைந்­தா­லும், அவர் பெறும் தொகை குறை­யாது. இத்­திட்­டத்­தில் மேற்­கொள்­ளப்­படும் முத­லீ­டு­க­ளுக்கு, முழு வரி விலக்கு அளிக்க வேண்­டும். இதன் மூலம், ஓய்­வூ­திய சேமிப்­பு­கள் அதி­க­ரிக்­கும்.
ராஜேஷ் சுட், துணைத் தலை­வர், மேக்ஸ் லைப் இன்­சூ­ரன்ஸ்: ஓய்வு கால காப்­பீட்டு திட்­டங்­களில் மேற்­கொள்­ளும் முத­லீ­டு­க­ளுக்கு, வரி விலக்கு சலுகை வழங்­கி­னால், 10 கோடிக்­கும் அதி­க­மான மூத்த குடி­மக்­கள் பயன் பெறு­வர். வரு­மான வரியை எளி­மை­யாக்க அமைக்­கப்­பட்ட குழு, வளர்ந்த நாடு­க­ளுக்கு நிக­ரான, எளிய வரி நடை­மு­றை­கள் குறித்த பரிந்­து­ரையை, மத்­திய அர­சுக்கு வழங்­கி­யுள்­ளது. அத­னால், பட்­ஜெட்­டில், வரு­மான வரி சட்­டங்­களை எளி­மை­யாக்­கும் அறி­விப்பு வெளி­யா­கும் என, தெரி­கிறது. ஆயுள் காப்­பீட்டு பிரீ­மி­யத்­திற்­கான, வரிச் சலு­கைக்கு என, தனி வரு­மான வரி வரம்பை நிர்­ண­யிக்க வேண்­டும்; தற்­போ­தைய வரி விலக்கு வரம்பை உயர்த்த வேண்­டும்.
ஆசிஷ் மெஹ்­ரோத்ரா, நிர்­வாக இயக்­கு­னர், மேக்ஸ் பூபா ஹெல்த் இன்­சூ­ரன்ஸ்: மக்­கள், காப்­பீடு செய்­வதை ஊக்­கு­விக்­கும் நோக்­கில், பட்­ஜெட்­டில் அதிக வரிச்­ச­லு­கை­கள் இருக்­கும் என, எதிர்­பார்க்­கி­றோம். நீண்ட கால காப்­பீட்டு திட்­டங்­களில், மக்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்க, காப்­பீட்டு ஆண்­டு­களின் அடிப்­ப­டை­யில், வரிச்­ச­லு­கை­கள் வழங்­க­லாம். சிறப்பு மருத்­துவ காப்­பீட்டு திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தும் நிறு­வ­னங்­கள் ஊக்­கு­விக்­கப்­பட வேண்­டும். அந்­நி­று­வ­னங்­க­ளுக்கு ஏற்­படும் இழப்பு கணக்கை சரி­செய்­வ­தற்­கான சலு­கைக் காலம், குறைந்­த­பட்­சம், 12 ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட வேண்­டும். மருத்­துவ காப்­பீட்டு பிரீ­மி­யத்­திற்­கான, வரிச்­ச­லுகை வரம்பை, 25 ஆயி­ரம் ரூபா­யில் இருந்து, 50 ஆயி­ரம் ரூபா­யாக உயர்த்த வேண்­டும்; 15 சத­வீத சேவை வரியை நீக்க வேண்­டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)