தோல் – காலணிகள் துறைக்கு சலுகை திட்டம்; விதிமுறைகள் தயாரிப்பில் அரசு தீவிரம்தோல் – காலணிகள் துறைக்கு சலுகை திட்டம்; விதிமுறைகள் தயாரிப்பில் அரசு ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.35 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.35 ...
வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டும் போலி ‘இ – வாலட்’ நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2017
23:52

புதுடில்லி : இந்­தி­யா­வில், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள் சூடு­பி­டித்து வரும் நிலை­யில், போலி, ‘இ – வாலட்’ நிறு­வ­னங்­கள் தலை­யெ­டுத்து, வாடிக்­கை­யா­ளர்­களின் பணத்தை மோசடி செய்­யும் வாய்ப்பு உள்­ளது என, ‘காஸ்­பர்ஸ்கை’ நிறு­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது.
இந்­நி­று­வ­னம், கணினி பரி­வர்த்­த­னை­க­ளுக்­கான பாது­காப்பு மென்­பொ­ருள் தீர்­வு­களை வழங்கி வரு­கிறது. இதன், தெற்­கா­சிய பிரி­வின் நிர்­வாக இயக்­கு­னர், அல்­டாப் ஹால்டி கூறி­ய­தா­வது: இந்­தி­யா­வில், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள் வேக­மாக வளர்ச்சி பெற்று வரு­கின்றன. அதற்­கேற்ப, அத்­து­றை­யில் உள்ள நிறு­வ­னங்­கள், அவற்­றின், ‘ஆப்’களில் பல­மான பாது­காப்பு அம்­சங்­கள் உள்­ளதை உறுதி செய்து கொள்ள வேண்­டும்.
மென்பொருட்கள்இரு­முறை அங்­கீ­க­ரிக்­கும் நடை­மு­றை­யின்­படி, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பணப் பரி­வர்த்­தனை சேவையை வழங்க வேண்­டும். இதன் மூலம், பாது­காப்­பான பணப் பரி­வர்த்­த­னையை மேற்­கொள்ள முடி­யும்.‘இ – வாலட்’ எனப்­படும், மின்­னணு பணப் பை சேவை­யில், நிறு­வ­னங்­கள், போலி ஆப்­களை வெளி­யிட்டு, நுகர்­வோரை ஏமாற்ற அதிக வாய்ப்பு உள்­ளது. இந்த, ஆப்­களின் வணிக சின்­னங்­கள், அசல் நிறு­வ­னங்­களின் சின்­னங்­களை போன்ற தோற்­றத்­தில் இருக்­கும்.ஆனால், எழுத்­துக்­களில் மாற்­றம் இருக்­கும். அதை வைத்து, அந்த ஆப், அசலா அல்­லது போலியா என்­பதை கண்­டு­பி­டித்து விட­லாம்.
அத­னால், ஆப்­களை பதி­வி­றக்­கும் முன், எச்­ச­ரிக்­கை­யு­டன், நிதான போக்கை கடை­பி­டிப்­பது அவ­சி­யம். அத்­து­டன், கணினி பாது­காப்­புக்­காக வைரஸ் தடுப்பு சாப்ட்­வேர்­களை பயன்­ப­டுத்­து­வது போல, ஸ்மார்ட் போன்­க­ளி­லும், பாது­காப்பு மென்­பொ­ருட்­களை நிறுவ வேண்­டும்.இதன் மூலம், பாது­காப்­பான பணப் பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்­ள­லாம். அத்­து­டன், நம் பரி­வர்த்­தனை ரக­சி­யங்­கள், கம்ப்­யூட்­டர் நாச­கா­ரர்­கள் கையில் சிக்­கு­வ­தை­யும் தவிர்க்­க­லாம்.
எச்­ச­ரிக்­கை­இந்­தி­யா­வில், இது­வரை போலி, ‘இ – வாலட்’ ஆப்­க­ளால், எந்த பாதிப்­பும் ஏற்­ப­ட­வில்லை. வங்­கி­கள், மின்­னணு பணப் பை நிறு­வ­னங்­கள் உள்­ளிட்­டவை, பாது­காப்­பான பணப் பரி­வர்த்­த­னை­க­ளுக்­காக, வலி­மை­யான சாப்ட்­வேர்­களை நிறு­வி­யுள்ளன. அத­னால், வாடிக்­கை­யா­ளர்­கள் தான், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்­கான நிறு­வ­னத்தை தேர்வு செய்­வ­தி­லும், அதன் ஆப்­களை பதி­வி­றக்­கம் செய்­வ­தி­லும் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
பாது­காப்­பா­னதுமத்­திய அரசு, 2016 நவ., 8ல், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையை அறி­வித்­தது. இதை தொடர்ந்து, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களை ஊக்­கு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முடுக்கி விடப்­பட்­டுள்ளன.மத்­திய அரசு, பாது­காப்­பான மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, ‘பீம்’ என்ற செய­லியை, கடந்­தாண்டு, டிச., 30ல் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இதை, கூகுள் பிளே ஸ்டோர் மூலம், இது­வரை, 125 லட்­சம் பேர் பதி­வி­றக்­கம் செய்து, பாது­காப்­பான பணப் பரி­வர்த்­த­னை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.வலை­த­ளங்­கள் கொடுக்­கும், ‘லிங்க்’ மூலம், ‘ஆப்’களை பதி­வி­றக்­கா­மல், நேர­டி­யாக, அசல் வலை­த­ளத்­தில் இருந்து பதி­வி­றக்­கு­வது பாது­காப்­பா­னது என, வல்­லு­னர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)