பதிவு செய்த நாள்
22 பிப்2017
16:44

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாவது நாளில் உயர்வுடன் ஆரம்பமாகி உயர்வுடனேயே முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன. குறிப்பாக கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 28,864.71 புள்ளிகள் எழுச்சி கண்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 103.12 புள்ளிகள் உயர்ந்து 28,864.71-ஆகவும், நிப்டி 19.05 புள்ளிகள் உயர்ந்து 8,926.90-ஆகவும் முடிவுற்றன.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. இந்நிறுவனத்தின் ஜியோ சேவை தொடர்பாக அம்பானி பல்வேறு சலுகைகளை நேற்று அறிவித்தார். இதன்காரணமாக இந்நிறுவன பங்குகள் 11 சதவீதம் எழுச்சி பெற்றன. ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 1751 நிறுவன பங்குகள் சரிந்தும், 1096 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|