‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் துவக்க 15 பெண் தொழில் முனைவோர் தேர்வு‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள் துவக்க 15 பெண் தொழில் முனைவோர் தேர்வு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.80 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.80 ...
‘பிரைஸ் வாட்­டர்­கூப்பர் ஹவுஸ்’ ஆய்­வ­றிக்கை - நிறு­வ­னங்­களின் இணைப்பு – கைய­கப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் மேலும் அதி­க­ரிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2017
02:02


புது­டில்லி, பிப். 28–‘இந்­தி­யாவில், நிறு­வ­னங்கள் ஒன்­றுடன் ஒன்று இணை­வது; ஒரு நிறு­வனம், பிற நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­து­வது ஆகி­ய­வற்­றுக்கு, தற்­போது, வலு­வான சட்­டங்­களும், ஒழுங்­கு­முறை கட்­டுப்­பா­டு­களும் உள்­ளன. அதனால், நிறு­வ­னங்­களின் இணைப்பு மற்றும் கைய­கப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் மேலும் அதி­க­ரிக்கும்’ என, பிரைஸ் வாட்­டர்­கூப்பர் நிறு­வனம் தெரி­வித்து உள்­ளது. இது தொடர்­பாக, இந்­நி­று­வனம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:சர்­வ­தேச பொரு­ளா­தார வளர்ச்சி குறைந்து வரும் நிலையில், இந்­திய பொரு­ளா­தாரம், எத்­த­கைய இடர்­க­ளையும் சமா­ளிக்கக் கூடிய ஆற்­ற­லுடன் விளங்­கு­கி­றது. இதன் கார­ண­மாக, கடன் சுமையால் சொத்­து­களை இழக்கும் நிறு­வ­னங்கள் பெருகி வரும் நிலை­யிலும், உள்­நாடு மற்றும் வெளி­நா­டு­களில், நிறு­வ­னங்கள் இடை­யி­லான இணைப்பு மற்றும் கைய­கப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில், இந்­தியா முன்­னி­லையில் உள்­ளது. ‘அமேசான், ஊபர்’ போன்ற பன்­னாட்டு மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்கள், இந்­தி­யாவில் வலு­வாக காலுான்றி வரு­கின்­றன. அதனால், இந்­திய மின்­னணு வணிக துறையில், இணைப்பு மற்றும் கைய­கப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அதிக வாய்ப்பு உள்­ளது; பல நிறு­வ­னங்கள், சந்­தையில் நீடிக்க, இத்­த­கைய செயல்­பாடு மிகவும் அவ­சி­ய­மாக உள்­ளது. அன்­னிய முத­லீட்டு விதி­மு­றை­களை தளர்த்­தி­யது; வரி மற்றும் ஒழுங்­கு­முறை கட்­டுப்­பா­டுகள் தொடர்­பான சீர்­தி­ருத்­தங்கள்; சர்­வ­தேச தரத்­திற்கு நிக­ரான, கணக்கு தணிக்கை முறையை அமல்­ப­டுத்­தி­யது; மொரீ­ஷியஸ், சிங்­கப்பூர் ஆகிய நாடு­க­ளுடன், வரி விதிப்பு ஒப்­பந்­தங்­களில் செய்­யப்­பட்ட திருத்­தங்கள் போன்­றவை, இணைப்பு மற்றும் கைய­கப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தாக உள்­ளன. விரைவில் அம­லுக்கு வர­வுள்ள, ஜி.ஏ.ஏ.ஆர்., – ஜி.எஸ்.டி., போன்ற சட்­டங்­களும், நிறு­வ­னங்கள் ஒன்­றுடன் ஒன்று இணை­வ­தற்கும், கைய­கப்­ப­டுத்­து­வ­தற்கும் துணை புரியும். பல்­வேறு துறை­களில், இணைப்பு நட­வ­டிக்­கைகள் தவிர்க்க முடி­யாது என்­ப­தற்கு, சமீ­பத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்­களை உதா­ர­ண­மாக கூறலாம். தொலை தொடர்பு துறையில், ரிலையன்ஸ் கம்­யூ­னி­கேஷன்ஸ் நிறு­வனம், எம்.டி.எஸ்., இந்­தியா நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்தி, அதன் வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்தி உள்­ளது. மின் துறையில், டாடா பவர் நிறு­வனம், வெல்ஸ்பன் எனர்ஜி நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்தி உள்­ளது. கோட்டக் மகிந்­திரா வங்கி, ஐ.என்.ஜி., வைஸ்யா வங்­கியை, தன்­னுடன் இணைத்துக் கொண்­டுள்­ளது. இது போல, மேலும் பல இணைப்பு நட­வ­டிக்­கைகள் அதி­க­ளவில் நடை­பெற வாய்ப்பு உள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
தொலை தொடர்பு துறைதொலை தொடர்பு துறையில், ரிலையன்ஸ் கம்­யூ­னி­கேஷன்ஸ் – எம்.டி.எஸ்., இந்­தியா, பார்தி ஏர்டெல் – டெலினார், வோடபோன் – ஐடியா செல்­லுலார் இணைப்பு நட­வ­டிக்­கைகள் அறி­விக்­கப்­பட்டு உள்­ளன. இதர துறை­க­ளிலும், நிறு­வ­னங்­களின் கைய­கப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்து உள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)