பதிவு செய்த நாள்
07 ஏப்2017
06:08
மும்பை : மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்த, லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பெண்கள் அணியும், ‘லெக்கிங்ஸ்’ ஆடைகளை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்துக்கு, 12 இடங்களில், தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது, இந்நிறுவனம், உள்ளாடை விற்பனையிலும் களமிறங்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் உதித் தோடி கூறியதாவது:நிறுவனம், ‘லிரா’ என்ற பிராண்டில், லெக்கிங்ஸ் ஆடைகளை விற்பனை செய்கிறது. அதன் விற்றுமுதல், 160 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இந்தியாவில், பெண்கள் உள்ளாடை துறையின் சந்தை மதிப்பு, 23 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இது, ஆண்டுதோறும், 10 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
உள்ளாடை விற்பனையில், அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, நிறுவனம், பெண்களுக்கான உள்ளாடை விற்பனையில் ஈடுபட உள்ளது. கடந்த ஆண்டில், லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 100 கோடி ரூபாயை, மூலதன செலவாக கொண்டிருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|