பதிவு செய்த நாள்
25 ஏப்2017
01:17

வாஷிங்டன் : வெளியாட்களை பணிக்கு அமர்த்தும், ‘எச் – 1பி’ விசா விதிமுறைகளை, இன்போசிஸ், காக்னிஸன்ட், டி.சி.எஸ்., நிறுவனங்கள் மீறியுள்ளதாக, அமெரிக்க அரசு பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளது.
இது குறித்து, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வலைதளத்தில், அரசு அதிகாரி தெரிவித்த கருத்து வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விபரம்: வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தும், ‘எச் – 1பி’ விசா கோரி, முன்னணி நிறுவனங்களான, இன்போசிஸ், காக்னிஸன்ட், டி.சி.எஸ்., போன்றவை, அவற்றுக்கு கிடைக்கும் இடங்களை விட, மிக அதிகமான விண்ணப்பங்களை அளித்து வருகின்றன. இதன் மூலம், இந்நிறுவனங்கள், விசா ஒதுக்கீட்டில், பெரும் பங்கை கைப்பற்றி விடுகின்றன.
வலுவான சான்று:
இப்படி பெறப்படும் விசா மூலம், இந்நிறுவனங்கள், குறைந்த திறன் உள்ள ஊழியர்களை, இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரவழைத்து, குறைந்த ஊதியச் செலவில் பணிகளை முடித்துக் கொள்கின்றன.உதாரணமாக, அமெரிக்காவில், சாப்ட்வேர் பொறியாளர் ஒருவரின் சராசரி ஊதியம், 1.50 லட்சம் டாலராக உள்ள நிலையில், இன்போசிஸ், காக்னிஸன்ட், டி.சி.எஸ்., ஆகியவை, சராசரியாக, 60 ஆயிரம் – 65 ஆயிரம் டாலர் ஊதியத்தில், இந்திய பொறியாளர்களை வேலையில் அமர்த்தி, பணிகளை முடித்துக் கொள்கின்றன.
‘வல்லுனர்களை மட்டுமே பணிக்கு அமர்த்த வேண்டும்’ என, ‘எச் – 1பி’ விசா விதிமுறை கூறுகிறது. ஆனால், இந்த மூன்று நிறுவனங்களும், இந்த விசா மூலம், சாதாரண, துவக்க நிலை பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளன. இதற்கு வலுவான சான்று உள்ளது. இந்த வகையில், தற்போது, ‘எச் – 1பி’ விசா பெறுவோரில், 80 சதவீதம் பேர், உள்நாட்டினர் சராசரியாக பெறும் ஊதியத்தை விட, குறைவாக பெறுவது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
தொழிலாளர் நலத்துறை, ஊழியர்களுக்கு நான்கு நிலை ஊதியத்தை நிர்ணயித்துள்ளது. அதில், உச்சபட்ச ஊதியம் பெறும், ‘எச் – 1பி’ விசா பணியாளர்களின் பங்கு, 5 – 6 சதவீதம் என்ற அளவிற்குத் தான் உள்ளது. அதிக திறன் பெற்ற வல்லுனர்களுக்கான பணியில், அமெரிக்க ஊழியர்களை அகற்றிவிட்டு, அவர்களுக்கு அளிக்கப்படுவதை விட, குறைந்த ஊதியத்தில், வெளிநாட்டினர் பணியமர்த்தப்படுவது, ‘எச் – 1பி’ விசா விதிகளை மீறுவதாகும். இது, எந்த நோக்கத்திற்காக விசா வழங்கப்படுகிறதோ, அதற்கு நேர்மாறானது.
வேலை வாய்ப்பு :
ஒருவர், திறன் பெற்ற வல்லுனரா அல்லது அவருக்கான ஊதியம், திறன் சார்ந்த பணிகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறதா என்பதை எல்லாம் பார்க்காமல், குலுக்கல் முறையில், ‘எச் – 1பி’ விசா வழங்கியதே, இந்த விதிமீறல் நடைபெறுவதற்கு வித்திட்டுள்ளது.அதனால், தற்போது, திறன் சார்ந்த வல்லுனர்களுக்கு மட்டுமே, ‘எச் – 1பி’ விசா வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விசா மூலம், திறன் சார்ந்த வல்லுனர்களின் பணியிடத்தில், வெளிநாட்டு நிறுவனங்களால் சாதாரண திறனுள்ள ஊழியர்களை, பணிக்கு அமர்த்த முடியாது. இது, அமெரிக்க வல்லுனர்களின் வேலையிழப்பை தடுக்கும் என்பதுடன், அவர்களின் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|