பதிவு செய்த நாள்
26 ஏப்2017
04:14

புதுடில்லி : உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு, விவசாயிகள், உரிய விலையை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், மொத்த விற்பனை வேளாண் சந்தையில், தனியாரை அனுமதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை சந்தைப்படுத்துதல் மாதிரி சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
விவசாயம், மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வருவதால், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பாகும். குறைந்தபட்சம், பா.ஜ., ஆளும், 15 மாநிலங்களில், மாதிரி சட்டம் அமலானால், அது, வேளாண் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தி, விவசாயிகள் வருவாய், இரு மடங்கு உயர துணை புரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அரசின், வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்துதல் குழுவின், கீழ் உள்ள சந்தைகளில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, நேரடியாக விற்பனை செய்யும் வசதி உள்ளது. நாட்டில் இது போன்று, 6,746 சந்தைகள் மட்டுமே உள்ளன; அவை ஒவ்வொன்றும், குறைந்தபட்சம், 462 கி.மீ., துாரத்தில் உள்ளன. இந்த நிலையை, புதிய மாதிரி சட்டம் மாற்றும்.
நாடு முழுவதும் பரவலாக, மொத்த விற்பனை வேளாண் சந்தைகள் உருவாக வழிவகுக்கும். இச்சந்தைகளில், விவசாயிகள், தங்கள் விளைபொருட்கள், கால்நடைகள் ஆகியவற்றை நேரடியாக விற்பனை செய்யலாம். புதிய மாதிரி சட்டத்தின் கீழ், வேளாண் பொருட்கள் விற்பனையை ஒழுங்குப்படுத்த, தனி ஆணையம் அமைக்கப்படும்.
மாநிலங்களின் விருப்பம்புதிய மாதிரி சட்டத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, தங்கள் தேவைக்கேற்ப, மாநிலங்கள் அமல்படுத்தலாம். சட்டத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்படும்.-ரமேஷ் சந்த், ‘நிடி ஆயோக்’ உறுப்பினர்
நோக்கம் நிறைவேறும்பெரும்பான்மையான மாநிலங்கள், புதிய மாதிரி சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இது, அமலுக்கு வந்தால், 2022ல், விவசாயிகள் வருவாயை, இரு மடங்கு உயர்த்த வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கம் நிறைவேறும்-ராதா மோகன் சிங், மத்திய வேளாண் துறை அமைச்சர்
ஒரே சந்தை‘ஒரே வேளாண் சந்தை’ என்ற நோக்கத்தில், மாதிரி சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது, மாநில வேளாண் சந்தைகளில், தாராளமயமாக்கலுக்கு வழிவகுக்கும். ஒரே உரிமத்தில், வேளாண் பொருட்களுடன், கால்நடைகளையும் விற்பனை செய்யலாம். நாடு முழுவதும், 80 கி.மீ., இடைவெளியில், ஒரு மொத்த விற்பனை வேளாண் சந்தை அமைய வேண்டும் என்பது, அரசின் இலக்கு. தனியார் பங்களிப்பால், வேளாண் சந்தைகளில் ஆரோக்கியமான போட்டி உருவாகும். இதனால், விவசாயிகள், தங்கள் வேளாண் பொருட்களுக்கு, அதிகபட்ச விலையை பெற முடியும்.-அசோக் தல்வாய், கூடுதல் செயலர், வேளாண் அமைச்சகம்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|