நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி 16,068 கோடி டாலரை எட்டியதுநாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி 16,068 கோடி டாலரை எட்டியது ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ...
துபாய், பிரிட்டன், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2017
01:07

மும்பை : சைவ உணவை பெரி­தும் விரும்­பும் பெரும்­பான்­மை­யான இந்­தி­யர்­கள், அவ்­வகை உணவு வகை­கள் சுல­ப­மாக கிடைக்­கக் கூடிய, துபாய், பிரிட்­டன், சிங்­கப்­பூர் போன்ற நாடு­க­ளுக்­குச் செல்­லவே அதி­கம் விரும்­பு­வ­தாக, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

சுற்­றுலா துறை­யைச் சேர்ந்த, காக்ஸ் அண்டு கிங்ஸ் நிறு­வ­னம், இந்­தி­யர்­களின் வெளி­நாட்டு பய­ணம் குறித்து ஆய்வு மேற்­கொண்­டது.அதன் விப­ரம்: இந்­தாண்டு, ஜன., – மார்ச் வரை­யில், 20 – 65 வய­து­டைய, 5,000 பேரி­டம், வெளி­நாட்டு சுற்­றுலா தொடர்­பாக ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. அதில், 20 – 45 வய­தி­ன­ரில், 85 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மா­னோர், சைவ உணவு கிடைக்­கும், பல்­வேறு கலா­சார மக்­கள் வாழும் நாடு­க­ளுக்கு பய­ணம் செல்ல விரும்­பு­வ­தாக தெரி­வித்துள்­ள­னர். அதே சம­யம், 46 – 65 வய­தி­ன­ரில், பெரும்­பான்­மை­யா­னோர், சைவ உணவு உறு­தி­யாக கிடைக்­கும் நாடு­க­ளுக்கு குழு­வாக பய­ணம் செய்ய ஆர்­வம் உள்­ள­தாக கூறி­யுள்­ள­னர்.

சைவ உணவு பிரி­யர்­க­ளுக்கு விருப்­ப­மான நாடு­க­ளாக, துபாய், பிரிட்­டன், சிங்­கப்­பூர் ஆகி­யவை உள்ளன. இங்கு, ஏரா­ள­மான இந்­தி­யர்­களும், இந்­திய உண­வ­கங்­களும் உள்­ள­தால், காய்­கறி உண­வு­களை தேடி அலைய வேண்­டி­ய­தில்லை என்­பது தான், அதற்கு கார­ணம்.இத்­து­டன், அமெ­ரிக்கா, சுவிட்­சர்­லாந்து, மலே­ஷியா, இஸ்­ரேல், தாய்­லாந்து, ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து நாடு­க­ளுக்­கும் செல்ல, சைவ உண­வுக்­கா­ரர்­கள் விரும்­பு­கின்­ற­னர். இந்­நா­டு­களில், சைவ உணவு விடு­தி­கள் ஓர­ளவு உள்ளன.

சைவ உணவு பய­ணி­ய­ரில், 70 சத­வீ­தம் பேர், தங்­க­ளுக்கு விருப்­ப­மான உணவு கிடைக்­கும் நாடு­களை சுற்­றிப் பார்க்­கவே ஆசைப்­ப­டு­கின்­ற­னர். எனி­னும், 30 சத­வீ­தத்­தி­னர், முத­லில் பய­ணிக்க வேண்­டிய நாடு­களை தேர்வு செய்­து­விட்டு, பின், அங்கு சைவ உண­வ­கங்­கள் எங்கு உள்ளன என, தேடு­கின்­ற­னர். வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லும், சைவ உணவு பய­ணி­ய­ரில், 53 சத­வீ­தம் பேர், சைவ உண­வு­களை மட்­டுமே பரி­மா­றும் ஓட்­டல்­கள் மற்­றும் ரெஸ்­டா­ரென்ட்­டு­களை நாடு­கின்­ற­னர்; 20 சத­வீ­தம் பேர், அசைவ ஓட்­ட­லில், சைவ உணவு கிடைத்­தால் கூட போதும் என, திருப்­தி அடைகின்றனர்.

வெளி­நா­டு­க­ளுக்கு குறு­கிய கால பய­ணம் மேற்­கொள்­வோர், நுாடுல்ஸ், உப்­புமா, புளி­யோ­தரை போன்ற உட­னடி உண­வுப் பொருட்­களை கையோடு கொண்டு செல்­கின்­ற­னர். ஐந்து நாட்­க­ளுக்கு மேற்­பட்ட பய­ண­மாக இருந்­தால், வெளி­நா­டு­களில், சைவ உண­வ­கங்­கள் அதி­கம் உள்ள பகு­தி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கின்­ற­னர். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் பெரும்­பான்­மை­யா­னோர், சைவ உண­வு­களை உண்­கின்­ற­னர். அத்­த­கை­யோர், வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­கை­யில், அங்கு சைவ உணவு கிடைக்­கி­றதா என, உறு­திப்­ப­டுத்­திக் கொள்­கின்­ற­னர். அதன் பின்னே, பய­ணத் திட்­டத்தை முடிவு செய்­கின்­ற­னர். தமி­ழ­கம், குஜ­ராத், மத்­திய பிர­தே­சம், ராஜஸ்­தான் ஆகிய மாநி­லங்­களில் இருந்து, மிக அதி­க­மா­னோர், சைவ உண­வ­கங்­கள் உள்ள வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­வதை விரும்­பு­கின்­ற­னர்.
-கரன் ஆனந்த்,தலை­வர், நல்­லு­றவு பிரிவு, காக்ஸ் அண்டு கிங்ஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)