மலிவு விலை எல்.இ.டி., பல்பு, பெட்ரோல் ‘பங்க்’கில் விற்பனைமலிவு விலை எல்.இ.டி., பல்பு, பெட்ரோல் ‘பங்க்’கில் விற்பனை ... தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை ...
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்குஒருங்கிணைந்த தொழில் கொள்கை தேவை :‘அசோசெம்’ அமைப்பு வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2017
07:20

சண்டிகர்:‘சிறிய, நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில், அனைத்து பிரி­வு­களின் வளர்ச்­சியை உள்­ள­டக்­கிய தொழில் கொள்­கையை உரு­வாக்க வேண்­டும்’ என, இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்­பான, ‘அசோ­செம்’ தெரி­வித்து உள்­ளது.
இந்த கூட்­ட­மைப்பு, ‘டாரி’ என்ற அமைப்­பு­டன் இணைந்து, பஞ்­சாப் தொழில் வளர்ச்­சிக்­காக வெளி­யிட்­டு உள்ள ஆய்­வ­றிக்கை:விவ­சா­யம், ஜவுளி, தக­வல் தொழில்­நுட்­பம் உள்­ளிட்ட பல்­வேறு தொழில்­கள், மாநி­லத்­தின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, மிக­வும் இன்­றி­ய­மை­யா­தவை என்­ப­தால், அவற்றை உள்­ள­டக்­கிய, ஒருங்­கி­ணைந்த தொழில் கொள்­கையை உரு­வாக்க வேண்­டும்.
விவசாயம்:நெல் பயி­ரி­டும் பரப்பை குறைத்து, தற்­போது, 3.4 சத­வீ­த­மாக உள்ள, அதிக மதிப்­பு­மிக்க பருத்தி, பழங்­கள், காய்­க­றி­கள், மஞ்­சள் உள்­ளிட்­ட­வற்­றின் பயிர் பரப்பை அதி­க­ரிக்க வேண்­டும். குறைந்த நீர் தேவைப்­படும் பருப்பு, எண்­ணெய் வித்து, பருத்தி, சோளம், காய்­க­றி­கள், பழங்­கள் ஆகி­ய­வற்­றின் சாகு­ப­டியை ஊக்­கு­விக்க வேண்­டும்.
தர­மான விதை­களை விவ­சா­யி­க­ளுக்கு வழங்கி, சந்தை சார்ந்த செயல் திட்­டம் மூலம், அவர்­களின் விளை பொரு­ளுக்கு உரிய விலை கிடைக்க ஆவன செய்­தால், விவ­சா­யி­கள் பயன் பெறு­வர். மின் கொள்­கையை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும்.ஆயத் தீர்வை, பசு வரி போன்­ற­வற்றை நீக்கி, குறைந்த விலை­யில் புதிய தொழிற்­சா­லை­க­ளுக்கு மின்­சா­ரம் வழங்க வேண்­டும்.இச்­ச­லுகை, தற்­போ­துள்ள தொழிற்­சா­லை­க­ளுக்­கும் கிடைக்க வேண்­டும். அமிர்­த­ச­ரஸ், ஜலந்­தர், லுாதியானா நக­ரங்­களில், தக­வல் தொழில்­நுட்­பம் மற்­றும் தக­வல் தொழில்­நுட்­பம் சார்ந்த தொழில்­களை உரு­வாக்­கும் திட்­டத்தை, விரை­வு­ப­டுத்த வேண்­டும்.
பதிந்தா சுத்­தி­க­ரிப்பு பகு­தி­யைச் சுற்றி, பெட்­ரோ­கெ­மிக்­கல் தொழில் மையத்தை ஏற்­ப­டுத்தி, மொகா­லிக்கு வெளியே, உயிரி தொழில்­நுட்ப பூங்­காக்­கள் மற்­றும் ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­க­ளுக்­கான வளர்ப்­ப­கங்­களை அமைப்­பது, மாநில வளர்ச்­சிக்கு துணை நிற்­கும்.சேவை துறை:அனைத்து நிர்­வாக ரீதி­யி­லான அனு­ம­தி­களை, தக­வல் தொழில்­நுட்ப வசதி மூலம், ஒற்றை சாளர முறை­யில், விரைந்து பெறும் நடை­மு­றையை அமல்­ப­டுத்த வேண்­டும். சேவை துறை­யில், வங்கி மற்­றும் நிதிச் சேவை பிரி­வு­களின் வளர்ச்­சிக்கு நிக­ராக, 23.5 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்ள, வர்த்­த­கம், ஓட்­டல் உள்­ளிட்ட பிரி­வு­களில், வளர்ச்சி குறைந்­துள்­ளது.
ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­பு­களை கொண்­டுள்ள சுற்­றுலா துறை, தொடர்ந்து புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கிறது. மாநி­லத்­தில், புற்­று­நோய், போதை பழக்­கம் ஆகி­யவை அதிர்ச்சி அளிக்­கும் வகை­யில் அதி­க­ரித்­துள்ளன. விண்ணை முட்­டும் அள­விற்கு, மருத்­து­வச் செலவு உயர்ந்­துள்­ளது.
இப்­பி­ரச்­னை­களை எல்­லாம் தீர்க்க, தெளி­வான ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு கொள்கை, அர­சி­டம் இல்லை. இவற்­றுக்­கெல்­லாம் தீர்வு காணும் வகை­யில், ஒருங்­கி­ணைந்த தொழில் கொள்­கையை, அரசு உரு­வாக்கி செயல்­ப­டுத்த வேண்­டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)