பதிவு செய்த நாள்
21 ஜூன்2017
23:48
டெட்ராய்ட் : அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஊபர்’ டெக்னாலஜிஸ் நிறுவனம், வாடகை கார் சேவையை, பயணியர் பெற உதவி வருகிறது.
டிராவிஸ் கலானிக், தன் நண்பர் காட் காம்ப் உடன் இணைந்து, 2009ல் துவக்கிய இந்நிறுவனம், குறுகிய காலத்தில், 7,000 கோடி டாலர் மதிப்புள்ளதாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக, அலுவலக பணியாளர்களின் பாலியல் புகார்கள், சாப்ட்வேர் மோசடி, அரசு விதிமீறல் என, பல நெருக்கடிகளுக்கு, ஊபர் ஆளாகி உள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரியத் துவங்கியதை அடுத்து, முதலீட்டாளர்கள், டிராவிஸ் கலானிக் பதவி விலக வேண்டும் என, வற்புறுத்தி வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில், படகு விபத்தில், டிராவிஸ் கலானிக் தாய் பலியானார். இதனால், பெரிதும் பாதிக்கப்பட்ட டிராவிஸ், நேற்று முன்தினம், ஊபர் நிறுவனத்தில் வகித்து வந்த, சி.இ.ஓ., எனப்படும், தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகினார். எனினும், இயக்குனர் குழுவில் நீடிக்கும் இவர், ஊபர் வளர்ச்சிக்காக தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குவேன் என, தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|