பதிவு செய்த நாள்
25 ஜூன்2017
06:06
மும்பை : அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான, ‘தி கேம்பிரிட்ஜ் குரூப்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:அமெரிக்காவில், ஐ.டி., துறையில், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக, டி.சி.எஸ்., நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனம், 2012 – 2016 வரையிலான, ஐந்து ஆண்டு காலத்தில், 12,500க்கும் மேற்பட்ட, அமெரிக்க பணியாளர்களை பணிக்கு அமர்த்தி உள்ளது. இதே காலத்தில், அமெரிக்க பணியாளர் நியமன வளர்ச்சியில், இந்நிறுவனம், 57 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.வேலைவாய்ப்பு, புதிய கண்டுபிடிப்பு ஆய்வகங்கள் உள்ளிட்ட பல திட்டங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில், 300 கோடி டாலரை, டி.சி.எஸ்., முதலீடு செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களை பணிக்கு அமர்த்துவதில், டி.சி.எஸ்., அதிக ஆர்வம் காட்டுகிறது. மேலும், நடப்பாண்டில், அதிக பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|