பதிவு செய்த நாள்
26 ஜூலை2017
23:40

நாங்கள், எங்களது பொருட்களை விற்று தருவதற்கு முகவர்களை வெளி மாநிலத்தில் வைத்துள்ளோம். எங்களது முகவர்களுக்கு, விற்பனைக்காக பொருட்களை அனுப்பி வைத்தால், அதற்கும், ஜி.எஸ்.டி., உண்டா?– கீதா, மன்னார்குடிஆம். முகவர்களுக்கு நீங்கள் பொருட்களை அனுப்பினாலும், அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டும். வெளி மாநிலத்திற்கு அனுப்பும் காரணத்தால், நீங்கள், ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி., (ஐ.ஜி.எஸ்.டி.,) விதிக்க வேண்டும்.
நாங்கள், எங்கள் வீட்டு மாடியில், மொபைல் போன் டவர் வைத்துக் கொள்ள அனுமதி தந்து, அதற்கு வாடகை வசூல் செய்து வருகிறோம். இதற்கு, ஜி.எஸ்.டி., உண்டா? ஆம் எனில், எவ்வளவு சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டும்? எங்களுக்கு வேறு எந்த வருமானமும் இல்லை.– முத்துகிருஷ்ண சர்மா, சென்னைநீங்கள், வாடகையாக வசூலிக்கும் தொகை ஆண்டிற்கு, 20 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், நீங்கள் அதற்கு வரி வசூல் செய்ய வேண்டாம். அதை தாண்டும்பட்சத்தில், ஜி.எஸ்.டி., பதிவு செய்து, 18 சதவீதம் வரி வசூல் செய்து, அரசுக்கு செலுத்த வேண்டும்.
ஐயா, ஒருவர் விதிகளை மீறி, இணைப்பு வரி திட்டத்தை (காம்போசிஷன் திட்டம்) தேர்வு செய்தால், அதற்கு சட்ட பின்விளைவுகள் என்ன?– மருது, சாத்தனுார்வரி செலுத்தும் நபர், தனக்கு தகுதியில்லை என்று தெரிந்தே, இணைப்பு வரி திட்டத்தின் கீழ் வரி செலுத்தினார் என்றால், அந்த நபர் தண்டனைக்குரியவர். மேலும், அபராதம் மற்றும் தண்டனையை தீர்மானிக்க, சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி., பதிவு செய்யப்பட்ட நபர், எந்த வகையான கணக்கு சார்ந்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்? இதை பற்றி சற்று விரிவாக விளக்கவும்.– விமல்நாத், பெங்களூருஒவ்வொரு பதிவு பெற்ற நபரும், பின் வரும் ஆவணங்களை, தன் முதன்மை வணிக இடத்தில் வைத்திருப்பது அவசியம்.* சரக்குகள் உற்பத்தி மற்றும் தயாரித்தலின் விபரங்கள்* சரக்கு அல்லது சேவையின் வழங்கல்களின் விபரங்கள்* சரக்கு அல்லது சேவையின் கொள்முதல் விபரங்கள்* கையிருப்பு சரக்கின் விபரங்கள்* சரக்கு அல்லது சேவையின் உள்ளீட்டு வரி பயனின் விபரங்கள்* செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்பட வேண்டிய வரியின் விபரங்கள்.மேற்கூறிய விபரங்கள் குறித்த கணக்கை உண்மையாகவும், சரியானதாகவும் பேணி வருவது அவசியம். இத்தகைய கணக்கு புத்தகங்களை, சராசரியாக, 6 ஆண்டு காலங்களுக்கு வைத்திருத்தல் அவசியம்.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள உணவகங்கள் கூட, ஜி.எஸ்.டி., வசூல் செய்கின்றன. முன், இதற்கு வரி விலக்கு இருந்தது. இது, சிறப்பு பொருளாதார மண்டலத்தை பாதிக்காதா?– ஜி.சந்தர், டி.சி.எஸ்.,சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள உணவகங்கள், அங்கே உள்ள நிறுவனத்திற்கு உணவை சப்ளை செய்தால், அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படாது. ஆனால், அங்கே தனியாக உணவுக்கூடம் வைத்து, நுகர்வோருக்கு உணவு விற்பனையில் ஈடுபட்டால், அதற்கு, ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டும். இத்தகைய நிலைப்பாடு, சிறப்பு பொருளாதார மண்டலத்தை எந்த வகையிலும் பாதிக்காது.
‘ரீபண்டு’ தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க கால வரைமுறை உள்ளதா?– செல்லப்பா, விருகம்பாக்கம்ஆம். ‘ரீபண்டு’ கோரும் விண்ணப்பங்களை பரிவர்த்தனை தேதியிலிருந்து, இரு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கலாம்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|