பதிவு செய்த நாள்
31 ஜூலை2017
15:36

புதுடில்லி : வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
2016 -17 ம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 ம் தேதி கடைசி தேதி என வருமான வரித்துறை ஏற்கனவே அறிவித்திரந்தது. மேலும் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் தங்களின் வருமான வரியை மின்னணு முறையில் செலுத்தி விட்டனர்.
வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்ற முறை ஜூலை 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கடைசி நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய பெரும்பாலானவர்கள் வருமான வரித்துறை இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடைசி நிமிட கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இத்தகவல் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|