தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ... கரன்சி நிலவரம் கரன்சி நிலவரம் ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2017
23:49

நான், ஒரு நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­கி­றேன். என் வரு­டாந்­திர சம்­ப­ளத்­தில், ‘புரொ­பெ­ஷ­னல் வரி’ எனப்­படும், தொழில்­பூர்வ வரி பிடித்­தம் செய்­கின்­ற­னர். ஜி.எஸ்.டி., வந்­த­பின், அது ரத்து செய்­யப்­ப­டுமா?– கிருஷ்­ணன் பாலாஜி, அம்பைபொருட்­கள் மற்­றும் சேவை­கள் மீதான வரி அனைத்­தும் ஒரு­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு, ஜி.எஸ்.டி.,யை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ள­னர். ஆனால், தொழில்­பூர்வ வரி­யா­னது, ஜி.எஸ்.டி.,யின் வரம்­பிற்­குள் வராது. எனவே, உங்­களின் சம்­ப­ளத்­தில் பிடித்­தம் செய்­யும் வரி­யா­னது தொட­ரும். நீங்­கள், வரு­மான வரி செலுத்­தும் போது, தொழில்­பூர்வ வரி செலுத்­திய தொகையை கழித்­துக் கொள்­ள­லாம்.
சார், நாங்­கள் மொத்த விற்­பனை முறை­யில், மழைக்­கான, ‘ரெயின் கோட்’டுகளை விற்­பனை செய்து வரு­கி­றோம். சில நேரங்­களில், ஒரு­சில மாதங்­க­ளுக்கு விற்­ப­னையே ஆகா­மல் கூட இருக்­கும். அவ்­வாறு விற்­பனை இல்­லாத மாதங்­களில் கூட, ஜி.எஸ்.டி., ரிட்­டர்ன் தாக்­கல் செய்ய வேண்­டுமா?– ரமேஷ், முசிறிஆம். பதிவு செய்­யப்­பட்ட நபர், அந்த மாதத்­தில் வழங்­க­லில் ஈடு­ப­ட­வில்லை என்­றா­லும் கூட, ரிட்­டர்ன் படி­வத்தை, உரிய தவ­ணை­யில் தாக்­கல் செய்ய வேண்­டும்.
ஜி.எஸ்.டி., புதிய பதிவை பெறு­வ­தற்­காக, ஆன்­லைனில் விண்­ணப்­பித்த பின், சம்­பந்­தப்­பட்ட அனைத்து ஆவ­ணங்­க­ளை­யும், நேரிலோ அல்­லது தபா­லிலோ அனுப்ப வேண்­டுமா?– குமாரி, வந்­த­வாசிஜி.எஸ்.டி., அமைப்­பில், அனைத்து ஆவ­ணங்­களின் தாக்­க­லும் மின்­னணு முறை­யில் உள்ள கார­ணத்­தால், ‘ஆன்­லைன்’ விண்­ணப்பம் மட்­டும் போது­மா­னது. நேரிலோ அல்­லது தபா­லிலோ, எந்த ஆவ­ணத்­தை­யும் சமர்ப்­பிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.
சார், நாங்­கள், பளிங்­கி­னால் செய்­யப்­பட்ட அழ­கிய சிற்­பங்­கள் மற்­றும் பரிசு பொருட்­களை தயா­ரித்து வரு­கி­றோம். இதற்கு எத்­தனை சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும்?– ஆத­வன், மதுரைநீங்­கள், மேற்­கூ­றிய பளிங்­கி­னால் செய்­யப்­பட்ட பொருட்­க­ளுக்கு, 28 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும்.
சார், ‘ஜாப் ஒர்க்’கிற்­காக பொருட்­களை அனுப்­பும் போது, அதன் கணக்கு விப­ரங்­களை, ‘ஜாப் ஒர்க்’ செய்­யும் வேலை பணி­யா­ளர் பரா­ம­ரிக்க வேண்­டுமா அல்­லது முதன்மை வழங்­கு­னர் பரா­ம­ரிக்க வேண்­டுமா?– ராம பச்­சை­யப்­பன், திண்­டி­வ­னம்ஜி.எஸ்.டி., சட்­டப்­படி, வேலை பணி­யா­ள­ருக்கு அனுப்­பிய சரக்­கு­களின் விப­ரங்­க­ளை­யும், அதை திரும்ப பெற்­ற­தற்­கான விப­ரங்­க­ளை­யும், முதன்மை வழங்­கு­னர் பரா­ம­ரிக்க வேண்­டும். அவ்­வாறு பரா­ம­ரித்­தால் மட்­டுமே, சரக்­கிற்­கான உள்­ளீட்டு வரி பயன் பெற இய­லும்.
ஐயா, எங்­க­ளுக்கு, ஜூன், 30ல், உள்­ளீட்டு வரி பயன் எது­வு­மில்லை. நாங்­கள், அர­சுக்கு அன்­றைய தேதி­யில் இருந்த கையி­ருப்பு சரக்கு விப­ரங்­களை சமர்ப்­பிக்க வேண்­டுமா?– ராம­தாஸ், செஞ்சிஉங்­க­ளுக்கு, ஜூன், 30ல், உள்­ளீட்டு வரி பயன் எது­வு­மில்­லாத நிலை­யில், நீங்­கள், அன்­றைய தேதி­யில் இருந்த கையி­ருப்பு சரக்கு விப­ரங்­களை, அர­சுக்கு சமர்ப்­பிக்க தேவை­யில்லை.
சார், நாங்­கள், பிரின்­ட­ருக்­கான உதிரி பாகங்­களை வியா­பா­ரம் செய்து வரு­கி­றோம். முன், ‘வாட்’ வரி பதிவு செய்­ய­வில்லை. இப்­போது, ஜி.எஸ்.டி., பதி­விற்கு விண்­ணப்­பித்து உள்­ளோம். ஜூன், 30ல், எங்­க­ளி­ட­மி­ருந்த கையி­ருப்பு சரக்­கிற்கு, உள்­ளீட்டு வரி பெற இய­லுமா?– இளங்கோ, கம்­பம்இய­லும். முன், ‘வாட்’ பதிவு பெறாத நிலை­யி­லும் கூட, நீங்­கள் கையி­ருப்பு சரக்­கிற்­கான உள்­ளீட்டு வரி பயனை பெற முடி­யும். நீங்­கள் அதற்­காக, ஜி.எஸ்.டி., ட்ரான் – 1 எனும் படி­வத்­தில் விண்­ணப்­பிக்க வேண்­டும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)