தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு ... நிறுவனங்கள் பதிவு நீக்கம்; மூன்று நகரங்கள் முன்னிலை நிறுவனங்கள் பதிவு நீக்கம்; மூன்று நகரங்கள் முன்னிலை ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2017
07:11

சார், வேலை பணி­யா­ள­ரும், பணி அளிப்­ப­வ­ரும் ஒரே மாநி­லத்­தில் தான் இருந்­தாக வேண்­டுமா? வெளி மாநி­லத்­தில்உள்ள, ‘ஜாப் ஒர்க்’ பணி­யா­ள­ருக்கு அனுப்ப தடை ஏதே­னும் உள்­ளதா? தெளி­வு­ப­டுத்­துங்­கள்.– சுதா­கர், வாணி­யம்­பாடிஜி.எஸ்.டி., சட்­டத்­தில், அப்­படி எது­வு­மில்லை. பணி அளிப்­ப­வ­ரும், வேலை பணி­யா­ள­ரும் ஒரே மாநி­லத்­தி­லும் இருக்­க­லாம் அல்­லது வெவ்­வேறு மாநி­லத்­தி­லும் இருக்­க­லாம். எந்த தடை­யும் கிடை­யாது.
ஐயா, தவணை கொள்­மு­தல் திட்­டத்­தில் வழங்­கப்­படும் சரக்­கு­கள், சரக்கு வழங்­க­லாக கரு­தப்­ப­டுமா அல்­லது சேவை வழங்­க­லாக கரு­தப்­ப­டுமா? எனக்கு குழப்­ப­மாக உள்­ளது.– சந்­தி­ரன், திண்­டுக்­கல்எந்­த­வித குழப்­ப­மும் தேவை­யில்லை. தவணை கொள்­மு­தல் திட்­டத்­தில் வழங்­கப்­படும் சரக்­கு­கள், சரக்கு வழங்­க­லா­கவே கரு­தப்­படும். ஏனெ­னில், அதில், பொரு­ளின் உரி­மை­யா­ளர் மாற்­றம் வருங்­கால தேதி­யில் நிகழ்­கிறது. அது, சேவை­யாக கரு­தப்­பட மாட்­டாது.
சார், ‘ஷேர் மார்க்­கெட்’டிலி­ருந்து ஒரு கம்­பெ­னி­யின் பங்­கு­களை வாங்­கும் போது, எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்­கப்­படும்?– சேகர், ஆரணிபங்­குச் சந்­தை­யில், கம்­பெ­னி­யின் பங்­கு­களை வாங்­கு­வ­தற்கு, ஜி.எஸ்.டி.,யிலி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. எனவே, இத்­த­கைய பரி­வர்த்­த­னைக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­பட மாட்­டாது.
ஐயா, ஜி.எஸ்.டி., சட்­டத்­தின்­படி, ஒரு பொருளை மூல­தன சரக்­காக கருத விதி ஏதும் உள்­ளதா?– கர்­ணன், பழ­வேற்­காடுசென்­வாட் விதி­களின் கீழ், இது, முன் வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது, ஜி.எஸ்.டி., சட்­டத்­தி­லேயே, இதற்­கான வரை­முறை விளக்­கம் அளித்­துள்­ள­னர். மூல­தன சரக்­கு­கள் என்­பது, பதிவு செய்­யப்­பட்ட நப­ரின் வரவு – செலவு புத்­த­கத்­தில், மூல­த­ன­மாக்­கப்­பட்­ட­தன் (கேப்­பிட்­டல்) சரக்­கு­களை குறிக்­கும். அதற்­கான உள்­ளீட்டு வரி பயன் முழு­வ­தை­யும் பெற்­றுக் கொள்­ள­லாம்.
உற்­பத்­தி­யா­ளர்­கள் மற்­றும் சேவை வழங்­கு­ப­வர்­க­ளால், இணைப்பு வரி திட்­டத்­தில் சலுகை பெற முடி­யுமா?– வனிதா, பர­மக்­குடிஉற்­பத்­தி­யா­ளர்­கள், தொகுப்பு வரி திட்­டத்தை தேர்வு செய்ய முடி­யும். உண­வ­கங்­க­ளைத் தவிர, மற்ற சேவை­க­ளுக்கு இத்­திட்­டத்தை பெற முடி­யாது.
‘கன்­சல்­ட்டிங்’ துறை­யில் பணி செய்து வரு­கி­றேன். என் வரு­மா­னம், 20 லட்­சம் ரூபாயை தாண்­டும் போது பதிவு செய்­தால் போதுமா அல்­லது சேவை புரி­யும் போது பதிவு செய்ய வேண்­டுமா?– கதிர்­வேல், எண்­ணுார்உங்­களின் சேவை வரு­மா­னம், 20 லட்­சம் ரூபாயை தாண்­டும் போது பதிவு செய்­தால் போதும். ஆனால், அது­வரை நீங்­கள் வரி வசூல் செய்­யக் கூடாது. மேலும், நீங்­கள் வெளி மாநில வழங்­க­லில் ஈடு­பட முடி­யாது.
ஐயா, நாங்­கள், தகர டின்­கள் மற்­றும் தக­ரத்­தின் வேஸ்ட் மற்­றும் ஸ்க்­ராப் பொருட்­கள் மொத்த வழங்­க­லில் ஈடு­பட்­டுள்­ளோம். இதற்­கு­ரிய, எச்.எஸ்.என்., குறி­யீடு என்ன? இதற்கு, எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும்?– விக்­ரம், சென்னைதகர டின்­கள் மற்­றும் ஸ்க்­ராப் பொருட்­க­ளுக்கு, நீங்­கள், 18 சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும். இது, 8002 எனும், எச்.எஸ்.என். குறி­யீட்­டின் கீழ் வரும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)