கரன்சி நிலவரம்: 17.8.17கரன்சி நிலவரம்: 17.8.17 ... ரிலையன்ஸ் டிபென்ஸ் பெயர் மாறுகிறது ரிலையன்ஸ் டிபென்ஸ் பெயர் மாறுகிறது ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2017
00:08

சார், ஜி.எஸ்.டி., வந்த பின், தற்­போது பொருட்­களை இறக்­கு­மதி செய்­யும் போது, ஐ.இ.சி., கோடு சமர்ப்­பிக்க வேண்­டுமா அல்­லது ஜி.எஸ்.டி., எண்ணை சமர்ப்­பிக்க வேண்­டுமா?– குத்­பு­தீன், வேலுார்தற்­போது, நீங்­கள் ஏற்­று­மதி அல்­லது இறக்­கு­மதி செய்­யும் போது, ஐ.இ.சி., கோடு – ஜி.எஸ்.டி., எண் இரண்­டை­யும் சமர்ப்­பிக்க வேண்­டும். அனைத்து விப­ரங்­களும், மின்­னணு முறை­யில் இணைக்­கப்­பட்ட பின், ஜி.எஸ்.டி., எண்ணை மட்­டும் சமர்ப்­பித்­தால் போது­மா­னது.
நாங்­கள், ராணிப்­பேட்­டை­யில், ‘கேக் ஷாப்’ வைத்­துள்­ளோம். இதில், கேக், இனிப்பு மற்­றும் கார வகை­களை விற்­பனை செய்­கி­றோம். நாங்­கள், விற்­ப­னை­யின் போது, எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும்? எங்­க­ளால், இணக்க வரி திட்­டத்­தில் சேர இய­லுமா?– ஆசிக், வாலாஜாநீங்­கள், ‘கேக்’ வகை­க­ளுக்கு, 18 சத­வீத வரி­யும், கார வகை­க­ளுக்கு, 12 சத­வீத வரி­யும், இனிப்பு வகை­க­ளுக்கு, 5 சத­வீத வரி­யும் வசூல் செய்து செலுத்த வேண்­டும். நீங்­கள், இணக்க வரி­யின் உச்ச வரம்­பான, 75 லட்­சம் ரூபாயை தாண்­டா­மல் இருந்­தால், உங்­க­ளால் இணக்க வரி திட்­டத்­தில் சேர முடி­யும்.
நாங்­கள், திரு­மண பத்­தி­ரிகை டிசைன் கடை நடத்தி வரு­கி­றோம். திரு­மண பத்­தி­ரிகை அச்­ச­டித்து தரும் போது, அதற்கு எத்­தனை சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும்?– நட­ரா­ஜன், நெல்லைநீங்­கள் இத்­த­கைய சப்­ளைக்கு, 12 சத­வீத வரி விதிக்க வேண்­டும்.
ஐயா, நாங்­கள், தஞ்­சை­யில் அரிசி கிடங்கு வைத்­துள்­ளோம். விவ­சா­யி­களும், தர­கர்­களும், எங்­க­ளு­டைய இடத்­தில் அரிசி மூட்­டை­களை வைத்து, அதற்கு வாடகை வழங்­கு­கின்­ற­னர். வாடகை தொகை­யில், நாங்­கள் எவ்­வ­ளவு, ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும்?– விஸ்­வ­நா­தன், தஞ்சைஅரிசி சேமிக்­கும் கிடங்­கிற்கு, ஜி.எஸ்.டி., விதிப்­பி­லி­ருந்து விலக்கு அளித்­துள்­ள­னர். எனவே, நீங்­கள் பெறும் வாடகை தொகைக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டாது.
நான், ஜி.எஸ்.டி., புதிய பதி­விற்கு விண்­ணப்­பித்து உள்­ளேன். தற்­போது, என் வரி விலைப் பட்­டி­ய­லில், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய இய­லுமா?– ராஜ­வீ­ரன், மரு­த­மலைஜி.எஸ்.டி., பதி­வெண் வந்த பின் தான், நீங்­கள் வரி வசூல் செய்ய வேண்­டும். அதற்கு முன், வசூல் செய்­யக் கூடாது. வரி விலைப் பட்­டி­ய­லி­லும், ஜி.எஸ்.டி.,யை தனி­யாக குறிப்­பிட முடி­யாது.
நாங்­கள், அறக்­கட்­டளை ஒன்றை நடத்தி வரு­கி­றோம். அதற்கு, வரு­மான வரி விலக்­கும் பெற்­று­விட்­டோம். அறக்­கட்­டளை மூலம் செய்­யப்­படும் வழங்­க­லுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டுமா?– முகி­லன், ​ஆத்­துார்வரு­மான வரித்­து­றை­யால் விலக்கு பெற்ற, ஓர் அமைப்பு செயல்­ப­டுத்­தும் தொண்டு நட­வ­டிக்­கை­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யிலி­ருந்து முழு­மை­யாக விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.
வழங்­க­லின் போது, இடத்­தின் முக்­கி­யத்­து­வம் என்ன? ஒவ்­வொரு வரி விலைப் பட்­டி­ய­லி­லும், வழங்­க­லின் இடம் அவ­சி­யம் குறிப்­பிட வேண்­டுமா?– பிரிட்டோ, வள­ச­ர­வாக்­கம்ஜி.எஸ்.டி., சட்­டப்­படி, வழங்­க­லின் இடம் ஒரு முக்­கிய அங்­கம் வகிக்­கிறது. வழங்­கு­ன­ரின் இட­மும், வழங்­க­லின் இட­மும் வேறு வேறு மாநி­ல­மாக இருந்­தால், ஒருங்­கி­ணைந்த, ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும். உங்­கள் கேள்­வி­யில் உள்­ள­படி, ஒவ்­வொரு வரி விலைப் பட்­டி­ய­லி­லும், வழங்­க­லின் இடம் குறிப்­பிட வேண்­டும் என்ற அவ­சி­ய­மில்லை. வெளி மாநில வழங்­க­லின் வரி விலைப் பட்­டி­ய­லில், இடத்தை அவ­சி­யம் குறிப்­பிட வேண்­டும்.
சார், நாங்­கள், கழிவு சேக­ரிப்பு மற்­றும் கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு மற்­றும் பிற சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு சேவை­களில், எங்­கள் நிறு­வ­னம் மூலம் ஈடு­பட்­டுள்­ளோம். இதற்கு, எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும்? சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு சேவைக்கு, வரி விலக்கு உள்­ளதா?– ஆதித்யா, பெரம்­பூர்நீங்­கள் கூறிய அனைத்து சேவை­க­ளுக்­கும், 18 சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும். நீங்­கள் விரும்­பு­வது போல், வரிச்­ச­லுகை ஏது­மில்லை. உங்­க­ளால் அனைத்து சேவை­க­ளுக்­கும், உள்­ளீட்டு வரி பயன், 100 சத­வீ­தம் பெற முடி­யும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)