கரன்சி நிலவரம்கரன்சி நிலவரம் ... ‘இ – வாலட்’ சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம் ‘இ – வாலட்’ சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம் ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2017
07:25

நான், ‘கூரி­யர்’ தொழில் செய்து வரு­கி­றேன். இதற்கு எத்­தனை சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும்? வழங்­க­லின் இடத்தை, எவ்­வாறு கணக்­கிட வேண்­டும்?– சூர்யா, நந்­தி­யம்­பாக்­கம்நீங்­கள் செய்­யும் இந்த வழங்­க­லுக்கு, 18 சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும். வழங்­க­லின் இட­மா­னது, பெறு­நரை பொறுத்து நிர்­ண­யிக்­கப்­படும். பெறு­நர் பதிவு பெற்ற நபர் என்­றால், அவ­ரு­டைய இருப்­பி­டம் வழங்­க­லின் இட­மாக கரு­தப்­படும். பெறு­நர் பதிவு செய்­யாத நபர் என்­றால், அனுப்­பு­வ­தற்­காக பொருட்­கள் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­கிற இடம், வழங்­க­லின் இட­மாக கரு­தப்­படும்.
ஐயா, ஜி.எஸ்.டி., ​நெட்­வொர்க் என்­றால் என்ன? இது அர­சாங்க நிறு­வ­னமா?– தேவகி, விழுப்­பு­ரம்ஜி.எஸ்.டி., அமைப்­பா­னது, மின்­னணு முறை­யில் இணைக்­கப்­பட்ட தொழில்­நுட்ப திறன் கொண்­டது. இத்­த­கைய மின்­னணு உள்­கட்­ட­மைப்பை உரு­வாக்­க­வும், அதை பரா­ம­ரிக்­க­வும் ஏற்­ப­டுத்­தப்­பட்ட நிறு­வ­னமே, ஜி.எஸ்.டி.​, ​நெட்­வொர்க் அமைப்­பா­கும். இது, அரசு சாரா, லாப நோக்­க­மற்ற,​ கம்­பெனி சட்­டத்­தின் கீழ் உரு­வாக்­கப்­பட்ட நிறு­வ­ன­மா­கும். இது, ஜி.எஸ்.டி., பதிவு, பணம் செலுத்­து­தல், ரிட்­டர்ன் படி­வத்தை கையா­ளு­தல் போன்ற முக்­கிய ​பணி­களை கையா­ளும்.
ஐயா, ஜி.எஸ்.டி., சட்ட ​விதி­யின்­படி, ​அரசு அதி­கா­ரி­க­ளால் பொருட்­களை பறி­மு­தல் செய்­வ­தற்கு அதி­கா­ரம் உள்­ளதா? ஆம் எனில், எந்­தெந்த சந்­தர்ப்­பங்­களில் பறி­மு­தல் செய்ய முடி­யும்?– அகஸ்­டின், பர­மக்­குடிஜி.எஸ்.டி., அதி­கா­ரி­க­ளால், பொருட்­களை பறி­மு­தல் செய்ய முடி­யும். ஜி.எஸ்.டி., சட்ட விதி­க­ளின்­படி, கீழ்­கண்ட சந்­தர்ப்­பங்­களில், பொருட்­களை பறி­மு­தல் செய்ய இய­லும்.l ஜி.எஸ்.டி., சட்ட விதி­க­ளுக்கு புறம்­பாக, பொருட்­களை பெறும் போதோ அல்­லது அனுப்­பும் போதோ, வரி ஏய்ப்­பில் ஈடு­ப­டு­தல்​l செலுத்த வேண்­டிய வரியை கணக்­கில் கொள்ள தவ­று­தல்l பதிவு பெறா­மல், ஜி.எஸ்.டி., வசூ­லித்­தல்l நேர­டி­யா­கவோ அல்­லது மறை­மு­க­மா­கவோ வரி ஏய்ப்­பில் ஈடு­ப­டு­தல்.
பதிவு செய்­யப்­பட்ட நபர், வரி வசூல் செய்து, அதை செலுத்த தவ­றி­னால், என்­னென்ன பின்­வி­ளை­வு­கள் நேரி­டும்?– ஜெய­சீ­லன், மணலிஜி.எஸ்.டி., வசூல் செய்த ஒவ்­வொ­ரு­வ­ரும், கட்­டா­யம், குறித்த தவணை தேதி­யில், அர­சுக்கு செலுத்த வேண்­டும். அவ்­வாறு செய்ய தவ­றி­னால், அரசு அதி­கா­ரி­க­ளால்,​ அறி­விப்­பாணை வழங்­கப்­பட்டு, வட்டி மற்­றும் அப­ராத தொகை­யு­டன் சேர்த்து, ஜி.எஸ்.டி., தொகை வசூ­லிக்­கப்­படும்.
ஐயா, ‘வாட்’ சட்­டப்­படி, எனக்கு தற்­போது, ‘ரீபண்டு’ தொகை நிலு­வை­யில் உள்­ளது. அந்த தொகை, ஜி.எஸ்.டி., அமைப்­பில், எஸ்.ஜி.எஸ்.டி., உள்­ளீட்டு வரி பய­னாக கிடைக்க பெறுமா?– கேச­வன், திருப்­பு­வ­னம்ஜி.எஸ்.டி., சட்­டம்​ வந்த பின், ஏற்­க­னவே, ​பழைய வரி சட்­டத்­தின்­படி ​நிலு­வை­யி­லி­ருந்த, ‘ரீபண்டு’ தொகை உள்­ளீட்டு வரி பய­னாக கிடைக்க பெறாது. மாறாக, உறுதி செய்­யப்­பட்ட அந்­தத் தொகை, உங்­க­ளது வங்­கிக் கணக்­கில் வரவு வைக்­கப்­படும்.
சார், நாங்­கள், கூட்­டுப் பெருங்­கா­யம் உற்­பத்தி செய்­கி­றோம். இது, எந்த, எச்.எஸ்.என்., குறி­யீட்­டில் வரும்? எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும்?– கைலாஷ், கிருஷ்­ண­கிரிநீங்­கள் குறிப்­பிட்ட பொரு­ளுக்கு, 5 சத­வீ­தம் வரி வரும். மேலும் அது, 1301 என்ற, எச்.எஸ்.என்., குறி­யீட்­டில் வகைப்­ப­டுத்­தப்­படும்.
ஜி.எஸ்.டி.ஆர்., 3பி ரிட்­டர்ன் படிவ தாக்­க­லுக்கு, ஜி.எஸ்.டி.ஆர்., 1 – ஜி.எஸ்.டி.ஆர்., 2 ஆகி­ய­வற்­றின் விப­ரங்­களும் பதி­வேற்­றம் செய்ய வேண்­டுமா?– சிவ­நே­சன், ராமா­பு­ரம்ஜி.எஸ்.டி.ஆர்., 1 படி­வத்­திற்கு மாற்­றாக, எளிய முறை­யி­லான, ஜி.எஸ்.டி.ஆர்., 3பி படி­வத்தை தாக்­கல் செய்ய வேண்­டும். அதற்கு, ஜி.எஸ்.டி.ஆர்., 1 – ஜி.எஸ்.டி.ஆர்., 2 ஆகி­ய­வற்­றின் விப­ரங்­களை, பதி­வேற்­றம் செய்ய தேவை­யில்லை.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)