கரன்சி நிலவரம்கரன்சி நிலவரம் ... 43 லட்சம் பேரை இழந்த 4 மொபைல் போன் சேவை நிறுவனங்கள் 43 லட்சம் பேரை இழந்த 4 மொபைல் போன் சேவை நிறுவனங்கள் ...
ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2017
23:51

கரும்­பி­னால் பெறப்­படும் வெல்­லத்­திற்­கும், பனை வெல்­லத்­திற்­கும், ஜி.எஸ்.டி., விதிப்­பில் வித்­தி­யா­சம் உள்­ளதா? இதற்கு வரி எத்­தனை சத­வீ­தம்?– செந்­தில்­வேல், விரு­து­ந­கர்நீங்­கள் மேற்­கூ­றிய இரண்டு பொருட்­க­ளுக்­குமே, வரி விதிப்பு இல்லை.

முந்­தைய சட்­டத்­தில் ​இருந்த உள்­ளீட்டு வரி பயனை பெற, தாக்­கல் செய்ய வேண்­டிய, டிரான் – 1 படி­வத்­திற்­கான ​​தவணை தேதி, ​செப்., ​30 என, தெரி­வித்­தி­ருந்­தீர்­கள். தற்­போது, ​நாளைக்­குள், 3பி படி­வம் தாக்­கல் செய்ய வேண்­டும் என்­றால், முந்­தைய உள்­ளீட்டு வரி பயனை, எவ்­வாறு எடுத்­துக் கொள்ள வேண்­டும்? உங்­களின் விளக்­கத்­திற்­காக காத்­தி­ருக்­கி­றோம்.– ரமேஷ், சென்னை​இது, மிக முக்­கி­ய­மான கேள்வி. இதற்­கான பதிலை, சற்று விரி­வாக பார்ப்­போம். நீங்­கள், ​ஜூலை மாத வழங்­க­லில் செலுத்த வேண்­டிய தொகை­யில், முந்­தைய உள்­ளீட்டு வரி பயனை உப­யோ­கிக்க வேண்­டும் என்­றால், முத­லில், ​டிரான் – 1 படி­வம் தாக்­கல் செய்ய வேண்­டும். பின், 3பி ரிட்­டர்ன் தாக்­கல் செய்ய வேண்­டும். மாறாக, தற்­போது, முந்­தைய உள்­ளீட்டு வரி பயனை உப­யோ­கிக்க வேண்​டாம் என்­றால், ​டிரான் – 1 படி­வத்தை, ​செப்., ​30க்குள் தாக்­கல் செய்து, முந்­தைய சட்­டத்­தில் இருந்த உள்­ளீட்டு வரி பய​​னை பெற­லாம்.

சார், நாங்­கள், பொருட்­களின் விற்­ப­னை­யில் ஈடு­பட்­டுஉள்­ளோம். விலைப் பட்­டி­ய­லில், எச்.எஸ்.என்., – எஸ்.ஏ.சி., இரண்டு ‘கோடு’களை குறிப்­பிட வேண்­டுமா?– கைலாஷ், பல்­லா­வ­ரம்எச்.எஸ்.என்., கோடு என்­பது, பொருட்­களின் விற்­ப­னை­யி­லும், எஸ்.ஏ.சி., கோடு என்­பது, சேவை­யின் வழங்­கல்­க­ளி­லும் குறிப்­பிட வேண்­டும். பொருட்­களின் வழங்­க­லில் ஈடு­பட்­டுள்ள நீங்­கள், உங்­க­ளது வரி விலைப் பட்­டி­ய­லில், எஸ்.ஏ.சி., கோடு குறிப்­பிட முடி­யாது.

நாங்­கள், கணினி மென்­பொ­ருள் ​உற்­பத்­தி­யில் உள்­ளோம்.​ எங்­க­ளால், ​இணக்க வரி திட்­டத்தை தேர்வு செய்ய இய­லுமா​?– அஸ்­வின், கில் நகர்மென்­பொ­ருள் உற்­பத்­தி­யா­னது, ஒரு சேவை­யாக கரு­தப்­படும்.​ எனவே, சேவை­யில் ஈடு­படும் நபர்​, (உண­வ­கங்­கள் ​தவிர​) ​இணக்க வரி ​திட்­டத்தை தேர்வு செய்ய இய­லாது.
சார், நான், நிலக்­க­டலை வியா­பா­ரம் செய்­கி­றேன். பொருளை விற்­பனை செய்­யும் போது, ​வரி ​செலுத்த வேண்­டுமா அல்­லது ​​கையி­ருப்பு ​சரக்­கிற்­கும், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்­டுமா?– ஈஸ்­வ­ரன், கோவைகையி­ருப்பு ​சரக்­கிற்கு, நீங்­கள் எந்த வரி­யும் செலுத்த தேவை இல்லை. ​வரி விதிப்­பிற்­கு­ரிய அந்த பொருளை விற்­பனை செய்­யும் போது, வரி செலுத்­தி­னால் போது­மா­னது.

முந்­தைய சட்­டத்­தின் கீழ், சேவையை புரிந்து விட்­டோம். ஆனால், அதற்கு இப்­போது தான் விலைப் பட்­டி­யல் எழுப்ப உள்­ளோம். அதற்கு, ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டுமா?– தேவ­ரா­ஜன், காஞ்­சி­பு­ரம்இதற்கு, முந்­தைய சேவை வரி திட்­டத்­தின் கீழ், வழங்­க­லின் விப­ரத்தை பொறுத்து வரி விதிக்க வேண்­டும். இத்­த­கைய சேவைக்கு, சேவை வரி ஏற்­க­னவே செலுத்­த­வில்லை என்­றால், ஜி.எஸ்.டி., விதிக்க வேண்­டும்.

ஐயா, நாங்­கள் தற்­போது, ​மோல்டு இயந்­தி­ரங்­களை ​மட்­டும் ​விற்­பனை செய்­கி­றோம். இதற்கு, ​12 ​சத­வீ­தம், ​ஜி.எஸ்.டி., வரு­கிறது. தற்­போது, 18 சதவீ​த​ம், ஜி.எஸ்.டி., ​உடைய வேறு பொருட்­களை விற்­பனை செய்ய வேண்­டும் என்­றால், அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து முன் அனு­மதி பெற வேண்­டுமா​?​– ரஞ்­சித் பெர்­னாண்டோ, சிவ­காசிஅவ்­வாறு எந்த அவ­சி­ய­மும் இல்லை. நீங்­கள், வேறு சத­வீ­தம் உள்ள ​பொருட்­களை, தாரா­ள­மாக ​விற்­பனை செய்­ய­லாம்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)