கரன்சி நிலவரம்கரன்சி நிலவரம் ... சரக்கு ஏற்றுமதிக்கு, ‘சுய சீல்’; அக்., 1 முதல் அமலாகிறது சரக்கு ஏற்றுமதிக்கு, ‘சுய சீல்’; அக்., 1 முதல் அமலாகிறது ...
ஜி.எஸ்.டி.,கேள்­வி­கள் ஆயி­ரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2017
00:10

அரசு விதிக்­கும் அப­ரா­தம் மற்­றும் தண்­டனை தொகைக்­கும், ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டுமா? ஆம் எனில், எத்­தனை சத­வீ­தம் வரி வரும்?– அன்­ப­ழ­கன், சென்னை
அர­சுக்கு செலுத்த வேண்­டிய அப­ரா­தம் மற்­றும் தண்­டனை தொகைக்கு, ஜி.எஸ்.டி., விதிக்­கப்­ப­டாது.
*****
நாங்­கள், அரிசி ஆலை­யில் இருந்து, தவிடை கொள்­மு­தல் செய்­கி­றோம். அதை எங்­க­ளி­ட­மி­ருந்து பெறு­ப­வர்­கள், கால்­நடை மற்­றும் கோழி தீவ­ன­மாக உப­யோ­கப்­ப­டுத்­து­கின்­ற­னர். அரிசி தவி­டிற்கு, ஜி.எஸ்.டி., உண்டா அல்­லது இதற்கு விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளதா?– ராம­லிங்­கம், உடு­ம­லைப்­பேட்டை
அரிசி தவி­டிற்கு, 5 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும். அதுவே, கால்­நடை மற்­றும் கோழி தீவன உப­யோ­கத்­திற்­காக விற்­பனை செய்­தால், அதற்கு, ஜி.எஸ்.டி., இல்லை.
*****
ஐயா, நான், பொதுப்­ப­ணித் துறை­யில் பதிவு பெற்ற முதல்­நிலை ஒப்­பந்­த­தா­ர­ராக உள்­ளேன். நீர்­நிலை ஆதார கட்­டு­மா­னம் மற்­றும் கட்­டட பிரி­வு­களில், வேலை­கள் செய்­கி­றேன். அதற்கு, எங்­க­ளது பில்­லில், ஜி.எஸ்.டி., – டி.டி.எஸ்., பிடித்­தம் செய்­யப்­பட வேண்­டிய சத­வீ­தம் எவ்­வ­ளவு?– ரவிச்­சந்­தி­ரன், கிருஷ்­ண­கிரி
ஜி.எஸ்.டி., சட்ட விதி­க­ளின்­படி, அரசு மற்­றும் அதை சார்ந்த குறிப்­பிட்ட நபர்­க­ளுக்கு, வரி விதிக்­கக்­கூ­டிய வழங்­கலை வழங்­கி­னால், அதற்­கான தொகையை, வழங்­கு­ன­ரி­டம் அளிக்­கும் போது, 2 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., பிடித்­தம் செய்து, மீதி தொகையை அளிக்க வேண்­டும். ஆனால், இந்த வரி பிடித்­தம் செய்­யும் முறை இன்­னும் அம­லாக்­கப்­ப­ட­வில்லை. எனவே, தங்­க­ளு­டைய பில்­லில், ஜி.எஸ்.டி., – டி.டி.எஸ்., எனும் வரி பிடித்­தம் செய்­யா­மல் தொகையை அளிப்­பர்.
*****
நாங்­கள், பழைய பிளாஸ்­டிக் மற்­றும் பிளாஸ்­டிக் கழி­வு­களை மொத்த விற்­பனை செய்­தால், எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும்?– முக­ம­து­கனி, கட­லுார்
நீங்­கள் மேற்­கூ­றிய பிளாஸ்­டிக் கழிவு வகை­க­ளுக்கு, 18 சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும். இதை, 3915 எனும், எச்.எஸ்.என்., குறி­யீட்­டில் வகைப்­ப­டுத்த வேண்­டும்.
*****
சார், வியா­பார சமூ­கத்­தி­ன­ருக்கு, ‘கேள்­வி­கள் ஆயி­ரம்’ பகுதி பெரி­தும் உத­வி­யாக இருக்­கிறது. தங்­க­ளுக்கு நன்றி. நான், தக்­காளி மொத்த விற்­ப­னை­யா­ள­ராக இருக்­கி­றேன். விவ­சா­யி­க­ளி­டம் இருந்து தக்­கா­ளியை நேர­டி­யாக வாங்­கும் போது, நான், ஜி.எஸ்.டி., செலுத்­து­வ­தில்லை. விலக்கு அளிக்­கப்­பட்ட இதற்கு, 0702 எனும் குறி­யீட்­டில் வகைப்­ப­டுத்­து­கி­றோம். இவற்றை வெளி­மா­நி­லத்­திற்கு விற்­கும் போது, வரி செலுத்த வேண்­டுமா? நான் விற்­பனை செய்­யும் போது, வரி வசூல் செய்ய வேண்­டுமா?– கிருஷ்­ண­சாமி கோவிந்­தன், சென்னை
பெரும்­பா­லான காய்­கறி வகை­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யிலி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. நீங்­கள் குறிப்­பிட்­ட­படி, தக்­காளி, 0702 எனும், எச்.எஸ்.என்., குறி­யீட்­டில் வகைப்­ப­டுத்தி, அதற்கு வரி விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. எனவே, இதற்கு நீங்­கள் கொள்­மு­த­லில் வரி செலுத்த வேண்­டாம்; விற்­ப­னை­யி­லும் வரி செலுத்த வேண்­டாம். நீங்­கள் வெளி மாநி­லத்­திற்கு விற்­றா­லும், இதற்கு வரி விதிக்­கப்­ப­டாது.
*****
சார், நாங்­கள், குண்டு மிள­காய் மொத்த விற்­ப­னை­யா­ளர்­கள். எங்­க­ளு­டைய ஆண்டு விற்­பனை, 75 லட்­சம் ரூபாய் – 80 லட்­சம் ரூபாய் வரை இருக்­கும். குண்டு மிள­காய்க்கு, ஜி.எஸ்.டி., உண்டா?– ராஜா, பர­மக்­குடி
குண்டு மிள­காய்க்கு, 5 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்­கப்­படும்.
*****
நாங்­கள், கணினி வன்­பொ­ருள் சேவை­யில் உள்­ளோம். இந்த சேவையை குறிப்­பிட்டு, ஜி.எஸ்.டி., பதிவை பெற்­று­விட்­டோம். தற்­போது, எங்­க­ளால் இதே, ஜி.எஸ்.டி., எண்­ணின் கீழ், வேறு வகை­யான வழங்­க­லில் ஈடு­பட முடி­யுமா?– அனா­லிட்­டி­கல் இன்­ஜின், சென்னை
நீங்­கள் இதே, ஜி.எஸ்.டி., பதிவு எண்ணை கொண்டு, வேறு வித­மான வழங்­க­லில் ஈடு­ப­ட­லாம். உங்­க­ளு­டைய, ஜி.எஸ்.டி., போர்ட்­ட­லில், புதிய வழங்­க­லின் விப­ரத்தை பதி­வேற்­றம் செய்து, மேம்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.

-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)