பதிவு செய்த நாள்
13 செப்2017
23:45
கூப்பர்டினோ: ‘ஐபோன்’ ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, ‘ஆப்பிள்’ நிறுவனத்தின், ‘ஐபோன் – 8, ஐபோன் – 8 பிளஸ்’ மாடல்கள், அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆப்பிளின் ஐபோன் மாடல்கள் மீது, டெக்னாலஜி பிரியர்களுக்கு, எப்போதுமே ஓர் ஈர்ப்பு உண்டு. 2007ல், ஸ்டீவ் ஜாப்ஸ், முதன்முதலாக, ஐபோனை அறிமுகம் செய்த போது இருந்த அதே எதிர்பார்ப்பும், ஆர்வமும், ‘ஐபோன் – 8’ போன் மீதும் இருந்தது. இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள, ஆப்பிள் நிறுவனர், ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில், நேற்று முன்தினம், ‘ஐபோன் – ௮’ அறிமுக விழா நடந்தது.
புதிய, ‘ஐபோன் – 8 மற்றும் 8 பிளஸ்’ மாடல்கள், 64 ஜி.பி., 256 ஜி.பி., என, இரண்டு நினைவக வசதிகளில் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், புதிய மாடல்களை அறிமுகம் செய்வதை, ஆப்பிள் வழக்கமாக வைத்திருக்கிறது. இந்த ஆண்டும், ‘ஐபோன் எக்ஸ்’ என்கிற ஐபோனை அறிமுகம் செய்துள்ளது. ‘ஐபோன் – 8 மற்றும் 8 பிளஸ்’ அட்டகாசமான நவீன வசதிகளுடன் வந்திருந்தாலும், ஐபோன்களின், 10வது ஆண்டு பதிப்பாக கருதப்படும், ‘ஐபோன் எக்ஸ்’ தான், விழாவின் ஹைலைட்.
இந்த ஐபோனில், சூப்பர் ரெட்டீனா எச்.டி., திரையும், அதில் முகத்தை காண்பித்து, ‘அன்லாக்’ செய்யும் வகையில், பேஸ் ஐ.டி., டச் ஐ.டி., தொழில்நுட்பங்களும் உள்ளன. மேலும், ‘ஹோம் பட்டன்’ நீக்கப்பட்டு, ‘எட்ஜ் டூ எட்ஜ்’ திரை, ‘3டி சென்சார்’ வசதி உடன், ‘டூயல் பிரைமரி கேமரா, ஒயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் புரூப்’ வசதி போன்ற புதிய தொழில்நுட்பங்கள், ஐபோன் எக்ஸில் உள்ளன.
இந்திய மதிப்பில், ‘ஐபோன் – 8 மற்றும் 8 பிளஸ்’ போன்களின் விலை, முறையே, 64 ஆயிரம் ரூபாய் மற்றும் 73 ஆயிரம் ரூபாயாக உள்ளது. ‘ஐபோன் எக்ஸ்’ விலை, 89 ஆயிரம் ரூபாயில் துவங்குகிறது. இந்த ஐபோன்களுக்கான, ‘ஆர்டர்’ நாளை துவங்குகிறது. செப்., 22ல், இவை விற்பனைக்கு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|