பதிவு செய்த நாள்
20 செப்2017
16:12

மும்பை : தொலைத் தொடர்பு துறை, வங்கிகள் மற்றும் ஆட்டோ துறை பங்குகள் சரிவடைந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. மொபைல் போன் கட்டணத்தை குறைத்து டிராய் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இதனையடுத்து பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்குகள் 3 முதல் 6 சதவீதம் சரிவடைந்தன. இதே போன்று ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஐஓசி, ஹீரோ மோட்டோ கார்ப், பிபிசிஎல், கோடாக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1 முதல் 2 சதவீதம் சரிவடைந்தன.
அதே சமயம் ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. இதன் காரணமாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 1.86 புள்ளிகள் சரிந்து 32,400.51 புள்ளிகளாகவும், நிப்டி 6.40 புள்ளிகள் சரிந்து 10,141.15 புள்ளிகளாகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|