பதிவு செய்த நாள்
23 செப்2017
00:28
புதுடில்லி : ‘நடப்பாண்டு, சர்வதேச அளவிலான வணிகம், எதிர்பார்த்ததை விட, அதிக வளர்ச்சி காணும்’ என, உலக வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: சர்வதேச வர்த்தகம், நடப்பாண்டு, 2.4 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பரஸ்பர வர்த்தகம்; வட அமெரிக்க இறக்குமதியில், 2016ல் இருந்த தேக்க நிலை மறைந்து, சூடுபிடித்திருப்பது போன்றவற்றால், இந்தாண்டு சர்வதேச வர்த்தக வளர்ச்சி, 3.6 சதவீதமாக உயரும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் தேவை அதிகரித்து உள்ளதால், இறக்குமதி உயர்ந்துள்ளது.
அதே சமயம், பல்வேறு காரணங்களால், 2018ல், இத்தகைய வளர்ச்சி சாத்தியமில்லை. ஏனெனில், முதலாவதாக, மதிப்பீட்டிற்கான அடிப்படை ஆண்டு மாறுபடுகிறது. அடுத்து, வளர்ந்த நாடுகளில், நிதிக் கொள்கைகளில், கட்டுப்பாடு அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு போன்ற அம்சங்களும், வளர்ச்சி விகிதத்தில் மாற்றம் ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|