பதிவு செய்த நாள்
12 அக்2017
15:51
சியோல் : வளையும் தன்மை கொண்ட கேலக்சி எக்ஸ் என பெயரிடப்பட்ட ஸ்மார்ட்போனை 2018 ம் ஆண்டு வெளியிட சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதே போன்று எல்ஜி டிஸ்பிளே கொண்ட மடக்கம் வகையிலான ஐபோன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மடக்கும் வகையிலான ஐபோன்களின் தயாரிப்பை 2020 ம் ஆண்டு முதல் துவங்க உள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எல்ஜி தொழில்நுட்பத்தில் அதிக அளவில் முதலீடு செய்து, ஓஎல்இடி உற்பத்தி திறனை அதிகப்படுத்தவும் ஆப்பிள் முடிவு செய்துள்ளது.
முதல் ஓஎல்இடி ஐபோன்களை விரைவில் சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. ஓஎல்இடி ஸ்க்ரீன்களைக் கொண்ட ஐபோன் எக்ஸ், சாம்சங் கேலக்சி எஸ் 8, சாம்சங் கேலக்சி எஸ் 8 பிளஸ், சாம்சங் கேலக்சி நோட் 8, ஒன்பிளஸ் 5, எல்ஜி வி 30 மற்றும் விவே எக்ஸ் 9 எக்ஸ் ஆகிய மாடல்களை சாம்சங் அறிமுகப்படுத்த உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|