பதிவு செய்த நாள்
15 அக்2017
04:05
‘கேப்சர்’ சென்னையில் அறிமுகம்‘ரெனோ’ நிறுவனத்தின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, புதிய, எஸ்.யு.வி.,யான, ‘கேப்சர்’ சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. 75 நாடுகளில் விற்பனையாகும் இந்த வாகனம், ‘பிரீமியம்’ எஸ்.யு.வி., வாகனங்களின் வரிசையில், ரெனோ நிறுவனத்திற்கு, குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுத் தரும் என, நம்பப்படுகிறது. இதன் நீளம், ரொனோவின், பிரபலமான, ‘டஸ்டர்’ எஸ்.யு.வி.,யை விட, சற்று அதிகம். இதில் ஆடம்பரத்தை காட்டும் விதமாக, ‘ஸ்டைல்’ அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.இதில், டஸ்டரில் உள்ளதை போலவே, 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் திறனுடைய டீசல் மற்றும் 1.5 லி., பெட்ரோல், இன்ஜின்கள் உள்ளன. இரு வேரியன்டிலும், ஆறு கியர்கள் உள்ளன. இதை, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விலை, 15 – -20 லட்சம் ரூபாய்க்குள் இருக்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|