‘ஆர்ஜியோ’  நிறுவனத்தின் இழப்பு எதிர்பார்ப்பை விட குறைந்தது‘ஆர்ஜியோ’ நிறுவனத்தின் இழப்பு எதிர்பார்ப்பை விட குறைந்தது ... ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.68 ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.68 ...
6 மாதங்களில் இல்லாத அளவு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி, ‘சூப்பர்’ தங்கம் இறக்குமதியும் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2017
04:09

புதுடில்லி, அக். 15–நாட்­டின் ஏற்­று­மதி வளர்ச்சி, ஆறு மாதங்­களில் இல்­லாத வகை­யில், செப்­டம்­ப­ரில் அதி­க­ரித்­துள்­ளது. தொடர்ந்து, 13 மாதங்­க­ளாக, ஏற்­று­மதி உயர்ந்து வரு­கிறது.இது குறித்து, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:நாட்­டின் ஏற்­று­மதி, செப்­டம்­ப­ரில், 25.67 சத­வீ­தம் உயர்ந்து, 2,861 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இதற்கு முன், மார்ச்­சில் ஏற்­று­மதி வளர்ச்சி, அதி­க­பட்­ச­மாக, 27.5 சத­வீ­தத்தை எட்­டி­யி­ருந்­தது.ரசா­ய­னங்­கள், பெட்­ரோ­லிய பொருட்­கள், பொறி­யி­யல் சாத­னங்­கள் ஆகி­யவை, ஏற்­று­மதி வளர்ச்­சிக்கு துணை புரிந்­துள்ளன. இந்த மூன்று துறை­களின் ஏற்­று­மதி, முறையே, 46 சத­வீ­தம், 37 சத­வீ­தம் மற்­றும் 44.2 சத­வீ­தம் உயர்ந்­துள்ளன.அதே சம­யம், கைவி­னைப் பொருட்­கள், இரும்­புத் தாது, பழங்­கள் மற்­றும் காய்­க­றி­கள் ஏற்­று­மதி வளர்ச்சி, பின்­ன­டை­வைக் கண்­டுள்­ளது.செப்டம்­ப­ரில், இறக்­கு­ம­தி­யும், 18.09 சத­வீ­தம் உயர்ந்து, 3,760 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இது, 2016 செப்­டம்­ப­ரில், 3,183 கோடி டால­ராக இருந்­தது.அதே சம­யம், இதே காலத்­தில், நாட்­டின் வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 900 கோடி டால­ரில் இருந்து, 898 கோடி டால­ராக குறைந்­துள்­ளது.மதிப்­பீட்டு மாதத்­தில், தங்­கம் இறக்­கு­மதி, 5 சத­வீ­தம் குறைந்து, 171 கோடி டால­ராக சரி­வ­டைந்து உள்­ளது. எண்­ணெய் மற்­றும் எண்­ணெய் சாரா பொருட்­கள் இறக்­கு­மதி, முறையே, 18.47 சத­வீ­தம் மற்­றும் 17.98 சத­வீ­தம் குறைந்து, 818 கோடி டாலர் மற்­றும் 2,940 கோடி டால­ராக இறக்­கம் கண்­டுள்­ளது.நடப்பு நிதி­யாண்­டில், ஏப்., – செப்., வரை­யி­லான அரை­யாண்­டில், ஏற்­று­மதி, 11.52 சத­வீ­தம் அதி­க­ரித்து, 14,718 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.இதே காலத்­தில், இறக்­கு­மதி, 25.08 சத­வீ­தம் அதி­க­ரித்து, 21,931 கோடி டால­ராக ஏற்­றம் கண்­டுள்­ளது. இதை­ய­டுத்து, நாட்­டின் வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 7,212 கோடி டால­ராக உள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
இனி எல்லாம் ஏற்றம் தான்‘ஜி.எஸ்.டி., நடை­மு­றை­யில், ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் சந்­தித்து வரும் பிரச்­னை­க­ளுக்கு, தீர்வு காணப்­படும்’ என, மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. அத­னால், வரும் மாதங்­களில், ஏற்­று­மதி மேலும் அதி­க­ரிக்­கும். அதே சம­யம், ஸ்தி­ர­மற்ற சர்­வ­தேச நில­வ­ரம்; ரூபாய் மதிப்­பின் ஏற்ற, இறக்­கம்; முன்­னே­றிய நாடு­களின் பாது­காப்­பு­வாத கொள்கை போன்­றவை, ஏற்­று­மதி வளர்ச்­சிக்கு தொடர்ந்து தடைக்­கற்­க­ளாக உள்ளன.கணேஷ் குப்தா தலை­வர், இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்பு
13 மாதங்களாகஇந்­தி­யா­வின் வளர்ச்சி வர­லாறு திரும்­பு­கிறது. 13 மாதங்­க­ளாக, ஏற்­று­மதி வளர்ச்சி கண்டு வரு­கிறது. 2016 செப்., உடன் ஒப்­பி­டும் போது, இந்­தாண்டு செப்­டம்­ப­ரில் ஏற்­று­மதி, 25.6 சத­வீ­தம் ஏற்­றம் கண்­டுள்­ளது. இதே காலத்­தில், முதல், 10 இடங்­களில் உள்ள, அனைத்து பிரி­வு­களின் ஏற்­று­மதி உயர்ந்­துள்­ளது; மொத்த ஏற்­று­மதி வளர்ச்­சி­யில், இவற்­றின் பங்கு, 82.14 சத­வீ­த­மாக உள்­ளது.சுரேஷ் பிரபு, மத்­திய அமைச்­சர், வர்த்­த­கம் – தொழில் துறை

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)