தீபாவளி பரிசு செலவை குறைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள்தீபாவளி பரிசு செலவை குறைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ... ஒரே நாளில் 3 லட்சம் வாகனம் விற்பனை: ஹீரோ சாதனை ஒரே நாளில் 3 லட்சம் வாகனம் விற்பனை: ஹீரோ சாதனை ...
நுகர்பொருள், வாகன பாகங்கள் துறையில் சட்ட விரோத வர்த்தகம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2017
00:22

புதுடில்லி : ‘இந்­தி­யா­வில் புகை­யிலை, நுகர்­பொ­ருட்­கள், வாகன உதிரி பாகங்­கள், மது, கம்ப்­யூட்­டர் ஹார்­டு­வேர் ஆகிய துறை­களில், சட்ட விரோத வர்த்­த­கம் அதி­க­ரித்து வரு­கிறது’ என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

இது தொடர்­பாக, இந்­திய தொழில் வர்த்­தக கூட்­ட­மைப்­பான, ‘பிக்கி,’ ஆலோ­சனை நிறு­வ­ன­மான, ‘கே.பி.எம்.ஜி.,’ உடன் இணைந்து வெளி­யிட்­டுள்ள கூட்­ட­றிக்கை: இந்­தி­யா­வில் நுகர்­பொ­ருட்­கள், வாகன உதிரி பாகங்­கள் உள்­ளிட்ட, பல்­வேறு துறை­களில், சட்ட விரோ­த­மான வர்த்­த­கப் பரி­வர்த்­த­னை­கள் அதி­க­ரித்து வரு­கின்றன. ஒரு பொரு­ளுக்கு விலைப் பட்­டி­யல் வழங்கி, வேறு பொருளை விற்­பது, பொரு­ளின் மதிப்பை குறைத்து காட்­டு­வது, பொரு­ளின் கடை­நிலை பயன்­பாட்டை திரித்து கூறு­வது, போலி பொருட்­கள் தயா­ரித்து விற்­பது உள்­ளிட்ட, பல­வி­த­மான முறை­கே­டு­கள் நடக்­கின்றன.

கடந்த, 2016ல், விலைப் பட்­டி­ய­லுக்கு மாறாக விற்­கப்­பட்ட, 1,187 கோடி ரூபாய் மதிப்­புள்ள சரக்­கு­களை, வரு­வாய் புல­னாய்வு இயக்­கு­ன­ர­கம் பறி­மு­தல் செய்­துள்­ளது. இப்­பி­ரி­வின் அதி­ரடி சோத­னை­யில், 254 கோடி ரூபாய் அள­விற்கு, பொருட்­களின் மதிப்பு குறைத்து காட்­டப்­பட்டு உள்­ளது தெரிய வந்­துள்­ளது. கடை­நிலை பயன்­பாட்டை திரித்து கூறி விற்­கப்­பட்ட, 770 கோடி ரூபாய் மதிப்­புள்ள சரக்­கு­களும் கைப்­பற்­றப்­பட்டு உள்ளன. இத்­து­டன், போலி பொருட்­கள் உள்­ளிட்ட பிற வழி­கள் மூலம், மொத்­தம், 2,780 கோடி ரூபாய் அள­விற்கு, வர்த்­தக முறை­கேடு நிகழ்ந்­துள்­ளது; இது, 2015ல், 953 கோடி ரூபா­யாக இருந்­தது.

ஆக, ஒரே ஆண்­டில், வர்த்­தக முறை­கேட்­டின் அளவு, 191 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது. இதை தடுப்­ப­தற்­கான கொள்­கை­களை, அரசு உரு­வாக்கி வரு­வ­தற்­கேற்ப, முறை­கே­டு­களும் அதி­க­ரித்து வரு­கின்றன. அத­னால், மாநில அர­சு­களும், பொது மற்­றும் தனி­யார் துறை நிறு­வ­னங்­களும் இணைந்து, வணிக முறை­கே­டு­களை தடுக்க, நிலை­யான செயல் திட்­டங்­களை உரு­வாக்க வேண்­டும். புகை­யிலை, மது, கம்ப்­யூட்­டர் ஹார்­டு­வேர், வாகன உதிரி பாகங்­கள், நுகர்­பொ­ருட்­கள், பாக்­கெட்­டு­களில் அடைக்­கப்­பட்ட உணவு வகை­கள், மொபைல் போன்­கள் போன்­ற­வற்­றில், அதி­க­ளவு போலி­களும், முறை­கே­டான வர்த்­த­க­மும் நடக்­கின்றன.

கடந்த, 2010 – 15 நில­வ­ரப்­படி, சட்ட விரோத சிக­ரெட் விற்­பனை, 5,775 கோடி ரூபாய் உயர்ந்து, 25 ஆயி­ரம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இதே போல, 2014ல், கள்­ளச் சந்­தை­யில் விற்­கப்­பட்ட நுகர்­வோர் சாத­னங்­க­ளால், அத்­து­றைக்கு, 19,243 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. இதில், அர­சுக்கு மட்­டும், 5,954 கோடி ரூபாய் வரு­வாய் குறைந்­துள்­ளது. போலி பொருட்­க­ளால், வாகன உதிரி பாகங்­கள் துறை­யின் இழப்பு, 2012 – 14ல், 9,198 கோடி ரூபா­யில் இருந்து, 10,501 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)