பார்தி ஏர்டெல் முதன்முறையாக 2 லட்சம் கோடி ரூபாயை தொட்டதுபார்தி ஏர்டெல் முதன்முறையாக 2 லட்சம் கோடி ரூபாயை தொட்டது ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.91 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.91 ...
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் சிக்கலுக்கு விரைவில் தீர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2017
00:35

புதுடில்லி : ‘‘வர்த்­த­கர்­கள், ஜி.எஸ்.டி., கணக்கை தாக்­கல் செய்­யும் போது எதிர்­கொண்ட சிக்­கல்­களில், பெரும்­பா­லா­ன­வற்­றுக்கு தீர்வு கண்­டு உள்­ளோம். விரை­வில், முழு தீர்வு காணப்­பட்டு, சுல­ப­மாக, ஜி.எஸ்.டி., கணக்கை தாக்­கல் செய்­யும் சூழல் உரு­வா­கும்,’’ என, ஜி.எஸ்.டி., நெட்­வொர்க் நிறு­வ­னத்­தின் தலை­வர், அஜய் பூஷண் பாண்டே தெரி­வித்து உள்­ளார்.

ஜி.எஸ்.டி.என்., நிறு­வ­னம், ஜி.எஸ்.டி., நடை­மு­றை­களை நிர்­வ­கித்து வரு­கிறது. இந்­நி­று­வ­னத்­தின் வலை­த­ளத்­தில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்­யும் போது, அடிக்­கடி முடங்கி விடு­வ­தாக, புகார் எழுந்­துள்­ளது.

இது குறித்து, ஜி.எஸ்.டி.என்., தலை­வர், அஜய் பூஷண் பாண்டே கூறி­ய­தா­வது: ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளத்­தில், ஜி.எஸ்.டி., கணக்கை, சுல­ப­மாக தாக்­கல் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­கின்றன. இதற்­காக, பீஹார் துணை முதல்­வர், சுஷில் குமார் மோடி தலை­மை­யில், அமைச்­ச­ர­வைக் குழு அமைக்­கப்­பட்டு உள்­ளது. இக்­குழு, இரு வாரங்­க­ளுக்கு ஒரு­முறை கூடி, சுல­ப­மாக கணக்கு தாக்­கல் செய்­யப்­ப­டு­கி­றதா என்­பதை உறு­திப்­ப­டுத்தி வரு­கிறது. இக்­குழு, மூன்­றா­வது முறை­யாக, 28ம் தேதி கூட உள்­ளது. அப்­போது, நிறு­வ­னங்­கள், வர்த்­த­கர்­கள் ஆகி­யோ­ரின் பாதிப்பு குறித்து கேட்­ட­றிந்து, தீர்வு காணப்­படும்.

ஜூலை – ஆக., மாதங்­களில், ஜி.எஸ்.டி., கணக்கை, முறையே, 55 லட்­சம் மற்­றும் 50 லட்­சம் பேர் தாக்­கல் செய்­துள்­ள­னர். பெரும்­பா­லா­னோர், கணக்கு தாக்­கல் செய்­வ­தற்­கான இறுதி நாளில், வர்த்­தக கணக்கு விப­ரங்­களை பதி­வேற்­றி­ய­தால், ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளம் அடிக்­கடி முடங்கி, பதி­வேற்­று­வ­தில் சிக்­கல் ஏற்­பட்­டது.ஒரு மணி நேரத்­திற்கு, 80 ஆயி­ரத்­திற்­கும் அதி­க­மான கணக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­ட­தால், இந்த நிலை உண்­டா­னது. ஒரு வலை­த­ளத்­தில், 50 லட்­சத்­திற்­கும் அதி­க­மான நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி., கணக்கை தாக்­கல் செய்­வது, இது­வரை நடை­மு­றை­யில் இல்­லா­தது.

அதி­கப்­ப­டி­யான பதி­வேற்­றங்­க­ளால், துவக்க காலத்­தில் பிரச்­னை­கள் எழுந்­தன. அவற்­றுக்கு தீர்வு காண்­ப­தில், நல்ல முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. அடுத்த சில மாதங்­களில், இப்­பி­ரச்­னை­க­ளுக்கு அடி­யோடு தீர்வு காணப்­படும். இதன் மூலம், ஜி.எஸ்.டி., கணக்கை, மிகச் சுல­ப­மாக தாக்­கல் செய்ய முடி­யும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

‘ஆப் லைன்’ வசதி அறிமுகம்:
ஜி.எஸ்.டி., நெட்­வொர்க் நிறு­வ­னம், இணைய வச­தி­யின்றி, ‘ஆப் லைன்’ மூலம், ‘ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி’ படி­வத்தை பூர்த்தி செய்து, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்­யும் வச­தியை, கடந்த வாரம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இதற்­கான சாப்ட்­வேரை, ஜி.எஸ்.டி.என்., வலை­த­ளத்­தில் இருந்து இல­வ­ச­மாக பதி­வி­றக்கி, கணக்கு விப­ரங்­களை பூர்த்தி செய்த பின், வலை­த­ளத்­தில் பதி­வேற்­ற­லாம். இத­னால், ஜி.எஸ்.டி., கணக்கை தவ­றின்றி, தாக்­கல் செய்ய முடி­யும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இணைய தொடர்­பின்றி, ‘ஆப் லைன்’ மூலம், ‘ஜி.எஸ்.டி.ஆர்., – 1’ படி­வத்­தில் கணக்கு தாக்­கல் வசதி, ஏற்­க­னவே உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)