உலகின், ‘நம்பர் – 1’ பணக்காரர் பில்கேட்சை விஞ்சினார் ஜெப் பிசோஸ்உலகின், ‘நம்பர் – 1’ பணக்காரர் பில்கேட்சை விஞ்சினார் ஜெப் பிசோஸ் ... ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.89 ...
ஒரே மாதத்தில் ரூ.19,000 கோடியை தாண்டியது - மின்னணு வணிக நிறுவனங்கள் விற்பனையில் புதிய சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2017
04:37

புதுடில்லி, அக். 29–‘பிளிப்­கார்ட், அமே­சான்’ உள்­ளிட்ட மின்­னணு வணிக நிறு­வ­னங்­கள், ஒரே மாதத்­தில், 19 ஆயிரம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மாக பொருட்­களை விற்­பனை செய்து, புதிய சாதனை படைத்­துள்ளன.இந்­நி­று­வ­னங்­கள், பண்­டிகை காலத்தை முன்­னிட்டு, கவர்ச்­சி­க­ர­மான சலு­கை­க­ளு­டன், சிறப்பு விற்­பனை திட்­டங்­களை அறி­வித்­தி­ருந்­தன.இதற்கு, நுகர்­வோர் மத்­தி­யில் பெரும் வர­வேற்பு கிடைத்­தி­ருப்­பது, ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது. இது குறித்து, இணைய சந்தை ஆய்வு நிறு­வ­ன­மான, ‘ரெட்­சீர்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:செப்., 20 – அக்., 19 வரை­யி­லான காலத்­தில், மின்­னணு வணிக நிறு­வ­னங்­களின் விற்­பனை, இது­வரை இல்­லாத வகை­யில், 320 கோடி டாலர், அதா­வது, 19 ஆயி­ரம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, ஒரு மாதத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட, அதி­க­பட்ச விற்­ப­னை­யா­கும். 2016ல், இதே காலத்­தில், மின்­னணு வணிக நிறு­வ­னங்­களின் விற்­பனை, 220 கோடி டால­ராக இருந்­தது.ஆக, கடந்த ஆண்டை விட, இந்­தாண்டு, மதிப்­பீட்டு காலத்­தில், விற்­பனை, 45 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.இதற்கு, மின்­னணு வணி­கத்­தில் முன்­ன­ணி­யில் உள்ள, அமே­சான், பிளிப்­கார்ட் நிறு­வ­னங்­கள், பெரு­ம­ளவு துணை புரிந்­துள்ளன.மின்­னணு வணிக நிறு­வ­னங்­களின் அப­ரி­மி­த­மான விற்­ப­னைக்கு, பல கார­ணங்­கள் உள்ளன. இந்­நி­று­வ­னங்­கள், சமீப காலத்­தில், அதிக அள­விற்கு நிதி திரட்­டிக் கொண்­டன. இது, அவற்­றின் வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்த துணை புரிந்­துள்­ளது.இந்­தாண்டு பண்­டிகை காலத்­தில், மின்­னணு வணிக நிறு­வ­னங்­கள், பொருட்­க­ளுக்கு ஏற்ப, வாடிக்­கை­யா­ளர்­களை வகைப்­ப­டுத்தி, தள்­ளு­படி சலு­கை­களை அறி­வித்­தன.அத்­து­டன், மக்­க­ளி­டம், வலை­த­ளத்­தில் பொருட்­கள் வாங்­கு­வது குறித்த விழிப்­பு­ணர்­வும் அதி­க­ரித்­துள்­ளது. வீட்­டில் இருந்­த­ப­டியே, விரும்­பிய பொருட்­களை சுல­ப­மாக வாங்க முடி­வ­தால், ஏரா­ள­மா­னோர், வலை­தள விற்­பனை நிறு­வ­னங்­களை நாடு­கின்­ற­னர்.ரிலை­யன்ஸ் குழு­மத்­தின், ‘ஆர்­ஜியோ’ மொபைல் போன் சேவை­யும், மின்­னணு வணிக வளர்ச்­சிக்கு உத­வி­யுள்­ளது. இல­வச அழைப்பு மற்­றும் இணைய வச­தி­யு­டன் கிடைக்­கும் இச்­சேவை கார­ண­மாக, வலை­த­ளங்­களை பார்­வை­யி­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. இது­வும், மின்­னணு வணிக நிறு­வ­னங்­களின் விற்­பனை பெருக, துணை புரிந்­துள்­ளது.பிளிப்­கார்ட், அமே­சான் நிறு­வ­னங்­கள், அவற்­றின் வலை­த­ளம் வாயி­லான விற்­பனை, இந்­தி­யா­வில் நக­ரங்­களை தாண்டி, உட்­ப­கு­தி­க­ளி­லும் விரி­வ­டைந்து வரு­வ­தாக கூறி­யுள்ளன. குறிப்­பாக, மிகச்­சி­றிய நக­ரங்­கள் மற்­றும் புற நக­ரங்­களில் இருந்து, புதிய வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­க­ள­வில் கிடைப்­ப­தாக, அவை தெரி­வித்­துள்ளன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
நானே ராஜாசமீ­பத்­திய பண்­டிகை காலத்­தில், வலை­த­ளம் வாயி­லான விற்­ப­னை­யில், ‘நம்­பர் – 1’ யார் என்­ப­தில், ‘அமே­சான் – பிளிப்­கார்ட்’ இடையே, மோதல் ஏற்­பட்­டுள்­ளது. இரு நிறு­வ­னங்­களும், விற்­ப­னை­யில் முத­லி­டத்தை பிடித்­துள்­ள­தாக கூறு­கின்றன. இத­னி­டையே, வலை­தள விற்­ப­னை­யில் புதி­தாக நுழைந்த, ‘பேடி­எம் மால்’ 20 சத­வீத சந்தை பங்கை கைப்­பற்றி உள்­ள­தாக சொல்­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)