65 இளம் வல்லுனர்களை, ‘நிடி ஆயோக்’ நியமிக்கிறது65 இளம் வல்லுனர்களை, ‘நிடி ஆயோக்’ நியமிக்கிறது ... ஒரு சவரன் தங்கம் விலை ரூ.22,500 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.22,500 ஐ கடந்தது ...
ஷாம்பூ, மின்விசிறி, சிமென்ட் உட்பட 160 பொருட்களின் வரி குறைய வாய்ப்பு: ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2017
23:51


புதுடில்லி : மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி தலை­மை­யி­லான, ஜி.எஸ்.டி., கவுன்­சில், ஷாம்பூ, சிமென்ட் உள்­ளிட்ட, 160 பொருட்­க­ளுக்­கான வரியை குறைக்­கும் என, தெரி­கிறது.

அசா­மின், கவு­காத்தி நக­ரில், ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டம், நேற்று துவங்­கி­யது. இதில், ஜி.எஸ்.டி., குறித்து, பல்­வேறு துறை­யி­னர் அளித்த கோரிக்­கை­கள் பரி­சீ­லிக்­கப்­பட்­டன. இன்­றும் தொட­ரும் இக்­கூட்­டத்­தில், வரி குறைப்பு குறித்து, முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­படும் என, தெரி­கிறது.

இது குறித்து, நிதி­அ­மைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: ஜி.எஸ்.டி., கூட்­டத்­தில், பல்­வேறு தரப்­பி­னர் தெரி­வித்த கருத்­துக்­கள் பரி­சீ­லிக்­கப்­பட்­டன. ‘ஏசி’ உண­வ­கங்­கள், கைவினை மரச்­சா­மான்­கள், பிளாஸ்­டிக் பொருட்­கள் மற்­றும் ஷாம்பூ உள்­ளிட்ட, அன்­றாட பயன்­பாட்டு பொருட்­க­ளுக்­கான வரியை குறைப்­பது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­டது. முக்­கி­ய­மாக, 28 சத­வீத வரி விதிப்பை கொண்­டுள்ள, 80 சத­வீத பொருட்­களின் வரி, குறைக்­கப்­படும் என, தெரி­கிறது.

‘ஏசி’ உண­வ­கத்­திற்­கான வரியை, 18லிருந்து, 12 சத­வீ­த­மாக குறைக்க, அமைச்­சர்­கள் குழு பரிந்­து­ரைத்து உள்­ளது. இக்­கோ­ரிக்கை ஏற்­கப்­படும் என, தெரி­கிறது.அனைத்து வகை மரச்­சா­மான்­க­ளுக்­கும், 28 சத­வீத வரி விதிப்பு உள்­ளது. அமைப்பு சாரா கைவி­னை­ஞர்­கள் அதி­க­மா­னோர், மரச்­சா­மான்­கள் தயா­ரிப்­பில் ஈடு­பட்டு உள்­ள­னர். நடுத்­தர வர்க்­கத்­தி­னர், அதி­க­மாக மரச்­சா­மான்­களை பயன்­ப­டுத்­து­வ­தால், அவற்­றுக்­கான வரி குறைக்­கப்­ப­ட­லாம். ஒரு­சில பிளாஸ்­டிக் பொருட்­க­ளுக்கு, 18 சத­வீத வரி உள்­ளது. அதே சம­யம், குளி­ய­லறை பொருட்­கள், வாஷ் பேசின், சிங்க், கழிப்­பறை சாத­னங்­கள் போன்­ற­வற்­றுக்­கும், பிளாஸ்­டிக் குளி­ய­லறை சாத­னங்­க­ளுக்­கும், 28 சத­வீத வரி உள்­ளது.

இந்த வேறு­பா­டு­களை களை­யும் விதத்­தில், புதிய வரி விதிப்பு இருக்­கும். மாதந்­தோ­றும், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­கல் செய்­வ­தில், வணி­கர்­க­ளுக்கு ஏற்­படும் சிர­மத்தை போக்க, இனி காலாண்டுக்கு ஒரு­முறை, கணக்கு தாக்­கல் செய்­யும் நடை­மு­றைக்கு, கூட்­டத்­தில் ஒப்­பு­தல் வழங்­கப்­படும் என, தெரி­கிறது. இத்­து­டன், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான வரி­களும் சீர­மைக்­கப்­பட உள்ளன.

முந்­தைய வரி நடை­மு­றை­யில், கலால் வரி விலக்கு அல்­லது குறைந்த, ‘வாட்’ வரி சலு­கை­கள் பெற்­றி­ருந்த துறை­களில், தற்­போது, ஜி.எஸ்.டி.,யால் அதிக வரி செலுத்­தப்­ப­டும்­பட்­சத்­தில், அவற்­றுக்­கான வரி விகி­தம் குறைக்­கப்­பட வாய்ப்பு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

ஜி.எஸ்.டி.,யில், 28 சத­வீத வரி­யில், 227 பொருட்­கள் உள்ளன. அதில், 80 சத­வீத பொருட்­களின் வரி, 18 சத­வீ­த­மாக குறைக்­கப்­படும். பல பொருட்­க­ளுக்கு, 18லிருந்து, 12 சத­வீ­த­மாக வரி குறைக்­கப்­படும்.
-சுசில் குமார் மோடி, துணை முதல்வர் பீஹார் மற்றும் ஜி.எஸ்.டி.என்., குழு தலைவர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)