‘சுலபமாக தொழில் புரிய கவர்ச்சிகரமான நாடு இந்தியா’‘சுலபமாக தொழில் புரிய கவர்ச்சிகரமான நாடு இந்தியா’ ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.32 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.32 ...
இந்திய குடும்பங்களின் வருவாய் மதிப்பு 7.10 லட்சம் கோடி டாலராக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2017
00:00

புதுடில்லி : ‘இந்­திய குடும்­பங்­களின் வரு­வாய் மதிப்பு, 2022ல், 7.10 லட்­சம் கோடி டால­ராக உய­ரும்’ என, சுவிட்­சர்­லாந்­தைச் சேர்ந்த, நிதிச் சேவை நிறு­வ­ன­மான, ‘கிரெ­டிட் சூசி’ கணித்­துள்­ளது.


இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை: இந்­தி­யா­வில், 2.45 லட்­சம், ‘மெகா’ கோடீஸ்­வ­ரர்­கள் உள்­ள­னர். இது, 2022ல், 3.72 லட்­ச­மாக உய­ரும்.


சொத்து:

இந்­திய குடும்­பங்­களின் சொத்து மதிப்பு, 5 லட்­சம் கோடி டால­ராக உள்­ளது. இவற்­றின் வரு­வாய், ஆண்­டுக்கு, 7.5 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 2022ல், 7.10 லட்­சம் கோடி டால­ராக அதி­க­ரிக்­கும். கடந்த, 2000 முதல், இந்­திய குடும்­பங்­களின் சொத்து மதிப்பு, ஆண்­டு க்கு, 9.9 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு வரு­கிறது. இது, உல­கின் சரா­சரி வளர்ச்­சி­யான, 6 சத­வீ­தத்தை விட அதி­கம். இந்­தாண்டு, இந்­திய குடும்­பங்­களின் சொத்து மதிப்பு, 45,100 கோடி டாலர் உயர்ந்­துள்­ளதை அடுத்து, உல­க­ள­வில் சொத்து வளர்ச்­சி­யில், இந்­தியா, 8வது இடத்தை பிடித்­துள்­ளது.


அதே சம­யம், இது, இந்­திய மக்­கள் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வளர்ச்சி அல்ல. ௧8 வய­திற்கு மேற்­பட்ட, 92 சத­வீ­தத்­தி­ன­ரின் சொத்து மதிப்பு, 10 ஆயி­ரம் டால­ருக்­கும் குறை­வா­கவே உள்­ளது. 1 லட்­சம் டால­ருக்கு மேற்­பட்ட சொத்து மதிப்பு வைத்­துள்­ளோ­ரின் பங்கு, 0.5 சத­வீ­த­மாக, அதா­வது, 42 லட்­ச­மாக உள்­ளது. உல­க­ள­வில், 18 வய­திற்கு மேற்­பட்­டோர் பிரி­வில், முன்­ன­ணி­யில் உள்ள, 1 சத­வீத பெரும் கோடீஸ்­வ­ரர்­களில், 3.40 லட்­சம் பேர், இந்­தி­யா­வில் உள்­ள­னர். இவர்­களில், 1,820 பேரின் சொத்து மதிப்பு, 5 கோடி டால­ருக்­கும் அதி­க­மாக இருக்­கிறது. 760 நபர்­க­ளுக்கு, 10 கோடி டால­ருக்கு மேல் சொத்து உள்­ளது.


கடன்:

தனி­ந­பர் சொத்­து­களில், ரியல் எஸ்­டேட் மற்­றும் பிற சொத்­து­கள், 86 சத­வீத பங்கை கொண்­டுள்ளன. மொத்த சொத்­தில், தனி­நபர் கடன்­கள், 9 சத­வீ­தம் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இந்­திய மக்­கள் தொகை­யில், பெரும்­பா­லா­னோ­ருக்கு கடன் சுமை உள்­ளது. எனி­னும், இந்­திய குடும்­பங்­களின் சொத்­து­க­ளுக்கு நிக­ரான கடன், வளர்ந்த நாடு­களை விட, குறை­வா­கவே உள்­ளது. இந்­தி­யா­வில், ஓராண்­டில், சந்தை மூல­த­னம், 30 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது. வீடு விலை, 10 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்பு, 4 சத­வீ­தம் ஏற்­றம் கண்­டுள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.


சுவிட்சர்லாந்து முதலிடம்:

ஜன., – ஜூன் வரை, உல­க­ள­வில், குடும்­பங்­களின் சொத்து மதிப்பு, 6.4 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 280 லட்­சம் கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இது, 2012க்கு பிந்­தைய வேக­மான வளர்ச்­சி­யா­கும். பங்­குச் சந்­தை­கள், நிதி சாரா சொத்­து­கள் போன்­ற­வற்­றில் கிடைத்த ஆதா­யத்­தால், சொத்து மதிப்பு உயர்ந்­துள்­ளது. உல­கில், தனி­ந­பர் சொத்து மதிப்­பில், சுவிட்­சர்­லாந்து, 5.37 லட்­சம் டால­ரு­டன், முத­லி­டத்தை தக்க வைத்­துக் கொண்­டுள்­ளது. அடுத்து, ஆஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­கள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)