பதிவு செய்த நாள்
21 டிச2017
16:02

புதுடில்லி: ஆப்பிள் ஐபோன்களின் வேகத்தை கணக்கிடும் செயலியை உருவாக்கும் பிரைமேட் லேப்ஸ் எனும் நிறுவனம், சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்களில் ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 7 மாடல்களின் வேகம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக ஆப்பிள் வெளியிட்ட தகவல்களில், ஐபோனில் அதிக மின்சக்தி பயன்பாட்டை குறைக்க பிராசஸர் வேகம் குறைக்கப்பட்டது என தெரிவித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் ஸ்மார்ட்போனின் வேகத்தை பாதிக்கும். போனின் பேட்டரி பிராசஸருக்கு தேவையான திறனை வழங்கும் போது இவ்வாறான பிரச்சனை ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகள் ஆப்பிள் சாதனங்கள் மட்டுமின்றி அனைத்து லித்தியம் அயன் வகை பேட்டரிகளிலும் ஏற்படலாம். பொதுவாக இந்த பிரச்சனைகள் அதிகமுறை சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளில் ஏற்படலாம் என ஆப்பிள் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பேட்டரிகள் குளிர்ந்திருக்கும் போதோ அல்லது சார்ஜ் குறைவாக இருக்கும் போதும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படலாம்.
கடந்த ஆண்டு ஐபோன் 6, ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் எஸ்இ மாடல்களுக்கு ஆப்பிள் வழங்கிய புதிய அம்சம் இந்த பிரச்சனை ஏற்பட்டு ஐபோன்கள் திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆவதை தவிர்க்க பிராசஸருக்கு செல்லும் திறன் அளவை குறைத்தது. எனினும் இது பிரச்சனை ஏற்படும் போது மட்டும் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். 11.2 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஐபோன் 7 மாடல்களுக்கும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஐபோனின் பிராசஸர்களுக்கு அதிக மின்திறன் தேவைப்பட்டு அவை பேட்டரிகள் விநியோகம் செய்யும் போது போனின் மற்ற மின்சாதன பாகங்களை பாதிக்கும். இதனை தவிர்க்க ஐபோன்கள் திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடும்.
2016-ம் ஆண்டில் ஐபோன்கள் திடீரென ஸ்விட்ச் ஆகும் பிரச்சனை பல்வேறு வாடிக்கையாளர்களை பாதித்தது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் வெளியிட்ட மென்பொருள் அப்டேட் ஐபோன் வேகத்தை குறைத்தது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வாடிக்கையாளர்கள் தங்களது ஐபோனின் பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம். ஐபோன் பேட்டரிகள் வாரண்டியில் கிடைக்காது என்பதால் வாடிக்கையாளர்கள் ரூ.5000 வரை செலவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|