பதிவு செய்த நாள்
29 டிச2017
00:58
புதுடில்லி : வங்கி வாராக்கடன் அதிகமுள்ள நாடுகளில், இந்தியா, 5வது இடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான, ‘கேர்’ வெளியிட்டுள்ள அறிக்கை: ‘பிரிக்ஸ்’ நாடுகளின் வங்கி துறையில், அதிகளவில் வாராக்கடனுடன், இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயின் உள்ளிட்ட, பி.ஐ.ஐ.ஜி.எஸ்., நாடுகளில், அதிக வாராக்கடனில், இந்தியா, 5வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில், முதல் நான்கு இடங்களில், கிரீஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், இத்தாலி ஆகியவை உள்ளன. இந்தியாவின் வாராக்கடன் விகிதம், 9.85 சதவீதமாக உள்ளது. இது, அடுத்துள்ள ஸ்பெயின் நாட்டின், 5.28 சதவீதத்தை விட, 4 சதவீதம் அதிகமாகும்.
ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், தென் கொரியா, பிரிட்டன் ஆகியவை, மிகக் குறைந்த வாராக்கடனை வைத்துள்ளன. இவற்றின் வாராக்கடன், 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் வாராக்கடன், 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. நடுத்தர வாராக்கடன் பிரிவில், ஐரோப்பிய நாடுகள் சிலவும், பிரேசில், இந்தோனேஷியா, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, துருக்கி ஆகிய வளரும் நாடுகளும் இடம் பெற்றுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|