மாலை நேர நிலவரம், தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்வுமாலை நேர நிலவரம், தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்வு ... ஜி.எஸ்.டி., - அறி­வோம் -– தெளி­வோம் ஜி.எஸ்.டி., - அறி­வோம் -– தெளி­வோம் ...
வோல்வோ எலக்ட்­ரிக், ‘வி40’ எஸ்.யு.வி.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2017
04:52

வோல்வோ நிறு­வ­னம், அதன், எஸ்.யு.வி.,யான, ‘வி40’ல், கடை­சி ­யாக, 2016ல், புதிய மாற்­றங்­களை செய்து அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. ஆனால், 2017ல், மாற்­றங்­கள் செய்­ய­வில்லை. அத­னால், 2018ல், அதில், சில, மாற்­றங்­களை செய்து அறி­மு­கம் செய்ய முடிவு எடுத்­துள்­ளது.அதன்­படி, வி40 ஐ, முழு­வ­து­மாக, எலக்ட்­ரிக் வாக­ன­மாக, அதா­வது, பேட்­ட­ரி­யால் இயங்­கக் கூடிய வகை­யில், அறி­மு­கம் செய்­ய­வுள்­ளது.எனி­னும், வி40ல், டீச­லில் இரு வேரி­யன்ட்­கள்; பெட்­ரோ­லில், மூன்று வேரி­யன்ட்­கள் கிடைக்­கும். இதன் ஷோரூம் விலை, டில்­லி­யில், 32.4 லட்சம் ரூபா­யில் துவங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. எனி­னும், முதல், வோல்வோ, ‘எலக்ட்­ரிக், வி40’ சீனா­வில் தான் அறி­மு­க­மா­க­வுள்­ளது. இந்­தி­யா­விற்கு சற்று தாம­த­மா­கத்­தான் வரும் என தெரி­கிறது.
வரு­கிறது புதிய சிறிய கார்ஹூண்­டாய் மோட்­டார்ஸ் நிறு­வ­னம், அதன், ‘கிராண்ட் ஐ10’ காரை விட, சற்றே சிறிய, ‘ஹேட்ச்­பேக்’ ரக காரை, விரை­வில் அறி­மு­கம் செய்­ய­வுள்­ளது. இந்த கார், டில்­லி­யில், பிப்­ர­வ­ரி­யில் நடை­பெ­ற­வுள்ள, ‘ஆட்டோ எக்ஸ்போ’ கண்­காட்­சி­யில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட உள்­ளது. ஆனால், அதன் தோற்­றம், இன்­னும் அறி­மு­கம் செய்­யப்­ப­டா­மல் உள்­ளது. எனி­னும், எப்­ப­டியோ, சில­ரின் கண்­ணில் சிக்­கி­விட்­ட­தால், அது, சமூக வலை­த­ளங்­களில் உல­விக் கொண்­டி­ருக்­கிறது.இந்த காரை, ஹூண்­டாய் நிறு­வ­னத்­தி­னர், ‘குடும்­பத்­தி­ன­ருக்­காக வடி­வ­மைக்­கப்­பட்ட வாக­னம்’ என அவர்­க­ளுக்­குள் அழைத்­துக் கொள்­கின்­ற­னர். இதன், உட்­பு­றத்­தில், ‘மாருதி செலி­ரியோ, டாடா டியாகோ’ போல், இட­வ­சதி சற்று அதி­க­மாக இருக்­கக்­கூ­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஹூண்­டா­யின், சிறிய ரக, ‘ஹேட்ச்­பேக்’ ரக காரான, ‘ஐ10’ உற்­பத்தி நிறுத்­தப்­பட்­டு­விட்­டது. மற்­றொரு சிறிய காரான இயான், அறி­மு­க­மாகி பல ஆண்­டு­க­ளாகி விட்­டது. அத­னால், இப்­பு­திய மாடல் அறி­மு­கம்அவ­சி­ய­மா­கி­யுள்­ளது.விரை­வில், ‘ரேஞ்ச் ரோவர்- வேலார்’ஜாகு­வார் லேண்­டு­ரோ­வர் நிறு­வ­னத்­தின், அடுத்த அறி­மு­க­மான, ‘ரேஞ்ச் ரோவர் வேலார்’ எஸ்.யு.வி., இந்­தி­யா­வில் பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அதன் விலை என்­ன­வாக இருக்­கும் என்­பது ரக­சி­ய­மாக வைக்­கப்­பட்டு இருந்­தது.இந்­நி­லை­யில், அதன் விலை, 80 லட்­சம் ரூபா­யில் இருந்து, 90 லட்­சம் ரூபா­யாக இருக்­கும் என தெரிய வந்­துள்­ளது. ஜன., 20ல், அறி­மு­க­மாக இருக்­கும் வேலா­ரின், ‘2.0 லிட்­டர் டீசல் இன்­ஜின்’ உடைய, பேசிக் மாட­லின், ஷோரூம் துவக்க விலை, 78.83 லட்­சம் ரூபா­ய். பல்­வேறு சிறப்பு அம்­சங்­கள் அடங்­கிய, உயர் ரக வேரி­யன்­டின் விலை, 1.37 கோடி ரூபா­யில் இருந்து துவங்­கும். ரேஞ்ச் ரோவ­ரின், ‘எவோக்’ மற்­றும், ‘ஸ்போர்ட்’ ஆகி­ய­வற்­றுக்கு இடைப்­பட்­ட­தாக, வேலார் இருக்­கும்.வேலார், 179 எச்.பி., திற­னு­டைய, 2.0 லிட்­டர் டீசல்; 250 எச்.பி., திற­னு­டைய, 2.0 லிட்­டர் பெட்­ரோல்; மற்­றும், 300 எச்.பி., திறன் உடைய, 3.0 லிட்­டர் டீசல் இன்­ஜின் ஆகிய மாடல்­கள் களம் இறங்­கு­கின்றன.
‘தண்­டர்­பேர்டு, 350 எக்ஸ், 550 எக்ஸ்’ராயல் என்­பீல்டு நிறு­வ­னம், அதன் கம்­பீ­ர­மான பிர­பல, ‘தண்­டர்­பேர்டு’ மாடல் பைக்­கில், இரு புதிய மாடல்­களை அறி­மு­கம் செய்­ய­வுள்­ளது. அது, புல்­லட் பிரி­யர்­களின், இத­யத்­து­டிப்பை அதி­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆம், என்­பீல்டு நிறு­வ­னத்­தின், தண்­டர்­பேர்டு, 350 எக்ஸ்; 500 எக்ஸ் ஆகி­யவை, பைக் பிரி­யர்­களை ஆட்­கொள்ள வர­வி­ருக்­கிறது. இது, நகர்ப்­புற இளை­ஞர்­களை கவ­ரும் வித­மாக, சற்று, ‘அர்­பன்’ சமாச்­சா­ரங்­கள் கூடு­த­லாக சேர்க்­கப்­பட்டு இருக்­கு­மாம்.இந்த புதிய புல்­லட்­கள், புத்­தாண்­டில் விற்­ப­னைக்கு வர­வி­ருக்­கின்றன. இது­வரை, அலாய் வீல்­கள், என்­பீல்டு பைக்­கு­களில் இடம் பெற்­ற­தில்லை. முதல் முறை­யாக, இந்த எக்ஸ் பைக்­கு­களில் அவை பொருத்­தப்­ப­ட­வுள்ளன. இவற்­றில், வழக்­கத்­துக்கு மாறாக, ஹேண்­டில் பார்­கள், சற்று குறு­க­லாக இருக்­கும். மேலும், முக்­கி­ய­மாக, இரு பிள­வு­பட்ட இருக்­கை­க­ளுக்கு பதி­லாக, நீள­மான ஒரே இருக்கை பொருத்­தப்­பட்­டுள்­ளது. இது, பைக்­கிற்கு, நகர்ப்­புற தோற்­றத்தை தரு­வ­தாக உள்­ளது.

பைக்­கு­கள் விலை விரை­வில் உயர்வுஹீரோ மோட்டோ கார்ப் நிறு­வ­னம், மோட்­டார் பைக்­கு­களின் விலையை உயர்த்­தப் போவ­தாக அறி­வித்­துள்­ளது. உற்­பத்தி செலவு அதி­க­ரிப்பு கார­ண­மாக, இம்­மு­டிவை எடுத்­தி­ருப்­ப­தாக இந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது. அதன்­படி, குறைந்­த­பட்­சம் ஒவ்­வொரு மாட­லுக்­கும், 400 ரூபாய் விலை உயர்வு இருக்­கும். பின், மாடல் மற்­றும் வேரி­யன்­டுக்கு ஏற்ப விலை உயர்வு இருக்­க­லாம். இந்த விலை உயர்வு, நாளை முதல் அம­லுக்கு வரு­கிறது.சில தினங்­க­ளுக்கு முன் தான், ‘சூப்­பர் ஸ்பி­ளெண்­டர்’ உள்­ளிட்ட மூன்று புதிய பைக்­கு­களை, ‘ஹீரோ’ அறி­மு­கம் செய்­தது. அவை, ஜன­வரியில் ஒன்­றன் பின் ஒன்­றாக விற்­ப­னைக்கு வரும். அவற்­றின் விலை­யும், புதிய அறி­விப்­பின்­படி, விலை உயர்வை தாங்கி வரும் என தெரி­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)