பதிவு செய்த நாள்
26 ஜன2018
00:55
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டின், அக்., – டிச., வரையிலான, மூன்றாவது காலாண்டில், 2.96 சதவீதம் அதிகரித்து, 1,799 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த நிதியாண்டின்இதே காலத்தில், 1,742.20 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மொத்த வருவாய், 19,793.30 கோடி ரூபாயில் இருந்து, 19,528.10 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.
மொத்த வாகன விற்பனை, 11.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,31,112 ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டு கார் விற்பனை, 12.4 சதவீதம் அதிகரித்து, 4,00,586 ஆக ஏற்றம் கண்டு உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், 30,526 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
இந்நிறுவனம், தொழில்நுட்ப பயன்பாட்டிற்காக அளிக்கப்படும், ‘ராயல்டி’ தொகையை, புதிய முறையில் கணக்கிட முடிவு செய்துள்ளது. இதனால், இவ்வகையிலான செலவு குறையும். புதிய, ‘இக்னிஸ்’ மாடல் கார் தயாரிப்பில் இருந்து, ராயல்டி நடைமுறை செயல்பாட்டிற்கு வரும் என, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|