பதிவு செய்த நாள்
23 பிப்2018
02:25

வாஷிங்டன் : ‘பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்ற கட்டமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மந்தமாக உள்ளது’ என, அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபரின், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கை:ரொக்கப் பயன்பாடு, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள இந்தியாவில், 86 சதவீத ரொக்கப் புழக்கம் செல்லாது என அறிவித்ததும், ஜி.எஸ்.டி., அறிமுகமும், அந்நாட்டின் வளர்ச்சியில், குறுகிய கால தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.இந்திய வங்கித் துறையின் வாராக்கடனும் கவலை அளிக்கிறது. இருந்த போதிலும், பொதுத் துறை வங்கிகளுக்கு, மறுபங்கு மூலதன திட்டம் மூலம், மத்திய அரசு அளிக்க உள்ள, 3,240 கோடி டாலர், வங்கித் துறையின் இடர்ப்பாட்டை குறைக்கும் எனலாம்.இந்தியா, அதிக பொருள் குவிப்பு வரியை, அதிகம் பயன்படுத்துகிறது. இதனால், அமெரிக்காவில், தொழில்நுட்ப சேவை வழங்குவோர், விவசாயிகள் மற்றும் சோளம், சோயா, பருத்தி வர்த்தகர்கள் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர். அதனால், இவ்வகை பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது.பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, 2007 முதல், கோழி இறைச்சி, முட்டை, பன்றி ஆகியவற்றின் இறக்குமதிக்கு, இந்தியா தடை விதித்துள்ளது. இதற்கு, அறிவியல்பூர்வ ஆதாரம் கிடையாது என, அமெரிக்கா மறுத்து வருகிறது.கோழி இறைச்சி இறக்குமதியில், உலக வர்த்தக அமைப்பின் விதிகளை, இந்தியா பின்பற்றாமல் உள்ளது. இது தொடர்பான வழக்கு, உலக வர்த்தக அமைப்பில், இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கு தீர்வு கண்டால், அமெரிக்காவின் கோழி இறைச்சியை, இந்தியா இறக்குமதி செய்ய முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|