பதிவு செய்த நாள்
15 மார்2018
00:22
புதுடில்லி:காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை குறைவால், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், பிப்ரவரியில், 2.48 சதவீதமாக குறைந்துள்ளது.
இது, முந்தைய ஏழு மாதங்களில் இல்லாத அளவாகும். இதற்கு முன், 2017 ஜூலையில், பணவீக்கம், 1.88 சதவீதம் என்ற அளவில், மிகக் குறைவாக இருந்தது.இந்தாண்டு ஜனவரியில், மொத்த விலை பணவீக்கம், 2.84 சதவீதமாகவும், 2017 பிப்ரவரியில், 5.51 சதவீதமாகவும் உயர்ந்திருந்தது.பிப்ரவரியில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், 0.88 சதவீதமாக குறைந்துள்ளது. இது, ஜனவரியில், 3 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.
இதே காலத்தில், காய்கறிகள் பணவீக்கம், 40.77 சதவீதத்தில் இருந்து, 15.26 சதவீதமாக குறைந்துள்ளது.வெங்காயம் விலை சற்று குறைந்த நிலையில், உருளைக்கிழங்கு விலை அதிகரித்துள்ளது.பருப்பு வகைகளின் விலை, 24.51 சதவீதம் பின்னடைவைக் கண்டுள்ளது. அது போல, கோதுமை, தானியங்கள், முட்டை, மாமிசம், மீன் ஆகியவற்றின் பணவீக்கம் குறைந்துள்ளது.
எரிபொருள் மற்றும் மின்சாரம் பிரிவின் பணவீக்கம், 4.08 சதவீதத்தில் இருந்து, 3.81 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.அதே சமயம், தயாரிப்பு பொருட்கள் பணவீக்கம், ஜனவரியை விட, பிப்ரவரியில் உயர்ந்துள்ளது என, மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சில்லரை பணவீக்கம்
காய்கறிகள், உணவுப் பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை குறைவால், முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, பிப்ரவரியில், சில்லரை பணவீக்கம், 4.44 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|