இ – மெயில் மூலம் மோசடி வலை இ – மெயில் மூலம் மோசடி வலை ... உங்­கள் மாதாந்­திர சேமிப்பை அதி­க­ரிப்­ப­தற்­கான எளிய வழி­கள் உங்­கள் மாதாந்­திர சேமிப்பை அதி­க­ரிப்­ப­தற்­கான எளிய வழி­கள் ...
சரியான மருத்­துவ காப்­பீட்டை தேர்வு செய்­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2018
01:05

மருத்துவ காப்பீடு பெறுவதன் அவசியத்தை அறிந்திருப்பதோடு, அவற்றை தேர்வு செய்யும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
போது­மான ஆயுள் காப்­பீடு பெறு­வது போலவே, மருத்­துவ காப்­பீடு வச­தி­யும் பெற்­றி­ருப்­பது மிக­வும் அவ­சி­யம். நிதி திட்­ட­மி­ட­லில் இது முக்­கிய அங்­க­மாக இருப்­ப­தோடு, முத­லீட்டை துவக்­கும் முன் இந்த பாது­காப்பை உறுதி செய்து கொள்­வது அவ­சி­யம்.
மருத்­துவ காப்­பீடு, மருத்­துவ அவ­சர தேவை­க­ளின் போது கைகொ­டுக்க வல்­லது என்­ப­தால், ஒவ்­வொ­ரு­வ­ரும் பொருத்­த­மான பாலிசி பெற்­றி­ருப்­பதை உறுதி செய்து கொள்ள வேண்­டும்.எதிர்­பா­ரா­மல் ஏற்­ப­டக்­கூ­டிய மருத்­துவ செல­வு­களை சமா­ளிக்க கூடிய அளவு பாது­காப்பை பெற, சரி­யான காப்­பீட்டு திட்­டத்தை தேர்வு செய்ய வேண்­டும். இதில் மன­தில் கொள்ள வேண்­டிய முதல் அம்­சம், பணி­யி­டத்­தில் வழங்­கப்­படும் மருத்­துவ காப்­பீடு மட்­டுமே போது­மா­ன­தல்ல என்­பது தான்.
நிபந்­த­னை­கள் என்ன?
பல நிறு­வ­னங்­களில், ஊழி­யர்­களுக்கு குழு காப்­பீடு வழங்­கப்­படுகிறது. இந்த ஊழி­யர்­களில் பெரும்­பா­லா­னோர், தங்­க­ளுக்கு தனியே மருத்­துவ காப்­பீடு தேவை­யில்லை என கரு­து­கின்­ற­னர். ஆனால், நிறு­வன குழு பாது­காப்பு போது­மா­னது அல்ல என்­ப­தோடு, இடையே பணி இழப்பு அல்­லது பணி மாறு­தல் ஏற்­பட்­டால் சிக்­கல் ஏற்­பட­லாம். மேலும் குடும்­பத்­திற்­கான மருத்­துவ காப்­பீ­டும் தேவை.காப்­பீடு திட்­டத்தை தேர்வு செய்­யும் போது, மேலோட்­ட­மாக மட்­டும் அதன் பலன்­களை புரிந்து கொள்­ளா­மல், முழு விப­ரங்­க­ளை­யும் தெரிந்து கொள்ள வேண்­டும். இதற்கு மிகச்சிறிய எழுத்துகளில் கொடுக்­கப்­பட்­டு உள்ள நிபந்­த­னை­களை கவ­னமாக படித்­துப்­பார்க்க வேண்­டும். எத்­த­கைய நோய்­கள் மற்­றும் சூழல்­கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன; எவற்­றுக்கு எல்­லாம் விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளன; மருத்­து­வமனை அறை தொடர்­பான குறிப்­பு­கள் என்ன... போன்ற விப­ரங்களை தெரிந்து கொண்டு அதற்­கேற்ப பொருத்­த­மான பாலி­சியை தேர்வு செய்ய வேண்­டும். கிளைம் செய்­வ­தற்­கான நிபந்­த­னை­க­ளை­யும் புரிந்து கொள்ள வேண்­டும்.பாலி­சியை தீர்­மா­னிக்­கும் போது பிரீமி­யம் தொகையை மன­தில் கொள்­வது இயல்­பா­னது தான். ஆனால் பிரீ­மி­யம் தொகையை மட்­டுமே அடிப்­ப­டை­யாக கொண்டு பாலி­சியை தீர்­மா­னிக்க கூடாது. பாலிசி பாது­காப்பு, மருத்­துவ தேவை­க­ளுக்கு போது­மா­னதா? விலக்­கப்­பட்ட அம்­சங்­கள் எவை என்­பதை எல்­லாம் பரி­சீ­லித்தே பாலி­சியை தீர்­மா­னிக்க வேண்­டும். குறைந்த பிரீ­மி­யம் தொகைக்­காக பாது­காப்­பில் சம­ர­சம் செய்து கொள்­ளக்­கூ­டாது.எந்த பாலிசி?அதே போல பாலிசி பெறும் போது மருத்­துவ வர­லாறு தொடர்­பான தக­வல்­களை மறைக்கக் கூடாது. இத­னால் பின்­னர் கிளைம் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­படும் அபா­யம் உள்­ளது. பாலி­சியை தேர்வு செய்­யும் போது, தனி­ந­பர் பாலி­சியா அல்­லது குடும்­பத்­திற்­கான புளோட்­டர் பாலி­சியா என்­ப­தை­யும் தீர்­மா­னித்­துக் கொள்ள வேண்­டும். தனி­ந­பர் பாலிசி எனும் போது, குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு தனித்­த­னியே பாலிசி பெற வேண்­டும்.குடும்­பத்­திற்­கான பாலி­சி­யில், ஒரு நப­ருக்கு மேல் பாது­காப்பு பெற முடி­யும். உதா­ர­ணத்­திற்கு ஒரு பாலி­சி­யில் குடும்­பத்­த­லை­வர், மனைவி மற்­றும் குழந்­தைக்­கான பாது­காப்பு பெற­லாம். இந்த வகை பாலி­சி­கள், அனை­வ­ருக்­கு­மான தனிப்­பட்ட பாலி­சி­களை விட குறை­வான பிரீமி­யம் கொண்டு இ­ருக்­கின்­றன. எனவே குழந்­தை­கள் உள்­ள­வர்­க­ளுக்கு இது ஏற்­ற­தாக இருக்­கும். எனி­னும்,குறிப்­பிட்ட நப­ருக்கு மருத்­துவ தேவை அதி­கம் இருந்­தால் தனி பாலிசி பொருத்­த­மாக அமை­யும்.
இந்­தி­யர்­க­ளி­டம் அதி­க­ரிக்­கும் மன அழுத்­தம்இந்­தி­யர்­கள் அதிக அள­வில் மன அழுத்­தத்­தால் பாதிக்­கப்­ப­டு­வ­தும், பணி மற்­றும் நிதி விஷ­யங்­கள் இதற்கு முக்­கிய கார­ண­மாக இருப்­ப­தும் தெரிய வந்­துள்­ளது.சிக்னா டிடிகே ஹெல்த் இன்­சூ­ரன்ஸ் நிறு­வ­னம் நடத்­திய உலக நல­வாழ்வு தொடர்­பான ஆய்­வ­றிக்கை தெரி­விப்­ப­தா­வது:இந்­தி­யா­வில், 89 சத­வீ­தத்­தி­னர் மன அழு­த்தத்­திற்கு இலக்­கா­கின்­ற­னர். சர்­வ­தேச அள­வில் இது, 86 சத­வீ­த­மாக இருக்­கிறது. மேலும், இந்­தி­யர்­களில் பெரும்­பா­லா­னோர் மன அழுத்­தத்­திற்கு சிகிச்சை பெற தயங்­கு­கின்­ற­னர். இவர்­களில் இளைய தலை­முறை­யினரே, அதி­கம் மன அழுத்­தத்­திற்கு உள்ளா­கின்­ற­னர்.பணி மற்­றும் நிதி விஷ­யங்­கள் மன அழுத்­தத்­திற்­கான முக்­கிய கார­ணங்க­ளாக இருக்­கின்­றன. எனி­னும் பணி­யிட அழுத்­த­திற்கு இலக்­கா­னவர்­களில் பெரும்­பா­ல­ானோர், தங்­க­ளுக்கு உத­வி­யும் ஆத­ர­வும் கிடைப்­ப­தாக தெரி­வித்­துள்­ள­னர். பணி­யிட நலத்­திட்­டங்­கள், வேலை வாய்ப்பை தேர்வு செய்­வ­தில் முக்­கிய அம்­ச­மாக விளங்­கு­கின்­றன.
உங்­கள் மாதாந்­திர சேமிப்பை அதி­க­ரிப்­ப­தற்­கான எளிய வழி­கள்
சேமிப்­பில் இருந்து தான் முத­லீடு துவங்­கு­கிறது. எனவே, மாதந்­தோ­றும் சேமிப்­பது முக்­கி­யம். மாத வரு­வா­யில் குறைந்­த­பட்­சம், ௧௦ சத­வீ­த­மா­வது சேமிக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது. அதி­கம் சேமிக்க முடிந்­தால் நல்­லது. வர­வுக்­கும் செல­வுக்­கும் சரி­யாக இருக்­கும் நிலை­யில் சேமிக்க முடி­ய­வில்லை என்­றா­லும் மனம் இருந்­தால் மார்­க்கம் உண்டு என்­பது போல, முயற்சி செய்­தால் அதி­க­மாக சேமிக்­க­லாம். அதற்­கான வழி­கள்:
பாதி வரு­மான சவால்
உங்­க­ளால் பாதி வரு­மா­னத்தை வைத்து வாழ முடிந்­தால் எப்­படி இருக்­கும்? அப்­போது பாதி வரு­மா­னத்தை சேமிக்க முடி­யும் அல்­லவா? பாதி வரு­மா­னத்­தில் வாழ்­வது இய­லாத காரி­யம் என தோன்­றி­னா­லும், இதை ஒரு சவா­லாக எடுத்­துக்­கொண்டு முயற்­சிக்­க­லாம். முழு­வ­து­மாக நிறை­வேற்ற முடி­யா­மல் போனா­லும் கூட, இலக்கை நெருங்­கி­னா­லும் கூட வெற்றி தான்.
தேவை திட்­ட­மி­டல்
பாதி வரு­மா­னத்­தில் வாழ்­வ­தற்கு மன உறு­தி­யும், திட்­ட­மி­ட­லும் தேவை. இந்த திட்­ட­மி­டலை செலவு கணக்­கில் இருந்து துவக்க வேண்­டும். டயட் கட்­டுப்­பாட்­டிற்கு தயா­ரா­வது போல, செல­வு ­களை குறைப்­ப­தற்­கும் முறை­யாக தயா­ராக வேண்­டும். இதற்கு, மாதாந்­திர செல­வு­களை முத­லில் கண்­கா­ணிக்க வேண்­டும். ஒரு மாதம் எல்லா செல­வு­க­ளை­யும் குறித்து வைக்க வேண்­டும்.
செலவு கட்­டுப்­பாடு
ஒரு மாதம் செல­வு­களை கண்­கா­ணித்த பின், எந்த செல­வு­கள் எல்­லாம் அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை மற்­றும் எவை எல்­லாம் தேவை இல்­லாத செல­வு­கள் என்று புரிந்­தி­ருக்­கும். இப்­போது, அத்­தி­யா­வ­சிய செல­வு­களை மேற்­கொண்டு, தேவை இல்­லாத செல­வு­களை கட்­டுப்­ப­டுத்த வேண்­டும்.
சேமிப்பு ஏற்­பாடு
செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­திய பிறகு, வரு­மா­னத்­தில் மிஞ்­சும் தொகையை சேமிப்­பாக மாற்ற வேண்­டும். மாதம் எவ்­வ­ளவு தொகையை மிச்­சம் செய்ய முடி­யும் என்ற புரி­த­லின் அடிப்­ப­டை­யில், அந்த தொகை, தானாக வங்கி கணக்­கில் இருந்து சேமிக்­கப்­பட வழி செய்ய வேண்­டும். முத­லில் சேமிப்பு கணக்­கிற்கு தான் பணம் செல்ல வேண்­டும்.

குடும்­பத்­தி­னர் பங்கு
பாதி வரு­மா­னத்தை சேமிக்க முய­லும் போது, பல்­வேறு தடை­கள் ஏற்­ப­ட­லாம். வாழ்­வி­யல் சார்ந்த செல­வு­களை உறு­தி­யு­டன் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும். பல செல­வு­க­ளுக்கு குறைந்த செல­வி­லான தர­மான மாற்று வழி­களை நாட­லாம். குடும்ப உறுப்­பி­னர்­க­ளை­யும் இதில் அங்­க­மாக்கி பங்­கேற்க செய்ய வேண்­டும்.
===============================================
கமாடிட்டி சந்தை
கச்சா எண்ணெய்
ஜூன் மாத உயர்­வுக்கு பிறகு, கச்சா எண்­ணெய் விலை, இம்­மாத ஆரம்­பம் முதல் சரிய துவங்­கி­யது. ஈரான் நாட்­டின் மீது, அமெ­ரிக்கா பொரு­ளா­தார தடை விதித்து, எண்­ணெய் ஏற்­று­ம­தியை முடக்­கி­யது.மேலும், லிபியா, வெனிசுலா நாடு­க­ளின் எண்­ணெய் உற்­பத்தி பாதிக்­கப்­பட்­ட­தா­லும், ஜூன் மாதத்­தின் கடைசி வாரங்­களில், விலை கிடு கிடு என உயர்ந்து, நான்கு ஆண்டு உச்­சத்தை அடைந்­தது. அதா­வது, ஒரு பேரல் கச்சா எண்­ணெய், 74.46 டாலர் வரை எட்­டி­யது.ஆனால், தற்­போது ஒபெக் உறுப்பு நாடான லிபியா, தன் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள துறை­மு­கம் மூல­மாக, முடங்­கி­யி­ருந்த ஏற்­று­ம­தியை துவங்­கி­யது.மேலும், அமெ­ரிக்க நாட்­டின், செக்­ரட்­டரி ஆப் வாஷிங்­டன் பேசு­கை­யில், ஈரான் நாட்­டி­லி­ருந்து எண்­ணெய் இறக்­கு­மதி செய்­யும் நாடு­க­ளுக்கு இறக்­கு­மதி செய்து கொள்ள அனு­ம­திப்­பது குறித்து ஆலோ­சித்து வரு­வ­தாக தெரி­வித்­தார்.மேலும், அமெ­ரிக்கா மற்­றும் சீனா இடை­யே­யான வர்த்­தக மோதல் கார­ண­மாக, இரு நாடு­களும் இறக்­கு­மதி பொருட்­க­ளுக்கு வரியை உயர்த்தி வரு­கின்­றன. இத­னால் ஏற்­பட்ட அசா­தா­ர­ண­மான சூழல் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால், கடந்த இரு வாரங்­க­ளாக எண்­ணெய் விலை சரிந்து வரு­கிறது.இந்­தி­யா­வின் பெட்­ரோ­லிய பொருட்­க­ளின் ஏற்­று­மதி அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த ஜூன் மாதத்­தில் எரி­பொ­ருள் தேவை, 8.7 சத­வீ­தம் உயர்ந்து, 17.99 மில்­லி­யன் டன்­க­ளாக உள்­ளது. இதில் பெட்­ரோல் தேவை மட்­டும், 14.9 சத­வீ­தம் அதி­க­ரித்து, 2.38 மில்­லி­யன் டன் ஆகி­யுள்­ளது.இவ்­வாறு பெருகி வரும் தேவை மற்­றும் அதி­க­ரித்துவரும் கச்சா எண்­ணெய் விலை, மதிப்பு சரிந்து வரும் ரூபாய் போன்ற கார­ணங்­க­ளால், நம் நாட்­டின் வணி­கப் பற்­றாக்­குறை, ஜூன் மாதத்­தில், ஐந்து ஆண்டு உச்­சத்தை எட்டி, கவலை தந்­துள்­ளது.

வெள்ளி
சர்­வ­தேச சந்­தை­யில், இந்த ஆண்டு துவக்­கம் முதல், தங்­கம், வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, தொடர்ந்து நான்­கா­வது மாத­மாக சரி­வில் இருந்து வரு­கிறது.அமெ­ரிக்க ரிசர்வ் வங்­கி­யின் வட்டி விகி­தம் அதி­க­ரிப்­பும், இவ்­வாண்­டில் மீண்­டும் இரு முறை வட்டி விகி­தம் உயர்த்­தப்­படும் என்ற அறி­விப்­பும், சந்­தை­யில் அமெ­ரிக்க நாணய குறி­யீடு மதிப்பு உயர வழி­வ­குத்­தது. இத­னால், அனைத்து கமா­டிட்டி விலை­களும் சரிய ஆரம்­பித்­தன.மேலும், வட்டி விகித உயர்வு கார­ண­மாக, அரசு கரு­வூல பத்­தி­ரங்­களில் நீண்ட கால பத்­தி­ரங்­க­ளின் ஆதா­யம் உயர்ந்­தது.இத­னால், முத­லீட்­டா­ளர்­கள் தங்­கம் முத­லீட்டை குறைத்து, அரசு கரு­வூ­லங்­களில் முத­லீடு செய்­த­தால், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை குறைந்­தது. ஆப­ரண சந்­தை­யில், இரண்­டா­வது மிகப்­பெ­ரிய இறக்­கு­மதி நாடான இந்­தி­யா­வின் தங்­கம் இறக்­கு­மதி, இந்த ஆண்­டில் கடு­மை­யாக சரிந்­துள்­ள­தும் ஒரு கார­ண­மா­கும்.இருப்­பி­னும், டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, வர­லாறு காணாத அள­வுக்கு சரிந்­த­தால், உள்­நாட்­டில் சர்­வ­தேச சந்­தையை ஒப்­பி­டும்­போது, குறை­வா­கவே விலை சரிந்­துள்­ளது.கடந்த நான்கு மாதங்­களில், சர்­வ­தேச சந்­தை­யில், 9.5 சத­வீ­தம் சரிவு ஏற்­பட்­டது. இருப்­பி­னும், எம்.சி.எக்ஸ்., பொருள் வணிக சந்­தை­யில், 5 சத­வீ­தம் அள­வுக்கே சரிவு ஏற்­பட்­டது.தங்­கத்­தின் விலையை பொறுத்­த­வரை, ஒரு அவுன்ஸ் அதா­வது, 31.104 கிராம் விலை, 1,230 டாலர் என்­பது நல்ல சப்­போர்ட் ஆகும். இதை கடக்­கும் நிலை­யில் சரிவு தொட­ரும்.

செம்பு
செம்பு விலை, கடந்த வாரம் சரி­வில் முடி­வ­டைந்­தது. அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இண்­டெக்ஸ் உயர்வு மற்­றும் வர­வி­ருக்­கும் அமெ­ரிக்க வங்­கி­யின் வட்டி விகி­தம் குறித்த கூட்­டத்­தில், வட்­டி­வி­கி­தம் உயர்த்­தப்­ப­ட­லாம் என்ற கண்­ணோட்­டத்­தி­லும் செம்பு விலை சரி­வை சந்­தித்­தது.மேலும், 2017ம் ஆண்­டின் கடைசி காலாண்­டில், அதா­வது, அக்­டோ­பர் முதல் டிசம்­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில், லண்­டன் மெட்­டல் எக்­சேஞ்ச் செம்பு விலை, 1 டன், 7,200 டாலர் என்ற அள­வுக்கு உயர்ந்­தது.ஆனால், இந்த விலை உயர்வு நிலைக்­க­வில்லை. 2018ம் ஆண்­டின் முதல் காலாண்­டில், ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லான மூன்று மாதங்­க­ளுமே சரி­வில் வர்த்­த­கம் ஆனது. தற்­போது, லண்­டன் மெட்­டல் எக்­சேஞ்­சில், செம்பு, 1 டன், 6,832 டாலர் என்ற நிலை­யில் வர்த்­த­க­மா­கிறது.
பங்குச் சந்தை
முருகேஷ் குமார்
தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான நிப்டி, கடந்த வாரம், 270 புள்­ளி­கள் உயர்ந்து, 11,076 புள்­ளி­களை எட்­டி­யது. கடந்த ஆறு வார காலத்­தில் சீரான போக்­குக்கு பிறகு, சந்­தை­யில் பங்­கு­க­ளின் விலை கடந்த வாரம் உயர்ந்­தது.இருப்­பி­னும், ரியல் எஸ்­டேட், பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், மூல­தன பொருட்­கள் மற்­றும் சில துறை பங்­கு­களில் சரி­வில் வர்த்­த­கம் நடை­பெற்­றது.நிப்டி இண்­டெக்­ஸில் உள்ள, 50 பங்­கு­களில், 5 பங்­கு­கள் கடந்த வாரத்­தில் வர­லாற்று உச்­சத்தை எட்­டின. மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், சென்­செக்ஸ் 30ல், ரிலை­யன்ஸ் மற்­றும் இன்­போ­சிஸ் பங்­கு­கள் விலை உயர்ந்து வர்த்­த­க­மா­கின.டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு சரிவு கார­ண­மாக, தொழில்­நுட்ப துறை சார்ந்த பங்­கு­கள் வரு­மா­னம் அதி­க­ரிக்­கும் என்ற கண்­ணோட்­டத்­தில், பங்­கு­கள் விலை உயர்ந்து காணப்­பட்­டன.கடந்த வாரங்­களில் ஏற்­பட்ட கச்சா எண்­ணெய் விலை சரிவு, பங்கு சந்­தை­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­தது. அமெ­ரிக்கா -– சீனா இடை­யே­யான வர்த்­தக மோத­லில், ஒரு சுமுக உடன்­ப­டிக்கை ஏற்­ப­ட­லாம் என்ற கருத்து நில­வி­யது.மேலும், வெளி­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­கள் மற்­றும் உள்­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­க­ளின் கொள்­மு­தல், கடந்த புதன்­கி­ழமை அன்று அதி­க­ரித்­தது. இதன் கார­ண­மா­க­வும், தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, நிப்டி, உயர்ந்து வர்த்­த­க­மா­கி­யது.கடந்த புதன் அன்று, அன்­னிய முத­லீட்டு நிறு­வ­னங்­கள், 636.27 கோடி ரூபாய்க்­கும், உள்­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­கள், 15.33 கோடி ரூபாய்க்­கும் நேரடி கொள்­மு­தல் செய்­தது குறிப்­பி­டத்­தக்­கது.மேலும், தென்­மேற்கு பரு­வ­மழை இது­வரை சரா­ச­ரிக்கு மேல் பெய்­த­தா­லும், வரும் காலாண்­டில் நிறு­வ­னங்­க­ளின் ஆதா­யம் அதி­க­ரிக்­கும் என்ற எதிர்­பார்ப்­பி­லும் சந்தை வலுப்­பெற்­றது.இந்த வாரத்தை பொறுத்­த­வரை, நிப்டி, முதல் ரெசிஸ்­டென்ட், 11,170 மற்­றும், 11,300 ஆகும். சப்­போர்ட், 10,905 ஆகும்.
அதி­க­ரித்து வரும் அச்ச உணர்வு
சந்­தை­யின் குறி­யீ­டு­க­ளான சென்­செக்ஸ் மற்­றும் நிப்டி, தொடர்ந்து உச்­சம் ­தொ­டும் இந்த வேளை­யில், சந்­தை­யில் உற்­சா­கம் அதி­கம் தென்­ப­ட­வில்லை. மாறாக, பெரு­வா­ரி­யான முத­லீட்­டா­ளர்­க­ளின் முத­லீ­டு­கள், தொடர்­ வீழ்ச்­சியை சந்­திக்­கும் சூழலே நில­வு­கிறது.சந்தை உச்­சத்தை தொட்­டால் ஏற்­படும் உற்­சா­கமோ, குதுா­க­லமோ துளி­யும் இல்லை. சந்தை குறி­யீ­டு­கள் உயர்ந்­தும், தங்­கள் கையி­ருப்­பில் உள்ள முத­லீ­டு­கள் சரி­வர வர்த்­த­க­மா­காத நிலை­மை­ தான் பல­ருக்­கும்.அவற்­றில் பல தொடர் வீழ்ச்­சியை காணும் இந்த நேரத்­தில், கவ­லைக் குறி­கள் மெல்ல வெளியே தெரிய ஆரம்­பித்து உள்­ளன. முத­லீட்­டா­ளர்­க­ளின் மன­தில் சோர்­வும், கவ­லை­யும் மட்­டுமே ஓங்கி நிற்­கிறது.இந்த ஆண்டு செய்­யப்­பட்ட முத­லீ­டு­கள் எது­வும், அடக்க விலை­யை­விட அதி­க­மாக இல்லை என்ற நிலை­மையை, பல முத­லீட்­டா­ளர்­கள் இப்­போது எதிர்­கொள்­கி­ன்றனர்.இனி அடுத்து என்ன செய்­ய­வேண்­டும் என்­ப­த­றி­யாது பல­ரும் ஒரு­வித தவிப்­பில் இருப்­பது தெரி­கிறது. பரஸ்­பர நிதி திட்­டங்­களில் முத­லீடு செய்­த­வர்­கள், முத­லீ­டு­கள் விரை­வில் மீண்டு எழும் என்ற நம்­பிக்­கை­யில் காத்­தி­ருக்­கின்­ற­னர்.நாள­டை­வில் இந்த நம்­பிக்கை எப்­படி மாறும் என்­பதை சந்தை தொடர்ந்து கூர்ந்து கவ­னித்து வரு­கிறது.எஸ்.ஐ.பி., சார்ந்த பண­வ­ரத்து குறை­யும் சூழ்­நிலை ஏற்­ப­டாது என்ற நம்­பிக்­கை­யும் குறைந்து வரு­கிறது. சந்­தைக்கு வரும் ரொக்க பண­வ­ரத்­தும் குறை­யத் துவங்கி உள்­ளது. இனி தொடர்ந்து பண­வ­ரத்து குறை­யும் சூழலே தெரி­கிறது.இந்த சூழ்­நி­லை­யில், உய­ரும் பண­வீக்­கம், கச்சா விலை, ஏறும் டாலர் மதிப்பு ஆகி­யவை, சந்­தை­யின் அச்ச உணர்வை மேலும் அதி­க­ரிக்­கும் வண்­ணம் அமைந்து வரு­கின்­றன.ஆனால், அச்ச உணர்­வு­கள் வெளிப்­ப­டை­யாக, முழு­வ­து­மாக தெரி­யா­விட்­டா­லும், சந்­தையை நன்கு அறிந்த வட்­டா­ரங்­கள் கவ­லைப்­பட துவங்­கி­விட்­டன. இதே நிலைமை தொடர்ந்­தாலே, சந்­தை­யில் பெரும்­தாக்­கம் ஏற்­படும் என்ற கள நிலைமை அவர்­களை பாதிக்­கிறது.ஆனா­லும், உறு­தி­யான ஒரு நிலைப்­பாட்டை எடுக்க எவ­ரும் தயா­ராக இல்லை. எப்­ப­டி­யா­வது சரிந்த பங்­கு­கள் மீண்­டும் உயிர்த்­தெ­ழும் என்ற நம்­பிக்­கை­யில் பெரு­வா­ரி­யான வர்த்­த­கர்­களும், முத­லீட்­டா­ளர்­களும் காத்­தி­ருக்­கின்­ற­னர்.இந்த சூழ­லில், நடப்பு நிதி­யாண்­டின் முதல் காலாண்டு கணக்­கு­கள் அறி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஆகஸ்ட் 15 வரை இந்த அறி­விப்­பு­கள் வந்­த­ வண்­ணம் இருக்­கும்.நிறு­வ­னங்­கள், சந்­தை­யின் எதிர்­பார்ப்பை விஞ்­சும் வகை­யில் வளர்ச்சி கண்­டால் மட்­டுமே, அவை விலை சரிவை தவிர்க்க முடி­யும். மாறாக, சந்­தை­யின் எதிர்­பார்ப்­பை­விட குறைந்த வளர்ச்சி அமைந்­தால், அந்த நிறு­வன பங்­கு­கள், விலை சரிவை சந்­திக்­கும் என்­ப­தில் சிறி­தும் சந்­தே­க­மில்லை.ஆகவே, நில­வும் சூழ­லில், அச்­ச­மும் பட­ப­டப்­பும் இருப்­பதை யாரும் மறுக்க மாட்­டார்­கள். இனி வரும் வாரங்­களில் ஏற்­படும் பண­வ­ரத்து மாற்­றங்­கள், லாப வளர்ச்சி மற்­றும் பொரு­ளா­தார குறி­யீ­டு­கள், சந்­தை­யின் வருங்­கால வளர்ச்­சியை பெரி­தும் பாதிக்­கும்.சந்­தை­யில் தென்­படும் முத­லீட்டு தயக்­கம், இதை உணர்ந்­த­தன் வெளிப்­பாடே ஆகும்.வரும் வாரங்­கள், இந்த நிதி­யாண்­டின் சந்தை வளர்ச்­சியை தீர்­மா­னிக்­கும் வகை­யில் அமை­யும். வள­ரும் சூழல் சார்ந்து முத­லீட்டு தேர்­வு­கள் அமை­யா­ததே, சந்­தை­யில் முத­லீட்­டா­ளர்­க­ளின் சங்­க­டங்­க­ளுக்கு முக்­கிய கார­ணம்.வருங்­கால சூழ­லுக்கு ஏற்ப, முத­லீ­டு­களை அமைத்­துக் கொள்ள, முத­லீட்­டா­ளர்­கள் இப்­போ­தா­வது முயற்­சிக்க வேண்­டும். சந்தை சந்­திக்­கப் போகும் சவால்­களை மன­தில் கொண்டு, முத­லீட்டு வேகத்தை மாற்­றிக் கொள்­ள­வேண்­டும்.இதை காலத்­தோடு செய்­தால் மட்­டுமே, மேலும் நஷ்­டம் அடை­வதை தவிர்க்க முடி­யும்.

ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
நிதி பற்றாக்குறையில் மாநிலங்கள்!
இந்­திய பொரு­ளா­தா­ரம், பிரான்சை முந்­தி, சர்­வ­தேச அள­வில் ஆறா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது என்­பது தேன்­செய்தி. அதே­ச­ம­யம், இந்­தி­யா­வுக்­குள் இருக்­கும் பல்­வேறு மாநி­லங்­க­ளின் நிதி பற்­றாக்­குறை அளவு, தொடர்ச்­சி­யாக மூன்­றா­வது ஆண்­டும் உயர்ந்­துள்­ளது கவலை அளிக்­கிறது. இதற்கு என்ன கார­ணம்?மத்­திய ரிசர்வ் வங்கி சமீ­பத்­தில் ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது. மாநி­லங்­க­ளின் நிதி நிலை­மை பற்­றிய அறிக்கை அது. அதில், மாநில அர­சு­க­ளின் நிதிப் பற்­றாக்­குறை, 3.1 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.பொது­வாக, மத்­திய, மாநி­லங்­க­ளின் நிதிப் பற்­றாக்­குறை, 3 சத­வீ­தத்­துக்கு மேல் போகக் கூடாது என்­பது லட்­சு­மண ரேகை. அதை மீறிப் போனால், நிதி நிர்­வா­கத்­தில் ஏதோ கோளாறு என்று அர்த்­தம்.சென்ற ஆண்டு, பல்­வேறு மாநி­லங்­கள் வழங்­கிய பட்­ஜெட்­டு­களில் தங்­க­ளது நிதிப் பற்­றாக்­குறை, 2.7 சத­வீ­தம் தான் இருக்­கும் என்று கணித்­தி­ருந்­தன. ஆனால், 2017 --– 18 செல­வி­னங்­க­ளைப் பார்க்­கும்­போது, இந்­தக் கணிப்பு பொய்த்­துப் போய்­விட்­டது.இந்­தக் கணக்­கில் ஒரு சின்ன அல்ப திருப்தி இருப்­பதை மறுப்­ப­தற்­கில்லை. உதய் திட்­டத்­தில், தமி­ழ­கம் உட்பட பல மாநி­லங்­கள் இணைந்­துள்­ள­தால், மின் பகிர்­மா­னக் கழ­கத்­தின் கடன் தொகை, மாநில செல­வி­னங்­களில் சேராது.அப்­ப­டிப் பார்க்­கும்­போது, மாநி­லங்­களில் உண்­மை­யான நிதிப் பற்­றாக்­குறை, 3.1 சத­வீ­தம் அல்ல; அது, 2.7 சத­வீ­தம் தான் என்று கொஞ்­சம் தெம்­பா­கச் சொல்­ல­லாம்.ஆனால், ஆர்.பி.ஐ., உதய் திட்ட கட­னை­யும் கணக்­கில் எடுத்­துக்­கொண்டே கணக்கிட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­கிறது. ஏன் இந்த மீறல்?அத­னால்­ தான், 3.1 சத­வீத நிதிப் பற்­றாக்­குறை முன்­வைக்­கப்­ப­டு­கிறது. 3 சத­வீ­தத்­துக்­குள் ஏன் மாநி­லங்­கள் தங்­கள் நிதிப் பற்­றாக்­கு­றை­யைக் கட்­டுப்ப­டுத்த முடி­ய­வில்லை?சென்ற ஆண்டு தான், ஜி.எஸ்.டி., அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மத்­திய அர­சில் இருந்து, மாநில அர­சு­க­ளுக்கு வந்து சேர­வேண்­டிய உரிய தொகை நிலு­வை­யில் இருப்­ப­தால், வர­வு­களை முழு­மை­யாக காண்­பிக்க முடி­ய­வில்லை.மேலும், மாநில அர­சு­களுக்கு இழப்­பு­கள் ஏதே­னும் இருக்­கு­மா­னால், முதல் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு மத்­திய அரசு அதை ஈடு செய்­யும் என்று ஏற்­க­னவே உறுதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால், திரட்­டப்­படும், ஜி.எஸ்.டி., வரு­வா­யில் உரிய பங்கு வரு­வது உறுதி. ஆனால், அது எப்­போது வரும் என்­ப­து­தான் சிக்­கல்.இன்­னொரு முக்­கி­ய­மான கார­ணம், ஆந்­திர பிர­தே­சம், தெலுங்­கானா, மஹா­ராஷ்­டிரா, பஞ்­சாப், உத்­த­ரபிர­தே­சம், ராஜஸ்­தான், கர்­நா­ட­கம் உட்­பட பல மாநி­லங்­கள் விவ­சா­யக் கடன்­க­ளைத் தள்­ளு­படி செய்­து­விட முடி­வெ­டுத்­துள்­ளன. இத­னால், மாநில நிதி நிலைமை திண­று­கின்­றன.மூன்­றா­வது கார­ணம், ஏழா­வது ஊதி­யக் குழு­வின் பரிந்­து­ரை­களை, பல மாநி­லங்­கள் அமல்­ப­டுத்தி வரு­கின்­றன. இத­னா­லும், அவர்­க­ளின் நிதி நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இருக்­கின்­றன.பல மாநி­லங்­களில் போதிய வரி­ வ­ரு­வாய் இல்லை. செல­வி­னங்­களோ அதி­கம் எனும்­போது, நிதிப் பற்­றாக்­குறை ஏற்­ப­டவே செய்­யும்.பாதிப்­பு­கள் என்ன?நிதிப் பற்­றாக்­குறை ஏற்­ப­டும்­போது, பல மாநில அர­சு­கள் கடன் பத்­தி­ரங்­களை வெளி­யி­டும். வங்­கி­களும், காப்­பீட்டு நிறு­வ­னங்­களும், பரஸ்­பர சகாய நிதி நிறு­வ­னங்­களும், அர­சுத் துறை கடன் பத்­தி­ரங்­களை வாங்­கவே முன்­னு­ரிமை கொடுக்­கும்.இத­னால், தனி­யார் பெரு­நி­று­வ­னங்­கள் கடன் பெறு­வ­தற்கு கூடு­தல் வட்டி கொடுக்க வேண்டி இருக்­கும். அதைக் கொண்டே அவை தம் தொழி­ல­கங்­களை மேம்­ப­டுத்­து­கின்­றன என்­ப­தால், அங்கே பெரிய இடர் ஏற்­படும். தேக்­கம் ஏற்­படும். வளர்ச்­சி­யில் தொய்வு ஏற்­படும்.செல­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்தி, திற­மை­யான நிதி நிர்­வா­கத்­தைக் காண்­பித்­தால் தான், பல தனி­யார் முத­லீட்­டா­ளர்­கள் மாநில அர­சு­க­ளின் கடன் பத்­தி­ரங்­களை வாங்க முன்­வ­ரு­வர். இன்­றைக்கு இருக்­கும் நிலை­யில் பல மாநில அர­சு­க­ளுக்கு, எங்கே தங்­கள் செல­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்தி, நெறிப்­ப­டுத்த வேண்­டும் என்றே தெரி­ய­வில்லை. கடை­சி­யில் அவை கை வைப்­பது, வளர்ச்­சிப் பணி­க­ளுக்கு ஒதுக்­கப்­படும் நிதி­யி­லே தான்.பல மாநி­லங்­களில் செய்­யப்­பட வேண்டி வளர்ச்­சிப் பணி­கள் இத­னால் சுணங்­கிப் போவது நிச்­ச­யம்.இந்­தப் பின்­ன­ணி­யில் இருந்து பார்க்­கும்­போது, மாநில அர­சு­க­ளுக்கு வரி வரு­வாய் ஈட்­டித்­த­ரு­வது மது விற்­ப­னை­யும், மனை விற்­ப­னை­யும், பெட்­ரோல் டீசல் வரி­களும் தான். மாநில நிதிப் பற்­றாக்­கு­றை­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் இல்லை எனும்­போது, பெட்­ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரம்­புக்­குள் கொண்­டு­வர, நிச்­ச­யம் மாநில அர­சு­கள் ஒப்­புக்­கொள்­ளப் போவ­தில்லை.அதே­போல், மது­ வ­கை­கள்மீது விதிக்­கப்­படும் வரிகள் மேன்­மே­லும் உய­ரவே போகின்­றன. டாஸ்­மாக் கடை­களை மூடு­வ­தற்­கான வாய்ப்­பு­கள், கண்­ணுக்­கெட்­டிய தொலைவு வரை தெரி­ய­வில்லை என்ற கசப்­பான உண்­மையை ஒப்­புக்கொள்­ளத்­தான் வேண்­டும்.அடுத்த இரு இடி­கள்அடுத்த ஓராண்­டுக்­குள் பல மாநி­லங்­களில் சட்­டசபை தேர்­தல் வரப் போகின்­றன. லோக்சபா தேர்­த­லும் வரப் போகிறது. இந்­நி­லை­யில், பல மாநி­லங்­கள் ஏரா­ள­மான சலு­கை­களை ஏழை எளிய மக்­க­ளுக்கு வழங்கி, ஓட்டு­களை அறு­வடை செய்­யவே விரும்­பும்.இதன் விளை­வாக, மாநில நிதி நிலை­மை­கள் தள்­ளாட்­டம் காணப் போவது உறுதி. ஆர்.பி.ஐ., அறிக்கை இந்­தக் கவ­லையை அடிக்­கோ­டிட்டே காண்­பித்­தி­ருக்­கிறது.இன்­னொரு பிரச்­னை­யும் இருக்­கிறது. 2008 பொரு­ளா­தா­ரத் தேக்­கத்­தின்­போது பல மாநில அர­சு­கள், 10 ஆண்டு கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்­டன. இந்த ஆண்­டின் முடி­வில் அவை முதிர்­வு­ பெ­றப் போகின்­றன. பணத்­தைத் திருப்­பித் தர­வேண்­டும். அது, மாநில அர­சின்நிதி நிலைமை மீது கடும் அழுத்­தத்தை ஏற்­றப் போவது உறுதி.தீர்வு என்ன?செம்­மை­யான நிதி நிர்­வா­கம்ஒன்­று­ தான் ஒரே வழி. வர­வு­களை உயர்த்த எந்த வழி­யும் இல்லை. செல­வு­களை பல மடங்கு கட்­டுப்­ப­டுத்த ஏரா­ள­மான வழி­கள் உள்­ளன.இடுப்­புப் பட்­டியை இறுக்­கக்கட்­டி செயல்­பட்­டால், மாநிலங்­கள் பிழைக்க முடி­யும். தேர்­தல் லாபத்தை மனத்­தில் கொண்டு, செல­வு­களை கன்­னா­பின்­னா­வென்று செய்­தால், ஆட்­சி­யா­ளர்­கள் வேண்­டு­மா­னால் மீண்­டும் அர­சுக் கட்­டி­லில் ஏற­லாம். ஆனால், மக்­கள் ஓட்­டாண்­டி­க­ளா­வது நிச்­ச­யம்.இதை எந்த மாநில மக்­களும் விரும்­ப­மாட்­டார்­கள் என்­பதை,ஆட்­சி­யா­ளர்­கள் உண­ர­வேண்­டும்.ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)