பதிவு செய்த நாள்
20 ஜூலை2018
23:36

குன்னுார் : லாரி, ‘ஸ்டிரைக்’ காரணமாக, குன்னுாரில் உள்ள குடோன்களில், 5 லட்சம் கிலோ தேயிலைத் துாள் தேக்கமடைந்து உள்ளது.
நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேயிலை தொழிலை நம்பி, 65 ஆயிரம் விவசாயிகள், பல்லாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் துாள், குன்னுார் ஏல மையங்களில், வாரந்தோறும் ஏலம் விடப்படுகிறது.
வாரத்தில் புதன் முதல் வெள்ளி வரை, மூன்று நாட்கள் நடக்கும் ஏலத்தில் விடப்படும் தேயிலைத் துாள், குன்னுார் மட்டுமின்றி, மேட்டுப்பாளையத்தில் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடந்து வருவதால், குன்னுாரில் இருந்து தேயிலைத் துாள், சரக்கு லாரிகளில் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குன்னுார் பெல்மவுன்ட் பகுதியில் உள்ள குடோன் மேற்பார்வையாளர், சிவாநந்தன் கூறுகையில், ‘‘குன்னுாரில் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டுள்ள தேயிலைத் துாள், நாள்தோறும், 40 லாரிகளில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ‘‘சராசரியாக, நாள்தோறும், 4 லட்சம் முதல், 5 லட்சம் கிலோ தேயிலைத் துாள் அனுப்பப்படுகிறது. லாரி ஸ்டிரைக்கால், இன்று (நேற்று) ஒரு நாள் மட்டும், 5 லட்சம் கிலோ தேக்கமடைந்து உள்ளது. ‘‘இந்த ஸ்டிரைக் நீடிக்கும் பட்சத்தில், பசுந்தேயிலை விவசாயிகள் பாதிப்படைவர்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|