‘வெர்மிகுலைட்’ கனிம  தொழிற்சாலை திறப்பு ‘வெர்மிகுலைட்’ கனிம தொழிற்சாலை திறப்பு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 73.74 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 73.74 ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
புத்துயிர் பெறுகிறது ரியல் எஸ்டேட் :வீடு விற்பனை 6 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
00:12

புதுடில்லி:கடந்த, மூன்று மாதங்களில், ஒன்பது முக்கிய நகரங்களில், வீடு விற்பனை, 6 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.


இது குறித்து, ‘பிராப் ஈக்யுட்டி’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:ரியல் எஸ்டேட் துறை, மந்த நிலையில் இருந்து மீண்டு, ஓராண்டாக வளர்ச்சியை நோக்கி பயணிக்கத் துவங்கி உள்ளது. இதற்கு, பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் மறைந்ததும், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம், ஜி.எஸ்.டி, போன்ற மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களும் தான், காரணம். தேங்கிக் கிடந்த வீடுகள்,விற்பனையாகி வருகின்றன.


மந்தமாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகளும், விறுவிறுப்பு அடைந்துள்ளன.இதனால், சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கோல்கட்டா, புனே, தானே, குருகிராம், நொய்டா ஆகிய ஒன்பதுநகரங்களில், வீடு விற்பனை அதிகரித்துள்ளது.சென்னைஇந்நகரங்களில், ஜூலை – செப்., வரை, 51 ஆயிரத்து, 142 வீடுகள் விற்பனையாகி உள்ளன.இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட, 6 சதவீதம் அதிகமாகும்.


இதே காலத்தில், புதிய வீடுகள் அறிமுகம், 12 சதவீதம் அதிகரித்து, 32 ஆயிரத்து, 870 ஆக உயர்ந்துள்ளது.தேக்கம் கண்ட வீடுகள் எண்ணிக்கை, 8 சதவீதம் சரிந்து, 6,17,456 ஆக குறைந்து உள்ளது.பெங்களூரில், வீடு விற்பனை, 14 சதவீதம் உயர்ந்து, 8,916 ஆக அதிகரித்துள்ளது. மும்பை மற்றும் புனே நகரங்கள், முறையே, 20 மற்றும் 17 சதவீத வளர்ச்சியுடன், 5,736 மற்றும் 11 ஆயிரத்து, 720 வீடுகளை விற்பனை செய்துள்ளன.


சென்னையில் வீடு விற்பனை, 70 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,966 ஆக உயர்ந்துள்ளது. கோல்கட்டாவில், வீடு விற்பனை, 1 சதவீதம் உயர்ந்து, 3,058 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், ஐதராபாத், தானே நகரங்களில், விற்பனை முறையே, 24 மற்றும் 3 சதவீதம் சரிந்து, 3,624 மற்றும் 11 ஆயிரத்து, 210 ஆக குறைந்துள்ளது. நொய்டாவில் விற்பனை, 34 சதவீதம் உயர்ந்து, 920 ஆக அதிகரித்துள்ள நிலையில், குருகிராமில், 41 சதவீதம் சரிந்து, 1,992 ஆக குறைந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)