பதிவு செய்த நாள்
19 டிச2018
23:22
புதுடில்லி : கூகுள் இந்தியா நிறுவனம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, ‘மை பிசினஸ்’ என்ற புதிய, ‘ஆப்’பை அறிமுகப்படுத்தியுள்ளது.
மொபைல் போனில், கூகுள் பிளே ஸ்டோரில், இந்த ஆப்பை இலவசமாக பதிவிறக்கி, தொழில் தொடர்பான விபரங்களை அளிக்கலாம்.குறிப்பிட்ட தொழில் குறித்து, கூகுளின், ‘சர்ச்’ பகுதியில் தேடுவோருக்கு, அது தொடர்பான நிறுவனங்களின் விபரங்கள் கிடைக்க, ஆப்பில் வழி செய்யப்பட்டு உள்ளது. மேலும், தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் இடையிலான தொடர்புக்கும், வர்த்தக விபரங்களை பரிமாறிக் கொள்வதற்கும் உதவுகிறது.
தொழில் தொடர்பான படங்களை பதிவேற்றவும், உடனுக்குடன் வாடிக்கையாளரின் அழைப்புகளை அறியும் வசதியும் இந்த ஆப்பில் உள்ளது. புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தை பெறுவதற்கும், வர்த்தகம் தொடர்பாக, நுகர்வோர் தெரிவிக்கும் பின்னுாட்டத்தை அறியவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
‘‘தொழில் மேம்பாட்டிற்கும், உடனுக்குடன் வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், வாடிக்கையாளர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், புதிய ஆப் உதவும்,’’ என, கூகுள் இந்தியா நிறுவனத்தின், சந்தை தீர்வு பிரிவு இயக்குனர், ஷாலினி கிரிஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|